கண் மூடிய பொழுதெல்லாம்-3

139 10 2
                                    

பிரியா எங்கே போய் இருப்பா ன்னு சிந்திச்சிட்டு இருந்த ஷாம்க்கு அவனுள்ளே ஆயிர எண்ண அலைகள் ஓடிக்கொண்டிருந்தது,ஒருபக்கம் பிரியாவை அந்த ராம் கடத்திருப்பானா???? அப்படி இல்லனா சுயநினைவு வந்து பிரியாவே ராமை தேடி போயிருப்பாளா???? அப்படியும் இல்லாம பிரியா பிலஸ்ஸினாவ காப்பாற்ற பிலஸ்ஸினா ஊருக்கு போயிருப்பாளா????
இப்படி பல சிந்தனைகளோடு வீட்டிலிருந்து வெளியே ஓடியவனை தேடி ஓடினான் ஷாம்,அவன் தேடி ஓடிய கலைப்பில் ஒரு டீ கடையில் ஷாம் தண்ணீர் வாங்கி குடித்தான்,திடீரென அவனை நோக்கி ஒரு கத்தி வருவதை பார்த்தான்,அதிஷ்டவசமாக ஷாம் அந்த கத்தியை தடுத்து,அந்த கத்தியை எறிந்தவனை பார்த்தான்,அவன் ராம் ,ராமை பார்த்த வேகத்திலேயே அவனை நோக்கி ஓடினான்,ஷாமை பார்த்து பதறாமல் நின்றான் ராம் ,ஓடி அவனருகில் வந்த ஷாமை அடித்து கீழே தள்ளினான் ராம்,ஷாமிடம் நான் உன் பிரியாவையும் பிலஸ்ஸினாவையும் கண்டிப்பா கொல்லுவேன்டா என்று கோபத்தோடு கூறி சென்றான்,உடனே எழுந்து ராமினை கல்லால் அவனது தலையில் அடித்து கீழே தள்ளினான் ஷாம்,ராமை ஷாமின் வீட்டிற்கு தூக்கிச் சென்றான்,ஒரு ஆறு மணி நேரத்திற்கு பின்பு ராம் கண் விழித்தான்,அவன் முன்னே ஷாம் நின்றான் அருகிலேயே பிலஸ்ஸினாவும் நின்றாள்,ஷாம் ராமிடம் ஏன்டா இப்படி கொலை வெறி பிடிச்சு மிருகத்தனமா இருக்க என்று கேட்டான்,பத்து ஆண்டு சிறை தண்டனை செய்யாத ஒரு தவறுக்காக நான் அனுபவித்தேன்,அதை ஈடுகட்டணும்ல அதான் இவளையும் பிரியாவையும் கொல்லனும்னு நினைச்சேன்,இவளுங்கள கொல்ல இடையூறா இருக்க உன்னையும் கொல்லனும்னு முயற்சி பண்ணேன்,ஆனா நீங்க தப்பிச்சிட்டீங்க,செட் ஆகாத ஒரு பொண்ண எப்படிடா காதலிக்க முடியும்,அதனாலதான் நான் பிலஸ்ஸினாவ விட்டுட்டு ஷோபனாவ லவ் பண்ணேன்,என்று கத்தினான் ராம், உடனே பிலஸ்ஸினா நீ என்னை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அதை விட அதிகமா கேவலமா என்னை வேற ஒருவனோட சேர்த்து வச்சு பேசி அசிங்கப்படுத்திட்டு இப்ப என்னடா நல்லவன் போல நடிக்கிற என்று கேட்டாள் பிலஸ்ஸினா,திடீரென ஷாம் வீட்டிற்கு அருகே போலீஸ் குவிந்தனர்,அதைக் கண்ட ராம் பதறினான்,பிரியா எங்கடா என்று ராமிடம் கேட்டுக்கொண்டிருந்தான் ஷாம்,அவளைத் தேடிதான் நான் வந்தேன்,எங்கடா அவள மறைச்சு வச்சிற்க்க என்று கத்தினான் ஷாம்,போலீஸ் ஷாம் வீட்டினை சுற்றி வளைத்தது,ராமை கட்டியிருந்ததால் அவனால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை,போலீஸ் வீட்டின் உள்ளே நுழைந்து ராமை கைது செய்தனர்,ராம் திரும்பவும் வர்வேன் கொலை பண்ணுவேன் என்று கத்திக் கொண்டே சென்றான்,ஷாம் அந்த இடத்திலேயே விழுந்தான் பிலஸ்ஸினா அவனை தாங்கினாள்,பிரியாவ இவன் கடத்துலனா எங்கே போயிருப்பா பிரியா என்று புலம்பிக்கொண்டே இருந்தான்,அந்த இரவு முழுவதும் பிலஸ்ஸினாவிடம் கூறி புலம்பிக் கொண்டே இருந்தான் ஷாம்,...

