பிரச்சனையில மாட்டிக்கிட்டேன் ஸ்வப்னா

248 7 0
                                    

பசங்கதாங்க ஒரு சின்ன பிரச்சனையை கூட,பெரிய உயிர் போற பிரச்சனை மாதிரி நினைச்சி வருத்தப்படுவாங்க,அதே ஒரு பெரிய பிரச்சினை உள்ள பையன் கூட ,காதலியாகவோ தோழியாகவோ ஒரு பொண்ணு இருந்தா போதும் ,அந்த பெரிய பிரச்சினையை கூட பிரச்சனையே இல்லன்னு மறக்க வச்சிடுவாங்க ....

நான் தேவா,ரொம்ப கஷ்டப்பட்டு பி.இ முடிச்சிட்டு இப்போ பசங்க கூட ஜிம் ,க்ரௌண்டுனு சுத்திட்டு இருக்கேன் ,எந்த கவலையும் இல்லாம ரொம்ப சந்தோஷமா ப்ரெண்டஸ் கூட சுத்திட்டு இருந்தேன்,என் ப்ரெண்ட் ராகுல் ,அவன் எல்லாரையும் விட என் கூட ரொம்ப க்ளோசா இருப்பான்,ஒரு நாள் அந்த நாள் என்னால அப்படிபட்ட ஒரு விஷயத்தை செய்ய முடியுமானு எனக்கு அப்ப தெரியல,நாங்க எல்லாம் வாலிபால் விளையாடிட்டு நைட் ,க்ரௌண்ட்க்கு பக்கத்துல இருக்க நாயர் கடையில டீ குடிச்சிட்டு இருந்தோம்,ராகுல்க்கு ஒரு தங்கச்சி இருக்கா ,அவ பேரு ஸ்வாதி,காலேஜ் படிக்கிறா,அன்றைக்கு நைட் அவ ஒரு பையன் கூட பைக்ல போறத நான் மட்டும் பார்த்தேன்,நான் ராகுல்ட்ட அவன தனியா கூப்பிட்டு சொன்னேன்,ஸ்வாதிய பத்தி தப்பா சொல்லாத மச்சினு என்கிட்ட கோவப்பட்டு போய்ட்டான்,என்னதா ஆயிரம் லவ் படம் பார்த்தாலும்,லவ் ஸ்டோரிஸ் படிச்சாலும்,நமக்கு தெரிஞ்ச பொண்ணு லவ் பண்றானு தெரிஞ்சா,அவ தப்பான வழியில போறான்னுதான் நினைக்க தோனும்,நாட்கள் போனது ,நான் அந்த விஷயத்தை மறக்க ஆரம்பிச்சேன்,ரெஸ்டாரண்ட்க்கு என் காதலி கூட போயிருந்தேன்,சொல்ல மறந்துட்டேன் சாரிங்க,என் காதலி என் உயிர் நான் இவ்ளொ சந்தோஷமா இருக்கேனா அதுக்கு காரணம் என்னோட தேவதை ஸ்வப்னா,தாமரைப்பூ எப்படி எல்லா நேரமும் ப்ரெஷா இருக்குமோ அது போல்தான் என் தேவதை,சின்ன வயசுலயே ,சொன்னா நம்ப மாட்டிங்க என்னோட அஞ்சு வயசுலேயே எனக்கு ஸ்வப்னா வேணும்னு நான் அடம் பிடிச்சதா என் அத்தை அதாங்க ஸ்வப்னா அம்மா சொல்வாங்க,ஆயிரம் தேவதைய ஒன்னா கலந்தது போல இருப்பாங்க என் ஸ்வப்னா,அவள நீங்க பார்த்தா கூட உங்களுக்கு இருக்க எல்லா பிரச்சனையையும் மறந்துட்விங்க,அப்படி இருப்பாங்க என் ஸ்வப்னா,எப்பவும் பார்த்துட்டே இருக்கலாம் அவளோட சிரிப்ப,கேட்டுட்டே இருக்கலாம் அவளோட வாய்ஸ,ஸ்வப்னா என்னோட எல்லாவும் அவள்தான்,அவள்க்கும் எல்லாம் நான்தான்,நாங்க ரெஸ்டாரண்ட்ல காபி குடிச்சிட்டு எழுந்தோம்,பக்கத்துல ஒருத்தன் ஐஸ்கிரீமை என் மேல கொட்டிட்டான்,அவன எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு,அவன் கூட அப்போ ஆறு பொண்ணுங்க இருந்தாங்க,ஸ்வப்னா என் கூட இருந்ததால எனக்கு அவன பத்தி யோசிக்க தோனல,ஆனா நான் அப்போ யோசிச்சிற்கனும்,ஸ்வப்னா டயர்டா இருக்குடான்னு சொன்னா,நான் அவள வீட்ல விட்டேன், ஸ்வப்னா போய்ட்டு திரும்ப வந்து எனக்கு கிஸ் பன்னிட்டு ஓடிட்டா,அந்த கிஸ்ல எல்லாத்தையும் மறந்துட்டேன்,ஸ்வப்னாவ மட்டும் நினைச்சிட்டு வீட்டிற்கு போய் படுத்தேன்,கனவுல ரெஸ்டாரண்ட்ல பார்த்த அந்த பையன் முகம் ,சில டைம் எனக்கு நாளைக்கு என்ன நடக்கும்னு முன்னாடியே கனவுல தெரியும்,நான் அந்த பையன கத்தியால கொலை பண்ற மாதிரி கனவு,எழுந்து பார்த்தேன்,டைம் நள்ளிரவு 1 மணி,நான் எதுக்கு அவன கொல்லனும்,எனக்கு எதுவும் புரியல,ஸ்வப்னா போட்டோ பார்த்துவிட்டு தூங்கினேன்,காலைல எனக்கு அந்த கனவு பத்தி எதுவுமே தோனல,ஆனா நான் கொஞ்சம் அந்த