பூவேளி ஒரு அழகான கிராமம்,கிராமம் அப்படினு இருந்தாலே அங்க மதிப்புமிக்க பெரிய குடும்பம் இருக்கும்,பூவேளி கிராமத்தில் அக்கா குடும்பம் தங்கை குடும்பம்னு இரண்டு பெரிய குடும்பம்,இந்த இரண்டு பெரிய குடும்பங்களோட மூத்த பெண்களும் அக்கா தங்கை,இவங்க இரண்டு பேரும் பெரிய குடும்பத்துல இருக்க அண்ணன் தம்பிகளை கல்யாணம் பண்ணிக்கிறாங்க,காலப்போக்கில் அக்காவுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தது,அதேபோல தங்கைக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தது,அதன் பிறகு இரண்டு குடும்பங்களும் ஒரே வீட்டில் ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர்,,
காலம் அழகாக சென்றது,அக்கா வீட்டில் உள்ள ஆண் மகனான ஆனந்த்-ம் தங்கை வீட்டில் பெண் மகளான ஆர்த்தி-ம் இருவரும், முறை தெரியாமல் காதலிக்க ஆரம்பித்துவிட்டனர்,இதனை தெரிந்த இரண்டு குடும்பங்களும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் குடும்பப் பெயர் கெட்டு விடும் என்று இரவோடு இரவாக ஆனந்தை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டனர்,ஆனந்த் ,ஆர்த்தி தங்கை முறை என அந்த எட்டு வயதில் தெரியாமல் செய்த தவறு அவனை வேறு நாட்டிற்கு விரட்டினர்,அதன்பின் ஆர்த்தியை தங்கை குடும்பத்தினர்,டவுனில் படிக்க வைக்க அனுப்பினர்,ஆர்த்தி ஆனந்த்தை பற்றி எண்ணியவளாய் அவளது படிப்பை தொடங்கினாள்,ஆனந்த் ஆர்த்தியை நினைத்துக்கொண்டே வெளிநாட்டில் படித்தான்,இவர்களின் குடும்பங்கள் மேல் உள்ள கோபத்தால் இருவரும் கிராமத்திற்கு செல்லாமலே அவர்களது படிப்பை தொடர்ந்தனர்..
அவ்வாறு பதினாறு வருடங்கள் ஓடியது ஆனந்த் ஆர்த்தி -யின் வாழ்வில்...
அதன்பின் ஆனந்த் அறியாத வயதில் தங்கையை காதலித்து விட்டோம் என்று எண்ணி வருந்தினான்,அதேபோல் ஆர்த்தியும் அண்ணனை காதலித்து விட்டோம் என்று வருந்தினாள்,காலப் போக்கில் இருவரும் அந்த அறியாத வயது காதலை மறந்தனர்,அதன்பின் ஆனந்த் அவனது நண்பனின் அண்ணனுக்கு திருமணம் என்று அவனது நண்பன் ஆனந்தையும் அழைத்துச் சென்றான்,அதேபோல் ஆர்த்தியின் தோழியும்,அவளது அண்ணனுக்கு திருமணம் என்று ஆர்த்தியை அழைத்து சென்றாள்,,,
![](https://img.wattpad.com/cover/88383066-288-k535406.jpg)
YOU ARE READING
கனவே கலையாதே
Romanceகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...