பொதுவாக ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அதே கம்பெனியில் பணிபுரிவர்களையே காதல் செய்வார்கள்,நம் நாயகன் பிரேம் ஐடி கம்பெனியில் பணிபுரிபவன்,அவன் காதலி ஹாசினி கல்லூரியில் கடைசி ஆண்டு படித்து வருகிறாள், சில வருடங்களுக்கு முன் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தான்,பிரேம் ஹாசினியின் சீனியர்,கல்லூரியின் முதல் நாள் ஹாசினியை பிரேம் நண்பர்கள் கேலி செய்ய ,ஹாசினி கல்லூரி முதல்வரிடம் அவர்கள் அனைவரின் மீதும் புகார் கொடுத்தாள்,முதல் நாள் பிரேம் கல்லூரிக்கு வரவில்லை ஆனால் பிரேம் பெயர் முதல்வர் மேசையில் முதலில் இருந்தது,அனைவரையும் அழைத்த முதல்வர் ,அசிங்கமாக பிரேம் மற்றும் அவர்களது நண்பர்களை திட்டினார்,இதனால் ஆத்திரமடைந்த பிரேம் ,ஹாசினி வகுப்பிற்கு சென்று முகத்தில் பளாரென அடித்து இதனையும் சென்று முதல்வரிடம் சொல் என கூறி சென்றான்,அவன் அடித்ததில் பயந்து போனாள் ஹாசினி,அவளது நண்பர்கள் இந்த பிரச்சனையை இதோடு விட்டு விடு என கூற ,அழுதவாறே தங்கும் விடுதிக்குச் சென்றாள்,
நாட்கள் சென்றது ,கல்லூரியில் பிரேம் சிறந்த மாணவன், மாணவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துவைப்பான்,அவனை சுற்றி எப்போதும் அவனது நண்பர்கள் இருப்பார்கள்,பிரேமிடம் அடி வாங்கிய ஹாசினி , அன்றிலிருந்து அவனை தூரத்தில் இருந்து ரசிக்கத்தொடங்கினாள்,அவனைப் பற்றி அவளது தோழிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டால்,அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணினால்,அவனோடு நண்பர்கள் இருந்ததால் அது முடியாமல் போனது,இரண்டு வருடம் அவனை தூரத்திலிருந்தே காதலித்து வந்தாள்,ஒரு நாள் மாலை கல்லூரி முடித்து விட்டு ஹாசினி அவளது தோழிகளோடு விடுதிக்குச் சென்று கொண்டிருந்தாள்,செல்லும் வழியில் பிரேமை நான்கு ரவுடிகள் அடித்து கொண்டிருப்பதைக் கண்டாள்,பிரேம் என கத்திக் கொண்டு அருகில் ஓடிய இவளையும் கட்டையால் தாக்கிவிட்டு ஓடினர் ரவுடிகள்,இவள் மீது அடிபட்டதை பொருட்படுத்தாமல் ,இரத்தத்தோடு கிடந்த பிரேமை மருத்துவமனையில் அனுமதித்தாள்,அழுது கொண்டே இருந்தாள் அவளது தோழிகள் ஆறுதல் கூறியும் இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தாள்,இவள் கூறாமலே ,இவள் பிரேமை விரும்புகிறாள் என்பதை கண்டுபிடித்தனர்,மறுநாள் மருத்துவமனையில் அவள் தோழிகளுடன் சென்று பிரேமை சந்தித்தாள்,பிரேம் நன்றாக உள்ளான் என்பதை பார்த்த பின்னரே அவளது கண்ணீர் நின்றது,இரவு முழுவதும் உன்னை நினைத்து அழுதுகொண்டு இருந்தாள்,உன்னை பார்த்த பின்தான் கண்ணீர் நின்றது என தோழிகள் பிரேமிடம் கூறினர்,பிரேம் ஹாசினியின் கையை பிடித்தவுடன் மீண்டும் அழத் தொடங்கினாள்,அவள் உன்னைப் பார்த்தால் அழுது கொண்டே தான் இருப்பாள்,நாங்கள் கல்லூரி செல்கிறோம் என்று தோழிகள் கூறி சென்றனர்,அனைவரும் சென்ற பின் ஒரு தோழி பிரேமிடம் வந்தாள்,ஹாசினி சிறு வயதிலேயே அவளது பெற்றோரை இழந்தவள்,விடுதியில் தங்கியே படித்து வருகிறாள்,அன்று நீ அவளை அடித்த போது அவளது தந்தை போல் தோன்றியதாக கூறி அழுது கொண்டே இருந்தாள்,ரொம்ப வெகுளி,ஆனால் உன்னை அவளது உயிராக நினைத்து வாழ்கிறாள்,உன்னை ஒருவன் அடிப்பதை பார்த்ததும் அவளை மறந்து உன்னை காப்பாற்ற வந்தாள்,இரண்டு வருடம் உன்னை சுற்றி சுற்றி வருகிறாள்,அவளை விட்டு விடாதே என தோழி கூறி முடிப்பதற்குள் ,பிரேம்,ஹாசினி என்னைப் பற்றி மற்றவரிடம் கேட்டு தெரிந்திருப்பதாக எனது நண்பர்கள் ஆரம்பத்திலேயே கூறினர்,நானும் அவளை காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்,அவள் படிக்கட்டும் என நான் சொல்லாமல் இருந்தேன் என கூறினான் பிரேம்,நானே ஹாசினிட்ட சொல்றேன்,நீ காலேஜ் போ என்று சிரித்தவாறு கூறினான் ...
