தேவதையைக் கண்டேன்

208 7 2
                                    

     கார்த்திக் கலகலப்பாக இருக்கும் ஒரு குடும்பத்தில் கலையில்லாமல் இருக்கும் ஒருவன் ,இவன் பிறந்ததிலிருந்தே இப்படி இல்லங்க,இவனோட வாழ்க்கையில் ஒரு சுனாமி தரக்கூடிய தாக்கத்தை விட பல மடங்கு அதிகமாக ஏற்படுத்திவிட்டாள் ஒரு பெண்,..

அவள் மாயா ,மலர்களும் காதல்
கொள்ளும் மாயாவைக் கண்டு,மாயாவைக் கடந்து செல்லும் ஆண் நின்று அவளை ஒரு நிமிடம் பார்த்த பின்னரே நினைவு திரும்பி அவன்  வேலையை தொடர்வான்,அவ்வளவு அழகு நிறைந்தவள் மாயா...

இரண்டு மாதங்களுக்கு முன்,,

கார்த்திக் ஒரு பைக் ரேசர்,படிப்பு முடிச்சிட்டு அடுத்தவன் கிட்ட கை கட்டி வேலை பார்க்க கூடாதுஎன்று முடிவு செய்து,அவனது விருப்பத்திற்கேற்ப பைக்கில் அவனது வாழ்க்கையை நகர்த்தி கொண்டு இருந்தான்,கரடு முரடான பாதையில் சென்றுக் கொண்டிருந்த கார்த்தி பைக் மகளிர் கல்லூரி பக்கம் செல்ல ஆரம்பித்தது,  அதுக்குள்ள லவ் இல்லங்க,கார்த்திக்கு உயிர் தோழன்னு சொல்ற அளவுக்கு ஒருத்தன் இருக்கான்,அவன் டேவிட் ,மாயாவோட தோழி சாதனா,சாதனா டேவிட் இரண்டு பேரும் ஸ்கூல் டேஸ்ல இருந்தே காதலிச்சிட்டு இருக்க ஒரு சிறந்த காதலர்கள்,ஒரு பொண்ணு ஒரு பையன காதலிக்க எந்த காரணமும் இருக்காது பொதுவாக,ஆனால் சாதனா டேவிட்ட காதல சொல்லும் போது  ,எனக்கு உன்ன பிடிச்சிற்கு,அதற்கு ஒரே ஒரு காரணம் தான், உனக்கு எந்த பெண்ணையும் பிடிக்காதுல அதுதான் என்றாள் சாதனா,சாதனாவ பார்க்கிறதுக்கு முன்னாடி வரையும் டேவிட் எந்த பெண்ணையும் பிடிக்காத  ஒருவனாகதான் இருந்தான்,அப்புறம் எப்படி இப்ப மாறினான் அதானே உங்க கேள்வி ,அதாங்க காதல்,கண் சிமிட்ற நொடியில விதியை மாற்றும் ஒன்றுதான் காதல் ,அப்படி ஆரம்பித்த டேவிட் சாதனா காதல் இன்று வரை காதலே காதல் கொள்ளும் விதத்தில் அழகாக சென்று கொண்டிருந்தது, டேவிட் கார்த்தி இரண்டு பேரும் பைக் பிரியர்கள் ,அதனாலயே இரண்டு பேரும் ரொம்ப க்ளோஸ்,எந்த ரேஸ்க்கு கார்த்தி போனாலும்,அவனோட பெற்றோர்ட்ட சொல்லிட்டு போறானோ இல்லையோ ,டேவிட் இல்லாம மட்டும் எங்கேயும் போகமாட்டான் கார்த்தி ,நிறைய வெற்றிகளை பார்த்த கார்த்தி அதற்கெல்லாம் ஒரே காரணம் டேவிட் என்னோடு இருப்பதனால் மட்டுமே என்று மற்ற நண்பர்களிடம் கூறுவான்,டேவிட் கார்த்தியை கண்ட முதல் நாள்தான் சாதனா தனக்கு காதலியானாள் என்று கார்த்தி மீது டேவிட் அளவு கடந்த அன்பு வைத்துள்ளான்,..

கனவே கலையாதேDove le storie prendono vita. Scoprilo ora