கனவு பத்தி யோசிச்சிற்கனும்,ராகுல் போன் பண்ணி க்ரௌண்ட்க்கு வர சொன்னான்,போற வழியில நான் அந்த பையன பார்த்தேன் ,ராகுல் தங்கச்சி ஸ்வாதி அவன் கூட பைக்ல போறத பார்த்தேன்,நான் அப்போ பார்த்தேனு சொன்னப்ப ராகுல் என்னை நம்பல அதனால அவன என் கூட பைக்ல உட்கார வச்சிட்டு அவன் பின்னாடியே போனோம்,பாவம் ராகுல் அழுதுட்டே வந்தான்,ஒரு காட்டுக்குள்ள அவனோட பைக் போச்சு,நாங்க பைக்லயே போனா சத்தம் கேட்டு ஓடிடுவாங்கன்னு,என்னோட பைக்க தூரத்துல நிறுத்திட்டு அவங்க பின்னாடியே போனோம்,ஸ்வாதிய ஒரு கூடாரத்துக்குள்ள கூட்டிட்டு போனான்,அவன பிடிச்சி சரமாரியா நான் அடிச்சேன்,ராகுல் ஸ்வாதிய அடிச்சிட்டு ஏன்டி இப்படி பண்ணனு அவள பார்த்து அழுதான்,நான் அடிச்சதுலயே அந்த பையன் இரத்தத்தோட கீழே விழுந்துட்டான்,அவனோட போன் கீழே விழுந்துடுச்சு,ராகுல் ஸ்வாதிய கூட்டிட்டு போய்ட்டான்,ஸ்வப்னா போன் பன்னதால நானும் அவன அப்படியே விட்டுட்டு பைக் எடுத்துட்டு வீட்டிற்கு வந்துட்டேன்,ஸ்வப்னா குட்நைட் சொல்லிட்டு போன் வச்சா,அப்போதா அவன அப்டியே விட்டுட்டு வந்துட்டோமேனு தோனுச்சு,உடனே பைக் எடுத்துட்டு போய்ட்டு அவன பார்த்தேன்,அவனோட தலை தனியா கிடந்துச்சு,அறுவாமனை ரத்தத்தோட பக்கத்துல கிடந்துச்சு,அதை பார்த்ததும் நான் அதிர்ச்சியில அங்கேயே உட்காந்துட்டேன்,கொஞ்ச நேரத்துல போலிஸ் அங்கே வந்துட்டாங்க,நான் அங்கேயே இருந்ததால ,நான்தான் கொலை பன்னிற்பேனு என்னை கைது பண்ணிட்டாங்க,ஸ்வப்னா போன் பண்ணுனா,போலிஸ் என்னை பேசவே விடலே,ஸ்வப்னாவ ஸ்டேஷன் வந்து பேச சொன்னாங்க,ஸ்வப்னா ஒரு வக்கீல் ,என்னை போலிஸ் ஆக சொல்லிட்டே இருப்பா,அவ சொன்னத கேட்றுந்தா நா இப்போ இங்க ஸ்டேஷன்ல கைதியா இருக்க தேவையில்ல,ஸ்வப்னா ஸ்டேஷன் வந்து ஜாமின் வாங்கினா,வெளிய வந்து அவள கட்டிப்பிடிச்சு அழுதேன்,நான் பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டேன் ஸ்வப்னா,நான் எதுவும் பண்ல ஸ்வப்னானு,நடந்த எல்லாத்தையும் ஸ்வப்னாட்ட சொன்னேன், நான் இருக்கேன்டா உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லனு என் கைய பிடிச்சிக்கிட்டா ஸ்வப்னா,நானும் ஸ்வப்னாவும் அவன அடிச்ச இடத்துக்கு போனோம்,டைம் அதிகாலை 3 மணி ,நான் அவன அடிச்ச அப்போ ,அவனோட போன் கீழே விழுந்தது நியாபகம்,இருந்துச்சு,நான் ஸ்வப்னாட்ட அத சொன்னேன்,அத பஸ்ட் தேட சொன்னா,போன் அங்கேயே இருந்துச்சு,செடிகுள்ள இருந்ததால அத போலிஸ் எடுக்காம போய்ட்டாங்க,அதுல இருக்க வீடியோஸ் பார்த்தோம்,நிறைய பொண்ணுங்க கூட அந்த பையன் தப்பா இருந்த வீடியோஸ் இருந்துச்சு,அதுலயே ஆறு மணிநேரத்திற்கு முன்னாடி ஒரு வீடியோ இருந்துச்சு, அந்த வீடியோல ஸ்வாதி அவன தாறுமாறா வெட்டிற்தா,ஆறு மணி நேரத்திற்கு ஒரு நிமிஷம் முன்னாடி ஒரு போட்டோ யாரோ எடுத்துற்காங்க அந்த போட்டோல ஒரு எட்டு வயசு பையன் செல்பி எடுத்துற்கான், ஸோ அதற்கு அப்புறம் அவன் பிணத்த பார்த்துட்டு போனை அப்படியே கீழே போட்டுட்டு ஓடிற்கான்,அவன் கீழே போட்ட வேகத்துல கேமிரா வீடியோவா மாறி அந்த செடில விழுந்துற்கு,அதற்கு அப்புறம் வந்த ஸ்வாதி அவன அறுவாளாள தலைய வெட்டிற்கா,இதுதான் நடந்துற்கும்னு ஸ்வப்னா என்கிட்ட சொன்னா ,உடனே ஸ்வாதி வீட்டிற்கு போனோம்,அங்கே ஸ்வாதி பிணமா இருந்தா,ராகுல தனியா கூப்பிட்டு நானும் ஸ்வப்னாவும் என்ன நடந்துச்சுனு கேட்டோம்,ராகுல் சொல்ல ஆரம்பிச்சான்,..