ஒரு வாரம் சென்றது,
பிரேம் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு கல்லூரி சென்றாள்,பிரேம் அன்றும் கல்லூரியில் இல்லை,அழுது கொண்டே இருந்தாள் அவனை நினைத்து...மறுநாள் பிரேம் கல்லூரி முழுவதும் ஹாசினியை தேடினான்,ஹாசினி அங்கு இல்லை,அவள் தோழியிடம் கேட்க ,அவள் அழுது கொண்டே இருந்ததால் அவள் கண் எரிகின்றன என்றாள்,விடுதியில் உள்ளாள் ,நான் மாலை ரெஸ்டாரண்ட் வர சொல்கிறேன் ,நீ அங்கு காத்திரு என்றாள் தோழி..சரி என்று சென்றான்,மாலை கல்லூரி முடித்து விடுதிக்குச் சென்ற தோழியிடம் பிரேம் கல்லூரி வந்தானா என கேட்டாள் ஹாசினி,ஆம் என்று கூறி பின் உனக்காக ரெஸ்ட்டாரண்ட்ல பிரேம் காத்திருக்கிறான்,நீ செல் என்றாள்,கேட்டு மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றாள் ஹாசினி,.
ரெஸ்ட்டாரண்ட் சென்று அவளுக்காக காத்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தாள்,அவன் முன் சென்றாள்,அவளை கண்ட பிரேம் புன்னகைத்தான்,இருவரும் பார்த்தவாரே கையை பிடித்தவாறே அருகருகே அமர்ந்திருந்தனர்,மாலை நேரம் எவ்வளவு அழகாக உள்ளது என்றான் முதலில் பேச ஆரம்பித்த அவள் நிறைய பேசி கொண்டே இருந்தாள்,அனைத்தையும் ரசித்தவனாக கேட்டுக் கொண்டிருந்தான்,பிரேமின் தந்தை ரெஸ்ட்டாரண்ட் வந்தார்,அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதை கண்டு பிரேமை அடித்து இருவரையும் வீட்டிற்கு அழைத்து சென்றார்,வீட்டில் பிரேம் ஹாசினி நடந்த அனைத்தையும் கூற முதலில் தயங்கிய அவனது பெற்றோர் ,படிப்பை முடியுங்கள்,பிறகு யோசிக்கலாம் என சம்மதித்து விட்டார்,...தனக்கு ஒரு குடும்பம் கிடைத்து விட்டது என கூறி அவளது பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றாள் ஹாசினி..பிரேம் மகிழ்ச்சியில் திகைத்தான்..இன்று ,
பிரேம் கல்லூரி படிப்பை முடித்து கம்பெனியில் வேலை பார்க்கிறான்,ஹாசினி கடைசி ஆண்டு படித்து வருகிறாள்,அவளது தேர்விற்காக காத்திருக்கின்றனர்,தேர்வு முடிந்ததும் திருமணம் !!!!!
அன்புடன்,
டேவிட்
![](https://img.wattpad.com/cover/88383066-288-k535406.jpg)
YOU ARE READING
கனவே கலையாதே
Romanceகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...