என் இதயத்தை திருடிச் சென்றவளே

136 7 2
                                    

காதலிக்க ஆரம்பித்து விடும் போது மனதில் புது புது எண்ணங்கள் உற்சாகத்துடன் தோன்றும்,பார்ப்பவை அனைத்துமே அழகாக தோன்றும்,ஆனால் அந்த காதலை விரும்பிய பெண்ணிடம் சொல்வதற்குள்அவனுக்குள்  போர் நடந்து முடிந்துவிடும்,
இது தான் உண்மை...

ராகுல் திவ்யாவை கண்டது ரயில்பயணத்தின் போது ,அப்பயணம்  அவனது வாழ்க்கையையே திருப்பிபோட்டது,சென்னை முதல் மும்பை வரை அப்பயணம்,அவளை முதலில் காணும் போது குழந்தைக்கு ஐஸ்கிரீம் கொடுத்த நிலையில் கண்டான்,ஐயோ  அதற்குள் 25 வயதாகிவிட்டதே,நானும் குழந்தையாக இருக்க கூடாதா என ஏங்கினான்,அவளுக்கு முன் சென்று நீ ரொம்ப அழகா இருக்க என ராகுல் கூறினான்,அதைச் சென்று உன் தாயிடம் சொல் என்று அசிங்கப் படுத்தி சென்றுவிட்டாள்,அதை பொருட்படுத்தாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்,அவள் எங்கு சென்றாலும் அவளையே பின் தொடர்ந்தான்,அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் ராகுலை பிடித்து விட்டது,அனைவரும் ராகுலுடன் சேர்ந்து திவ்யாவை ,நீ ரொம்ப அழகா இருக்க என்றனர்,அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்,திவ்யா மட்டும் தூங்காமல் நடந்துகொண்டிருந்தாள்,ராகுல் தூங்குவதைப் போல நடித்து அவள் என்ன செய்கிறாள் என அவளுக்கு தெரியாமல் கண்டான்,திடீரென திவ்யா அவள் வைத்திருந்த பேக்கீல் இருந்து துப்பாக்கி எடுத்து மதிக்கத்தக்க வயது கொண்ட ஒருவரை சுட்டுவிட்டு ,படுத்துக்கொண்டாள்,சத்தம் கேட்டு அனைவரும் பதறி எழுந்து ,கொலையை கண்டவுடன் கத்தினர்,இவையனைத்தையும் கண்ட ராகுல் அதிர்ச்சியில் மயங்கி கிடந்தான்,அடுத்த ரயில் நிலையத்தில் ,ரயிலை நிறுத்தி அந்த பெட்டியில் இருந்த அனைவரையும் போலிஸ் விசாரித்தனர்,அனைவரும் நாங்கள் உறங்கிக் கொண்டிருந்தோம் என கூறினர்,திவ்யா மட்டும் எனக்கு தெரியும் என்று ராகுலை கை காட்டினாள்,ஒரு மணி நேரத்திற்கு முன்,

திவ்யா கொலை செய்துவிட்டு அவள் மறையும் போது,ராகுல் அங்கு நடந்ததை பார்த்து மயங்கி விழுந்ததை பார்த்து விட்டாள்,அவனை ஓய்வு அறைக்கு இழுத்துச் சென்று முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினாள்,ஐயோ கொலை கொலை என்று கத்தினான்,அவன் வாயை அடைத்து ப்ளீஸ் வாயை மூடு என்று அழுதாள்,அவள் கண்ணீரை கண்டதும் வாயடைத்துப்போனான்,..அவளை பிரமிப்போடு பார்த்தான்,,,,
தன் தந்தை ஒரு அரசு அதிகாரி என ஆரம்பித்தாள் திவ்யா,மிகவும் நேர்மையான அதிகாரி,அதனால் அவருடன் பணியாற்றி வந்த அனைவரும் அவர் பிரச்சனையில் சிக்க வேண்டும் என்று ஒருவனை லஞ்சம் தருவது போல் ஏற்பாடு செய்து ,என் அப்பா அதை பெறுவது போல் ஏற்பாடு செய்து காவல்துறையினருக்கு தெரிவித்து அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டனர்,அனைத்து பத்திரிக்கை தொலைக்காட்சியிலும் அவரைப் பற்றி தவறாக வருவதைக் கண்டு எங்கள் உறவினர்களின் இழி சொல் தாங்காமல் என் அப்பா அம்மா இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்,இப்போது நான் கொலை செய்தவன் என் பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான ஒருவனே ஆவான் என்று அழுதாள் திவ்யா,காதலில் மூழ்கியிருந்த ராகுல் அவளது கண்ணீரை கண்டதும் ,நான் கொலை செய்ததாக ஒத்துக் கொள்கிறேன்,நீ இனி இது போல் செய்யாதே ,நீ நன்றாக இருக்க வேண்டும் என கூறிக் கொண்டே இருக்கும் நிலையில் ரயில் நின்றது....

தற்போது,,

திவ்யா ,ராகுலை கொலையாளி என்று கை காட்டியதும் காவலர் அவனை விசாரிக்க ஒப்புக்கொண்டான்,அவனை அடித்து இழுத்துச் சென்றனர்,அவளைக் கண்டவாறே,பத்திரமாக இரு நான் திரும்ப வருவேன் என்று சொல்லிக்கொண்டே அழுதவாறே சென்றான்,..திவ்யா அவள் மனதுக்குள்ளே இவனை அவர்கள் விசாரித்து உண்மையை தெரிந்து கொண்டால்,நாம் மீதமுள்ளவர்களை கொலை செய்வதற்குள் நம்மை கைதுசெய்து விடுவார்கள் என நினைத்தால், ராகுலை காவலர்கள் அழைத்துச் செல்லும்போது இமைக்கும் நொடியில் ராகுலை துப்பாக்கியால் சுட்டு விட்டு மறைந்தாள்,ராகுல் அவளைத் தேடியவாறே உயிர்விட்டான்...

திவ்யா அவளது கொலை வேட்டையை தொடர்ந்தாள்....

நம் எண்ணம் போல் நாம் விரும்புவரின் எண்ணமும் இருப்பதில்லை.....

அன்புடன்,
    டேவிட்        

கனவே கலையாதேWhere stories live. Discover now