தாய்மை இந்த உலகில் அனைத்தைக் காட்டிலும் சிறந்தது,அதை மறுக்க நம்மை படைத்த இறைவனாலும் முடியாது,..
அந்த தாயின் அன்பை பெறாத நிறைய உயிர்கள் உள்ளன..,,அதில் ஒரு உயிர் ,கதையின் நாயகன் அன்பு,பிறப்பிலே தன் தாயை இழந்து சுற்றியுள்ளவர்களின் அரவணைப்பில் வளர்ந்தவன்,தாயின் அன்பிற்காகவே ஏங்கி வளர்ந்த அன்பு,25 வயது நிறைந்தவன் ,ஒரு நாள் பேருந்தின் படியில் தொங்கியபடி பயணம் செய்தான்,பேருந்து திடீரென நின்றவுடன் தடுமாறி கீழே விழுந்தான்,பேருந்தின் சக்கரம் அன்பின் கால் மீது ஏறியது,மயங்கிய அன்பு கண் மூடும் போது ஒரு உருவத்தைக் கண்டான்,எவரும் உதவ முன்வராத நிலையில் ஒரு பெண் அவனை மருத்துவமனையில் அனுமதித்தாள்,தீவிர சிகிச்சைக்குப் பின் அன்பு பிழைத்தான்,மருத்துவரிடம் அன்பு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என அந்தப் பெண் கேட்க ,கண்டிப்பாக ஏற்படும், இனி பயப்பட வேண்டாம் என்றார் மருத்துவர் ,உள்ளே சென்று அன்புவை பார்த்தாள்,அன்பு கண் திறந்தான்,அவன் திறக்கும் போது பார்க்கின்ற உருவமும் கண் மூடும் போது பார்த்த உருவமும் ஒன்றே,இனி படியில் தொங்கியபடி பயணம் செய்யாதீர்கள் என அறிவுரை கூறினாள் அந்தப் பெண்,அன்பாக பேசிய அவளது பேச்சில் அவன் தாயின் அன்பை உணர்ந்தான், அவள் அவனுடனேயே இருக்க வேண்டும் என்று அவனுள்ளேயே ஏங்கினான்,அன்பு அப்பெண்ணிடம் உங்கள் பெயர் என்ன என கேட்டான்,கீதா என்றாள் அந்தப் பெண்,பூரிப்படைந்தான் அன்பு,அவனது தாயின் பெயரையே கொண்டுள்ளதால் அவனது தாயே மறுபடி தோன்றி அவனுக்கு உயிர் கொடுத்ததாக நினைத்து மகிழ்ந்தான்,கீதா அன்புவைப் பற்றி கேட்டாள்,நான் இதுவரை ஒரு அனாதை,இனி என் வாழ்வில் உன் உருவில் ஒரு தாய் உள்ளாள் என ஏக்கத்துடன் அவளது கண்ணைப் பார்த்துக் கூறினான்,அதை கேட்டு மெய் சிலிர்த்தாள் கீதா,.கீதா அவனுக்கு ஆறுதல் கூறினாள்,தன்னைப் பற்றியும் அவளது குடும்பத்தைப் பற்றியும் கூற ஆரம்பித்தாள்,அவளது தந்தை இராணுவ வீரர்,தாய் காவல் அதிகாரி எனவும் தான் கலெக்டருக்கு படித்து வருவதாகவும் அதுவே இலட்சியம் எனவும் கூறினாள்....எனக்கு நேரம் ஆயிற்று ,சென்று நாளை வருகின்றேன் என்று கூறி சென்றாள்,தாய் கிடைத்ததாக எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனான்,அது காதலா பாசமா என புரியாதவனாய் திகைத்தான்,இரவு முழுவதும் அவளை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தான்,இரண்டு நாட்கள் கடந்தது ,கீதா வரவில்லை ,மருத்துவமனைக்கு கட்ட பணம் அவனிடம் இல்லை,மூன்றாவது நாள் பணத்துடன் மருத்துவமனைக்கு கீதா