காதல் என்றால் என்ன என்றே தெரியாத ராம் தான் கதையின் நாயகன்,அவனது வாழ்வில் காதலை உணர்ந்தானா இல்லையா என்பதை பார்ப்போம்,.
ராம் ,அவனது பெற்றோர் சொல்லை தட்டாத ஒரு பையன்,பேருக்கு ஏற்ப ராமன் ஆவான்,கல்வி அனைத்தையும் நிறைவு செய்து விட்டு ,அரசுப் பணிக்கு தயாராகிக் கொண்டுள்ளான்,இவனது கல்லூரி காலத்தில் இவன் சிறந்த மாணவன் ,விளையாட்டிலும் கல்வியிலும் முதல் மாணவன்,பெண்கள் ரசிக்கும் அளவிற்கு அழகும் நிறைந்தவன்,பல பெண்கள் ராமிடம் காதலை கூறினர்,எனக்கு அது தெரியாது உன் மீது காதல் தோன்றவில்லை என கூறி மறுத்துவிட்டான்...இவனது நண்பர்கள் அதைப்பற்றி கேட்டாலும் ,எனக்கு காதல் உணர்வு வரவில்லை என்று கூறுவான்..இவ்வாறு இவனது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது,கோடைக்காலம் வந்தது,நண்பர்களோடு கேரளாவிற்கு சுற்றுலா சென்றனர்,அதிரம்பள்ளி அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள்,அனைவரின் முன்னும் குளிக்க கூச்சப்பட்டு குளிரில் நடுங்கி நின்றான்,,ஏய்ய்ய் என சத்தம் கேட்க திரும்பி பார்த்தான் ராம்,அடுத்த அருவியில் பெண்கள் நீராடினர்,சத்தம் போட்டு ரகளையாக சிரித்து கொண்டிருந்தவளைக் கண்டதும்,ராமின் இதயம் லப்டப்லப்டப் என வேகமாக அடித்தது ,மூச்சு முட்டியது,காதலை அவளிடம் உணர்ந்தான், அவளைக் கண்டவாறே அவளருகில் சென்றான்,அவள் மட்டுமே அவன் கண்ணிற்கு தெரிந்ததால் மற்ற பெண்கள் இருப்பதை மறந்தான்,அவளிடம் சென்று காதல் நீதான் காதல் நீதான் என்று பயுத்தியம் போல சிரித்தவாறே கூறினான்,அவனைக் கண்ட மற்ற ஆண்கள் ,பெண்கள் குளிப்பதை பார்த்து சிரிக்கிறான் என தவறாக புரிந்து கொண்டு அவனை அடித்தனர்,அவனது நண்பர்கள் சூழ்ந்து அவனை காப்பாற்றினர்,காதலை கண்டேன் காதலை கண்டேன் என அவளிடம் பேச மறுபடி முயற்சி செய்தான்,ஆனால் அவள் அதற்குள் சென்று விட்டாள்,காதல் வரும்வரை நன்றாக இருந்தவன் காதல் வந்தவுடன் பயுத்தியம் ஆனான்,மறுபடி அவளை எப்போது காண்பேன் உடனே காண வேண்டும் என எண்ணிக் கொண்டே வீட்டிற்கு வந்தான்,..
அவளது நினைப்பிலே நாட்கள் கழித்தான்,அவளைக் கண்டதை அவனது பெற்றோரிடம் கூறினான் மறுபடி காண்பேன் என நம்பிக்கையோடு கூறினான்,.
ஒரு மாதத்திற்கு பிறகு ,நண்பர்களோடு ரெஸ்ட்டாரண்ட் சென்றான்,உள்ளே செல்லும் போது அவள் வெளியே சென்றாள்,அவள் அருகில் ஓடி என் காதல் நீதானா என கேட்டான் பதில் சொல்லாமல் இவனைப் பார்த்து சிரித்தாள்,அருகில் வந்து அவள் கைப்பிடித்து என் காதல் நீதான் என்று கூறினான்,மறுபடி சிரித்தாள்,அவளது தந்தை வந்து பேசவும் பேசுவதை கேட்கவும் முடியாத பெண்ணின் கைப்பிடித்து இழுக்கிறாயே நாயே என்று திட்டி ராமை அடித்தார்,அப்போதும் அவள் சிரித்தாள்,அவனது நண்பர்கள் வந்து மன்னிப்புக் கேட்டு அவனை காப்பாற்றினர்,அவள் ஒரு ஊமை காது கேளாதவள் என்பதை அவனால் ஏற்று கொள்ளமுடிய வில்லை,நண்பர்களிடமும் பெற்றோரிடமும் கூறி அழுதான்,ஒரு வாரம் அறையில் அடைந்தவனாக அழுது கொண்டே இருந்தான்,அவனது பெற்றோர்களால் அவனைப் பார்க்கமுடியவில்லை,..
நாட்கள் கடந்தது ,புதிய ராமாக
வெளியே வந்தவன் அந்த பெண் வீட்டை தேடி கண்டு பிடித்தான்,அவளது தந்தையிடம் நான் உங்கள் பெண்ணை விரும்புகிறேன் ,அவளை முதலில் கேரளாவில் கண்டேன் ,அவளால் பேச கேட்க முடியாது என்பது எனக்கு தெரியாது என அங்கு நடந்ததை கூறி மன்னிப்பு கேட்டான்,முறைப்படி என் பெற்றோரை அழைத்து வருகிறேன்,அவளின் பெயர் என்ன என்று கேட்டான்,சீதா என்று அவளது தந்தை கூறினார்,சீதா ராமிற்குதான் என அவள் தந்தையிடம் கூறி சென்றான்,இரண்டு நாட்களுக்கு பிறகு அவனது பெற்றோரின் சம்மதத்துடன் சீதாவை பெண் கேட்க வந்தனர் அவளது வீட்டிற்கு,அவர்களது குடும்பத்தை பற்றி விசாரித்த பின் சீதா தந்தை சம்மதித்தார்,அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர்,சீதா ஒரு கடிதத்தை ராமிடம் அனைவரின் முன்னும் கொடுத்தாள்,அதில் என் காதல் நீதானா என கேட்டு எழுதியிருந்தாள்...அதற்கு என் வாழ்க்கையே நீதான் என ராம் பதில் எழுதியிருந்தான்,,இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது....காதல் கண்டவுடன்தான் வரும்,காரணத்திற்காக வந்தால் அது காதல் அல்ல அதன் பெயர் அன்பு.
அன்புடன்,
டேவிட்

ESTÁS LEYENDO
கனவே கலையாதே
Romanceகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...