காதல் கனவினை தோற்றுவிக்கும் ஒன்று,கவிதையை தோற்றுவிக்கும் ஒன்று,காதல் எளிதில் எவருக்கும் கிடைத்து விடும்,தான் நேசிக்கின்ற தன்னை நேசிக்கின்ற ஒரு காதலனை காதலியை தேடி கண்டு பிடிப்பது கடினம்....
பதினெட்டு வயதில் தோன்றும் அந்த காதல் உணர்வு கடைசி வரை நினைவில் இருக்கும் பொக்கிஷமாய்...கதையின் நாயகனின் முதல் காதல் உணர்வு,...
கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து கொண்டு இருக்கும் போது ,முதல் வருட மாணவியாக கல்லூரிக்கு வந்தவள் ,நாயகன் பாலா மனதில் நுழைந்தால்,காலரா வருவதை யூகிக்கும் நம்மால் காதல் வருவதை யூகிக்க முடியாது,காதல் அவனுள் ஆரம்பித்தது ,காதலிக்க ஆரம்பித்த பின் கல்லூரிக்கு முதல் ஆளாக வந்து விடுவான்,அவனது காதலி கையில் அந்த புத்தகத்தை ஏந்தி வரும் அழகை பார்க்க,மாலை கல்லூரி முடிந்த பின்பு அவள் வீட்டின் தெரு வரை அவள் பின்னே செல்வான்,கல்லூரி விடுமுறை நாட்களில் காதலியை பார்க்க வேண்டும் என்று நண்பர்கள் குழு என்று ஒரு டீ கடை ஆரம்பித்து ,வேலை இல்லாமல் திரிந்த இருவர்க்கு வேலை கொடுத்து காதலித்தான்..
ஆறு மாதம் சென்றது ,கல்லூரியில் விடுமுறை நாள் என்பதால் அவள் அவளது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தாள்,அவள் இல்லாத அந்த ஊரில் அவனால் இருக்க முடியவில்லை,டீ கடைக்கு விடுமுறை அளித்து விட்டு அவனது நண்பர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு அவளது உறவினர் வீடு உள்ள ஊரிற்கு சென்றான்,அது ஒரு அழகிய கிராமம்,எங்கிலும் பச்சை பசேலென்று மரக் கிளைகள்,செடிகள்,கொடிகள் அனைத்தும் பூத்துக் குலுங்கும்,அந்த அத்தனை அழகை விட ,அவனது காதலியை காண வேண்டும் என்று ஊர் முழுவதும் தேடினர்,அசதியில் அருகில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்தனர்,நண்பர்களிடம் அவளை காண முடியாதா என கூறி புலம்பிக் கொண்டிருந்தான்,சற்று மூவரும் உறங்கினர்,ஒரு பெண் சிரிக்கும் சத்தம் கேட்டது,பாலாவின் நண்பன் எங்கே இருந்து வருகிறது இந்த அழகான குரல் என்று ,பாலாவை எழுப்பி சென்று மூவரும் பார்த்தனர்,அந்த குரல் பாலா காதலிக்கின்ற பெண் ,அவளைக் கண்டு மகிழ்ச்சி அடையாமல் அதிர்ச்சியில் மூழ்கினர்,ஏனென்றால் அவள் வேறு ஒருவரிடம் பேசி கொண்டிருந்தாள்,அதைக் கண்டு ஆத்திரமடைந்த பாலா அவளோடு பேசியவனை அடி வெளுத்து வாங்கினான்,நிறுத்துடா நாய அவனை எதுக்கு அடிக்கிற ,நீ யாரு என கேட்டாள் அவள்,..என் காதலனை அடிக்க நீ யாருடா நாய என்று கேட்டாள்,அதைக் கேட்டு நெஞ்சடைத்தவனாய் கீழே விழுந்தான் பாலா,அவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஒரு நண்பன் செல்ல ,மற்றொருவன் அவளிடம் பாலா அவளைக் காதலித்தது,வீட்டின் அருகே டீ கடை வைத்தது என அனைத்தையும் கூறினான்,..அதைக் கேட்ட பின் அவள்,என்னை இவ்வளவு காதலித்திருக்கிறான் என்னிடம் முதலிலே சொல்லியிருந்தால் நான் வேறு ஒருவரை காதலிப்பதை சொல்லியிருப்பேன் என்றாள்,நான் இப்போதுதான் அவனை முதன் முறையாக பார்க்கிறேன் என்றாள்,உன் பின்னாடி ஆறு மாதமாக அலைந்துள்ளான் ,நீ அவனை பார்த்ததே இல்லை என்கிறாய் என அவன் கேட்டான்,தினமும் தெருவில் ஆயிரம் நாய்கள் என்னை போல பெண்கள் பின்னே திரிகின்றன அதையெல்லாம் நியாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்றாள்,செருப்பால் அடி வாங்கியது போல் இருந்தது நண்பனுக்கு ,கடைசியாக அவள் பெயர் என்ன என்று கேட்டான நண்பன் ,கண்ணகி என்று கூறினாள் அவள்,நல்லா இரு என சொல்லி விட்டு பாலாவிடம் வந்து அனைத்தையும் கூறினான் ,உயிர் செல்வதை விட மேலான வலியை அனுபவித்தான்,நாட்கள் சென்றது,அவளது நினைப்பு அவனுள்ளே அவனை தாக்கி சாகடித்ததால் ,ஊர் கல்லூரி அனைத்தையும் மாற்றிச் சென்றான்..இரண்டு வருடங்களுக்கு பின்,
அனைத்தும் அறிந்த ஒரு ஞானியிடம் நான் காதலிக்கலாமா என கேட்டான்,உனக்காக ஒருத்தி வரும் வரை காத்திரு என்றார் ஞானி,காத்திருந்தால் உன்னைப் போல சாமியாரத்தான் ஆகணும் ,நான் தேடப் போறேன் ,என்னோட காதலியை, என்று சொல்லி சென்றான் பாலா ....
அவன் சென்ற பின் அந்த ஞானி,த்ரிஷா போல் ஒரு பெண் சென்றதும் நயன்தாராவைத் தேடி செல்கிறான் என கூறிக்கொண்டு சிரித்தார்....
த்ரிஷா போனா நயன்தாரா...
தேடல் தொடரும்..
காதலிங்க அந்த காதலை உங்க காதலிக்கு அல்லது காதலனுக்கு தெரிகின்றது போல காதலிங்க...
அன்புடன்,
டேவிட்
BẠN ĐANG ĐỌC
கனவே கலையாதே
Lãng mạnகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...