பிலஸ்ஸினாவிற்கு ஒரு தொலைபேசியில் ஒரு தகவல் வந்தது அதைக் கேட்ட உடனே ஷாமை அழைத்துக் கொண்டு காரில் இருவரும் சென்றனர்,எங்க போறோம் என கேட்கும் ஷாமிற்கு பதில் அளிக்காமல் வேகமாக காரை ஓட்டிச் சென்றாள்,அப்போது மணி அதிகாலை 3.00 ,பதட்டத்துடனே ஷாம் சென்றான் ,கார் ஓர் இடத்தில் நின்றது,அது பிரியா பிலஸ்ஸினா படித்த கல்லூரி,இருவரும் காரிலிருந்து இறங்கினர்,தூரத்தில் இருந்து ஒரு பெண் வருவதை பார்த்தனர்,அந்த பெண் ராமின் காதலி ஷோபனா ,ஷோபனா வந்தவுடன் பிலஸ்ஸினாவை கட்டிப்பிடித்து அழுதாள்,என்ன ஆச்சு ஷோபனா பிரியா எங்கே என்று ஆரம்பித்தாள் பிலஸ்ஸினா,உடனே ஷாம் பிரியா இங்கதான் இருக்காளா எங்கங்க பிரியா என்று கேட்டான்,உடனே ஷோபனா அவளது வீட்டிற்கு இருவரையும் அழைத்து சென்றாள்,அவளது வீட்டின் படுக்கை அறையில் பிரியா உறங்கிக் கொண்டிருந்தாள்,பிரியாவைப் பார்த்த ஷாம்,பிரியா எப்படி இங்க வந்தா என்று கேட்டான் ஷாம்,உடனே ஷோபனா,நேற்று பிரியா திடீரென இங்கே வந்து,அந்த ராம் வந்துட்டான்,எப்படியும் உன்னை கொல்ல வருவான்,நீ உடனே போலீஸ்ட்ட உனக்கு பாதுகாப்பு வேணும்னு புகார் கொடுண்ணு சொன்னாள் பிரியா,எனக்கு எதுவும் புரியல,அதற்கு அப்றம் போலீஸ் ட்ட சொல்லி அவங்க உங்க வீட்லதான் ராம் இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு அங்க வந்து அவன கைது பண்ணாங்க,அதற்கு அப்றம் பிரியா மயக்கமாயிட்டா,உடனே டாக்டர் வந்து பார்த்தாங்க,ஒன்னும் இல்ல கோமால இருந்து நினைவு வந்த உடனே செயல்பட்டதால மயக்கமடைஞ்சிற்காங்க,இன்ஜக்ஷன் போட்றுக்கேன்,காலையில கண் முழிச்சிடுவாங்கன்னு டாக்டர் சொன்னார் என ஷோபனா இருவரிடம் கூறினாள்,இருவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர்,அவளது ஆபத்தை பற்றி கவலைப்படாமல் அடு்த்தவரின் உயிரை காப்பாற்ற நினைத்த தன் காதலியை நினைத்து நெகிழ்ந்தான் ஷாம்,ஆறு மணி நேரத்திற்கு பின் கண் விழித்தாள் பிரியா,எதிரே ஷாம் பிலஸ்ஸினா ஷோபனா மூவரும் நின்றனர் ,ஷாமை அருகில் அழைத்தாள் பிரியா ,நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்று கூறி கொண்டே ஷாமின் நெற்றியில் முத்தமிட்டாள் பிரியா....

  

(ஆணிடம் பேச மறுக்கும் பெண்ணிற்கு சிலர் கொடுக்கும் பட்டம் திமிரானவள்...)

அன்புடன்,
   டேவிட்

கனவே கலையாதேNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