நான் ஸ்வாதிய அடிச்சி அவள வீட்டுக்கு கொண்டு வந்தேன்,அவளுக்கு ஒரு புது நம்பர்ல இருந்து வீடியோ மிசேஜ் வந்துச்சு அதுல அந்த பையனும் வேற பொண்ணும் ஒன்னா இருந்த வீடியோ இருந்துச்சு,அத பார்த்துட்டு அண்ணா நான் ஏமாந்துட்டேனு அழுதா ஸ்வாதி,அவள சமாதனப்படுத்திட்டு ,நான் சாப்பாடு வாங்க கடைக்குப் போனேன்,திரும்ப நான் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது அவ இல்ல,உனக்கு போன் பண்ணேன் பிசினு வந்துச்சு,பக்கத்துல இருக்கவங்க அறுவாமனையோட உன் தங்கச்சி வெளியே போனாடானு சொன்னாங்க,நான் அந்த இடத்திற்கு போய் பார்க்கும் போது அவளோட தலைய வெட்டி இவ கைல வச்சிர்ந்தா,யாருக்கும் தெரியாம அவள வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன்,இங்க வந்தவ ,குளிக்க போறேனு சொல்லிட்டு தூக்கு போட்டுக்குட்டா மச்சானு என் மேல சாய்ந்து அழுதான் ராகுல்,.அந்த வீடியோ அனுப்புன நம்பரக்கு கால் பண்ணியான்னு நான் கேட்டேன்,பண்ணேன் மச்சி அந்த நம்பர் ஸ்விட்ச் ஆப்னு ராகுல் சொன்னான்,அந்த பையனால பாதிக்கப்பட்ட பொண்ணுதா அந்த வீடியோ அனுப்பிற்பா,அவள தேட வேண்டாம் விட்றுவோம்னு ஸ்வப்னா சொன்னா....

மறுநாள்,

ஸ்வப்னா அந்த போன்ல இருந்த வீடியோவ போலிஸ்ட்ட ஒப்படைச்சிட்டு என்னை நிரபராதினு நிரூபிச்சா,...வெளியே வந்ததும் ஸ்வப்னா கைய பிடிச்சிக்கிட்டேன்,இனி எந்த பிரச்சனையா இருந்தாலும் முதல்ல என்கிட்ட சொல்லுனு ஸ்வப்னா சொன்னா,..

பிரச்சினைக்கு போகாதடானு சொல்ற பொண்ணுங்க மத்தியில
பிரச்சனைக்குப் போ ஆனா என்னையும் கூட்டிட்டு போனு சொல்ற பொண்ணுங்க ரொம்ப கம்மிங்க!!!

அன்புடன்,
டேவிட்

கனவே கலையாதேDonde viven las historias. Descúbrelo ahora