பார்த்திபனும் பார்கவியும்

127 5 3
                                    


பார்வையின் மோதலினால் காதல் தோன்றுகிறது என்றால் பார்வையில்லாதோரிடையே தோன்றும் காதல் ,காதல் இல்லையா????

இரவு 11 மணி ,பார்வையில்லாத பார்த்திபன் ,ஆள் நடமாட்டம் இல்லாத கடலின் ஓரத்தில் எதை தேடிக் கொண்டிருக்கிறான்,என்ன நடந்திருக்கும் பார்த்திபன் வாழ்வில்?

இரண்டு மணி நேரத்திற்கு முன்பு,

பார்த்திபன் பிறவியிலேயே பார்வையை இழந்தவன், பார்த்திபன் பிறந்த மூன்று ஆண்டுகளிலேயே பெற்றோரை ஒரு கோர விபத்தில் இழந்தான்,பார்வையில்லாத ஒருவனால் எந்த பயனும் இல்லை என்று அவனது உறவினர்கள் அவனது மூன்று வயதிலேயே நடுரோட்டில் விட்டுவிட்டனர்,அந்த பகுதியில் சென்ற ஊதுபத்தி வியாபாரியின் கண்ணில் பார்த்திபன் பட ,பார்த்திபனை அவர் எடுத்து வளர்த்தார் ,ஒரு வயதிற்கு மேல் பார்த்திபன் ,நானும் வீதி வீதியாக சென்று வியாபாரம் செய்கிறேன் என பொறுப்பை ஏற்றுக்கொண்டு வேலை செய்யத் தொடங்கினான்,அவ்வாறாக பார்த்திபன் பார்வையில்லாத குறையை மறந்து வேலை செய்தான்,..

இவ்வாறு இருபத்தைந்து வருடங்கள் சென்றது அவனது வாழ்வில், அதன்பின்
ஒரு நாள் ஊதுபத்தி விற்பதற்காக,ஒரு வீட்டின் கதவை தட்டினான் பார்த்திபன்,உள்ளே இருந்து எவரும் வராத நிலையில் தொடர்ந்து கதவை தட்டிக்கொண்டே இருந்தான் பார்த்திபன்,வீட்டில் இருந்து ஒருவர் கதவை திறக்க,கதவினை திறந்தது தெரியாமல் ,பார்த்திபன் தொடர்ந்து தட்டிக்கொண்டே இருந்தான்,நிறுத்தப்பா, என்ன வேண்டும் என்று ஒரு பெரியவர் குரல் கேட்க,ஐயா ஊதுபத்தி வாங்கிக்கோங்க ஐயா,வீடு முழுவதும் மணக்கும் என்று வியாபாரத்தை ஆரம்பித்தான் பார்த்திபன் ,இவன் பார்வையற்றவன் என அறிந்த பெரியவர்,பார்த்திபனை வீட்டின் உள்ளே அழைத்தார்,அந்தப் பெரியவர் தமிழகத்திலேயே இரண்டாம் இடத்தில் உள்ள பணக்காரர்களில் ஒருவர்,அந்தப் பெரியவரின் மகள் பார்கவி ,நிறைய சொத்துக்களை அந்தப் பெரியவர்க்கு கொடுத்த இறைவன்,ஒரு சிறிய குறையாக அவரது மகள் பார்கவிக்கு பார்வை தர மறுத்துவிட்டான், பார்கவிக்கு அத்தனை அழகையும் மொத்தமாக கொடுத்த அந்தக் கடவுள் பார்வையை பறித்துவிட்டான்,உள்ளே வந்த பார்த்திபனிடம் அந்தப் பெரியவர் பார்கவியைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார்.,

கனவே கலையாதேWhere stories live. Discover now