வந்தாள்,பணம் கட்டிவிட்டு அன்புவை வீட்டிற்கு சென்று ஓய்வு எடுங்கள் என்று கூறினாள்,அவளது முகத்தில் வருத்தத்தை கண்ட அன்பு,ஏன் சோகமாக இருக்கிங்க என்றான்,ஒன்றும் இல்லை என மறுத்தாள் கீதா,விடாமல் கேட்க கீதா அழத் தொடங்கினாள்,தன் தந்தை பாகிஸ்தான் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்,அதனால்தான் இரண்டு நாட்கள் வரவில்லை என்றாள், அவளது வீட்டிலிருந்து அழைப்பு வந்தது ,நான் செல்ல வேண்டும்,இனியாவது கவனமாக இரு என சொல்லி சென்றாள் கீதா....,
எதுவும் கூற முடியாதவனாய் திகைத்து தடுமாறி வீட்டிற்கு சென்றான்,,,,அவனால் நிம்மதியாக எதுவும் செய்ய முடியவில்லை,கீதாவின் தியாகம், அவளது அன்பு எதையும் எதிர்பார்த்து செய்யாத உதவும் குணம் இவை அனைத்தும் அவனை வாட்டியது,அந்த ஒரு இரவை ஒரு யுகம் போல் ஓட்டினான் ,மறுநாள் கீதா வீட்டிற்கு சென்றான் அவளது வாடிய முகம் கண்டு வாழ்க்கையை வெறுத்தான்,வெளியே செல்ல தயாராக இருக்கும் அவளிடம் ,எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டான்,இராணுவத்திற்கு என உறைந்து பதில் கூறினாள்,அதை கேட்டு அதிர்ச்சியில் கீழே விழுந்தான்,அவனை எழுப்பிய பின் வேண்டாம் என கெஞ்சினான்,பொறுமையாக கீதா,இராணுவத்தில் ஒருவர் இறந்து விட்டால் அதன் பின் அவரது குடும்பத்தில் ஒருவர் இராணுவத்தில் சேரவேண்டும் என கூறினாள்,உங்கள் இலட்சியம் கலெக்டர் ஆவது ,உங்கள் திறமை ,பண்பு ,உதவும் எண்ணம் அனைத்தும் இங்கு வேண்டும் என்றான் அன்பு,செல்ல தயாரானாள் கீதா,அவளது காலைப் பிடித்துக் கொண்டு போகவிடமாட்டேன் என கதறி அழுதான்,தான் செல்கிறேன் என்னை உங்கள் குடும்பத்தில் தத்து எடுத்து கொண்டு என்னை அனுப்புங்கள் என்று கெஞ்சினான்,கீதாவின் தாய் இராணுவத்தில் இவ்வாறு சட்டம் உள்ளதா என கேட்க ஆம் என்றாள் கீதா,..
நான் செல்கிறேன் ,உங்கள் இலட்சியம் நிறைவேற வேண்டும் என்று கெஞ்சினான்,அவனது காதலைஅவனுடைய கதறலில் கண்டாள் கீதா...சில வருடங்களுக்கு பிறகு,
கீதா மாவட்ட கலெக்டர் ஆக பொறுப்பேற்றாள்,அதன் விழாவிற்கு இராணுவ அதிகாரி அன்பு வந்து சிறப்பித்தார்....என் இலட்சிய வெற்றிக்கு நீதான் காரணம் என்றாள் கீதா,என் வாழ்க்கையின் தொடக்கமே உன்னிடத்தில்தான் என்றான் அன்பு....அதன் பின்பு அன்பு கீதாவிடம் நீ எனக்கு உயிர் தந்தவள்,,,
உன் உருவில் என் தாயைக் காண்கிறேன் என்றான்....இவர்கள் இருவரின் சொல்லாத காதல் ,சொர்க்கத்தை விட மேலானது.....
அன்புடன்,
டேவிட்

BẠN ĐANG ĐỌC
கனவே கலையாதே
Lãng mạnகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...