தொலைத்த எதனையும் பெற்று விடலாம் இந்த உலகில் ஒன்றைத் தவிர அதுதான் காதல்..
கடவுளையும் பல வீட்டின் கதவுகளையும் தாண்டி வர வைப்பது காதல்தான்.. சில சமயங்களில் விண்ணையும் பிறந்த மண்ணையும் தாண்டி வர வைக்கும் இந்த காதல்,காதல் உலகின் உயிர்....
அந்தக் காதல், நாயகியை எவ்வாறு மாற்றுகிறது அதுவே இந்த விண்ணைத்தாண்டி வருவாயா...
நம் நாட்டில் அனைத்திலும் சிறந்தவர்கள் பெண்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒன்றுதான் இது ,காதலிலும் இது உண்மை,...
நாயகி ஸ்வேதா ,கல்லூரி படிப்பை முடித்து கம்பெனியில் பணிபுரிந்து வருகிறாள்.மாதம் 25000 ஊதியம் பெறும் இவள் பொறுப்பு நிறைந்த பெண் ஆவாள்.ஸ்வேதா தந்தை மீது அதிக அன்பு கொண்டவள்.ஸ்வேதாவின் தந்தைக்கு நேர்ந்த ஒரு விபத்தில் கிட்னி கோளாறு அடைந்து இருந்த நிலையில் ஒன்றினை நீக்கிய பின்னரே தற்போது நலமுடன் உள்ளார்..
ஸ்வேதாவின் காதலன் ,ஸ்வேதாவுடன் பணிபுரிபவர், ராஜேஷ் ஸ்வேதாவை கல்லூரி சுற்றுலாவின் போது சந்தித்தான்.ஊட்டியின் தொட்டபெட்டாவில் ஸ்வேதா தோழிகளுடன் விளையாடி செல்கையில் தடுமாறி கீழே விழ போய்க் கொண்டிருந்தவளை கைப்பிடித்து மேலே இழுத்தான் ராஜேஷ்.அவளை கண்டதும் என் வாழ்க்கை இனி உன்னோடுதான் என தன் காதலை தெரிவித்தான் ராஜேஷ்,உதவியதற்கு நன்றி என கூறி சட்டென ஓடி விட்டாள் ஸ்வேதா.அவளை எண்ணி பயுத்தியம் ஆனான்.இரவு பகல் என பாராமல் காதலி் வீட்டின் முன்னும் கல்லூரியின் வாசல் முன்னும் நின்றும் நடந்தும் நான்கு வருடங்கள் கடத்தினான்.அவனை சற்றும் கண்டு கொள்ளாத ஸ்வேதா நான்கு வருடத்திற்கு பிறகு அவனிடம் பேசினாள்.
நான் உன் வாழ்வில் வர எனக்கு சம்மதம் ஆனால் நீ என் தந்தையிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்றாள்.சந்தோஷத்தில் திகைத்த ராஜேஷ் அவளது வீட்டிற்கு சென்று ஸ்வேதா தந்தையிடம் பேசினான்.அனைவரும் சம்மதித்த நிலையில் அவர்களது உறவினர் மறுத்தனர்.ராஜேஷ் வேறொரு சாதி என்ற கோணத்தில் கண்டனர் உறவினர்கள் ,இதனால் ஸ்வேதா தந்தை தற்போது இதை பற்றி பேச வேண்டாம்.ஒரு வருடம் ஆகட்டும் என்றார்.இருவரும் ஏற்றுக்கொண்ட நிலையில் ,காதலித்து கொண்டே பணிபுரிந்தனர்,பசுமை நிறைந்ததாய் இளையராஜா இசையில் காதல் மலர்ந்தது..
வருடம் சென்றது,இன்பம் வந்தால் துன்பம் வரும் இது இயற்கை ,இது இவர்களின் வாழ்க்கையில் மட்டும் மாறிவிடுமா என்ன?
ஸ்வேதா தந்தையின் மற்றொரு கிட்னியும் கோளாறு அடைந்துவிட்டது என மருந்துவர் தெரிவிக்க ராஜேஷ் மீது சாய்ந்து அழத் தொடங்கினாள ஸ்வேதா.மருத்துவர் ராஜேஷை தனியாக அழைத்து ,இனி அவர் உயிர் பிழைப்பது கடினம் உறவினர்களுக்கு சொல்லிடுங்க
என்றார்.மறுநாள் ஆனது,ஸ்வேதா தந்தையின் மீது சாய்ந்து ஆனந்தமாக பேசிக் கொண்டு இருந்தாள்.உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க ஸ்வேதா முகம் வாடியது ..ராஜேஷ் அங்கு அவளுடன் இல்லை,
ராஜேஷ்யை தேட ஆரம்பித்தாள் மருத்துவமனை முழுவதும்..பக்கத்து வார்டில் ராஜேஷ் இருந்ததை கண்டு இடி விழுந்தவள் போல் ஆனாள்.
ராஜேஷ்யை குறித்து மருத்துவரிடம் கேட்டபின்னர் தன் தந்தைக்கு கிட்னி வழங்கி உயிர் கொடுத்தது ராஜேஷ் என தெரிந்து கொண்டாள்...அவனருகே சென்று கட்டி அணைத்தவளாய் அழுதாள்....
ஆறு மாதங்கள் சென்றது,தந்தை மற்றும் ராஜேஷ் நலம் பெற்றபின் ராஜேஷ் ஸ்வேதா விற்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது,திருமணம் நடக்க கூடாது ,வேறொரு சாதி ஆணுக்கு பெண் கொடுக்க கூடாது என்று உறவினர் சிலர் மறுத்தனர்.ஆனால் ஸ்வேதா வின் தந்தை திருமணம் நடக்கும் என்று கூறினார்...
நாளை திருமணம் ,
ஸ்வேதா மற்றும் தந்தை உறவினர்கள் அனைவரும் வெளியே சென்ற ராஜேஷ் வரவில்லை என தேடினர்...
திருமண நாள் சென்றது ஆனால் ராஜேஷ் வரவில்லை ..
காவல்துறையினர் ஸ்வேதா வின் வீட்டிற்கு சென்று அவளது உறவினர் நால்வரை கைது செய்தனர்... ஏன் இவர்களை கைது செய்கின்றனர் என கேட்க,ராஜேஷ்யை அடையாளம் தெரியாத அளவிற்கு வெட்டி கொலை செய்து உள்ளனர் என்றார் காவலர்...
இதைக் கேட்ட ஸ்வேதா கீழே விழுந்தவள் எழவே இல்லை...மண்ணில் சேராத, இவர்கள் காதல் விண்ணில் சேரட்டும்...
சாதியை ஒழிப்போம்
காதலர்கள் உயிரை காப்போம்...அன்புடன்,
டேவிட்
YOU ARE READING
கனவே கலையாதே
Romanceகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...