காதல் முதல்ல எதனால ஆரம்பிக்குது??வயசு கோளாறும் இல்ல,வசதிக் கோளாறும் இல்ல,உண்மையில அது பார்வைக் கோளாறுதான்,இருவரின் கண்களில் இருந்துதான் காதல் ஆரம்பிக்கும்.
இனி இந்த உலகத்துல பிறக்கவே கூடாதுனு கரெண்ட் கம்பத்துக்கு அடியில மது அருந்திட்டு வாழ்க்கையை வெறுத்து உட்கார்ந்து இருக்கான் ராம்,யாரு இந்த ராம்????
சில தினங்களுக்கு முன்பு...
ராம் அவனோட பெற்றோருக்கு ஒரே பையன்,ராமின் தந்தை எலக்ட்ரிக் பணி செய்து வந்தார்,பணி செய்து கொண்டிருக்கும் போதே ராமின் தந்தை உயிர் விட்டதால்,அந்த பணி அவருடைய மகன் ராமிற்கு வந்தது,சிறு வயதிலேயே குடும்ப பொறுப்பை கவனித்துக் கொண்டான்,இவ்வாறாக குடும்பம் வேலை என ராமின் வாழ்க்கை அமைதியாக சென்றது, அவனுடைய பணி ஆபத்து நிறைந்ததாக இருப்பினும் அதனை ஈடுபாடோடு செய்தான்,..
ஒரு நாள் இரவு
எலக்ட்ரிக் ஆபிஸ்க்கு போனில் ஒரு அழைப்பு வந்தது ,அந்த போனை ராம் எடுக்க,அந்த அழைப்பில் ஒரு பெண்ணின் குரல்,சார் சார் கரெண்ட் ஒயர் பையர் ஆயிடுச்சு சார் சீக்கிரம் வாங்க சார் ,தாமதாம் ஆனா கிராமமே அழித்துவிடும் சார் என்று கூறிய அந்த பெண் ,கிராமத்தின் முகவரி கொடுத்தாள்,அன்று ஆபிஸில் ராம் மட்டும் இருந்ததால் யாரையும் எதிர்பார்க்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்தான் ராம்,.இவன் அணிந்திருந்த ஆடையை கண்டு அந்த பெண் இவர்தான் எலக்ட்ரி்க் ஆபிஸர் என புரிந்துகொண்டு ராமின் கையை அந்தப்பெண் பிடித்துக்கொண்டு ,சார் சார் சீக்கிரம் கம்பத்துல ஏறி ஏதாவது பண்ணுங்க,இல்லனா ஒயர் அவிழ்ந்து விழுந்து கிராமம் முழுவதும் அழிஞ்சிடும் என்று கதறினாள் அந்தப் பெண்,கம்பத்தில் இருந்த மின்சாரத்தை விட அந்தப் பெண்ணின் கண்ணில் ராம் அதிக மின்சாரத்தை கண்டான்,ஒரு நிமிடம் கரெண்ட் அடித்தது போல் அவளின் கண்ணைப் பார்த்துக் கொண்டே நின்றான்,அவள் ராமின் கையை மறுபடி பிடிக்க,நிதானமடைந்த ராம்,ஒன்னும் ஆகாது பயப்படாதிங்க சீதா என்று சொல்லிக்கொண்டே கப்பத்தில் ஏறினான்,ஐயோ என் பேரு சீதா இல்ல சோனியா ,சீக்கிரம் வேலையை பாருங்க என்று கத்தினாள்,சீதா போல இருக்க உங்களுக்கு சீதானே பெயர் வச்சிற்கலாம் என ராமின் மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டு கம்பத்தில் ஏறினான்,..
நான்கு ஒயர்கள் காற்றின் வேகத்தில் ஒன்றையொன்று உரசிக் கொண்டதால் நெருப்பு ஏற்பட்டிருந்தது,அதனை நிதானமாக சரி செய்தான் ராம்,அதன்பின் கம்பத்தில் இருந்து கீழே இறங்கிய ராம் ,சோனியாவிடம் சென்றான்,சோனியாவின் கண்ணைக் கண்டவாறே அவளருகில் சென்றான்,கம்பத்துல இருக்க மின்சாரத்தை விட உங்க கண்ல இருக்க மின்சாரம் ரொம்ப பவர் சோனியா என்றான்,என்ன சொல்றீங்க என்று ராமின் கண்ணைக் கண்டு கேட்டாள்,இருவரும் சில நிமிடம் பார்வையிலேயே சிக்கித் தவித்தனர்,இடையில் ஒருவர் செல்ல நிதானம் அடைந்த ராம் ,உங்க சமூக சேவைக்கு வாழ்த்துக்கள் என்றான் சோனியாவிடம்,தேங்க்ஸ் என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவளது குடிசைக்குள் சென்றாள் சோனியா,ராமும் சிரித்தவாறே அவனது பைக்கை ஸ்டார்ட் செய்தான்,..
திடீரென வேகமாக காற்று அடிக்க அனைவரும் கண்ணை மூடினர்,ராம் கம்பத்தில் சரி செய்த ஒயர் காற்றின் வேகத்தில்,சோனியாவின் குடிசை மேல் அந்த ஒயர் மின்சாரத்துடன் விழுந்தது,கண்ணைத் திறந்து ராம் பார்க்க சோனியாவின் குடில் எரிந்து கொண்டிருந்தது,அனைவரும் நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர், ராம் பைக்கை கீழே போட்டுவிட்டு குடிலை நோக்கி ஓடினான்,அங்கிருந்த அனைவரும் ராமை தடுக்க,எரிந்து கொண்டிருந்த குடிசைக்குள் சோனியா என்று கத்திக் கொண்டு வேகமாக ஓடினான்,குடிசை முழுவதும் எரிந்தது,ஐந்து நிமிடம் கழித்து எரிந்த நிலையில் சோனியாவின் உடலை தூக்கிக்கொண்டு வெளியே வந்தான் ராம்,அவளின் உடலை பெற்றுக்கொண்ட அந்த கிராமத்தார்கள்,வேலையை ஒழுங்காக செய்யவில்லை என ராமை அடித்தனர்,உடனே காவலர்கள் அங்கு வர ராமை கைது செய்தனர்,சிறையில் இருந்த நாட்களில் சோனியா சோனியா பார்வை,சோனியா என்று புலம்பிய நிலையிலேயே இருந்தான்,அதன் பின் காவலர்களால் பரிந்துரைக்கப்பட்டு மன நல காப்பகத்தில் அடைக்கப்பட்டான் ராம்,அங்கு நான் கொலை செய்யல கொலை செய்யல என்ற ஒரே வரியை சொல்லியவனாய் இருந்தான்,.
தண்டனைக்குப் பின்,
நேராக சோனியா குடிலுக்குச் சென்றான் ,குடிசை இருந்ததற்குரிய அடையாளமே அங்கு இல்லை ...
இன்று,
அந்த கம்பத்தின் கீழே சோனியா என்று புலம்பிக் கொண்டு படுத்துள்ளான்,அவனை பார்க்கும் மற்றவருக்கு அவன் பயுத்தியம்,ஆனால் ராமைப் பொறுத்தவரை அந்த இடம் சோனியாவின் மடி..
அன்புடன்,
டேவிட்

YOU ARE READING
கனவே கலையாதே
Romanceகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...