இந்தக் கதை ,கதையின் நாயகன் கூறுவது போல அமைந்திருக்கும்..
ஹாஸ்பிட்டல்ல உயிர் போனவன் மாதிரி உட்கார்ந்திருக்கேன்,..
என் பேரு ஷாம்,வாழ்க்கையில எல்லாருக்கும் அவங்க நினைக்கிறது எல்லாம் கிடைக்கிறதில்லங்க,என்னடா எல்லாரும் சொல்ற டயலக் சொல்றேனு பார்க்கிறிங்களா,உண்மைதாங்க,ஆனால் என் வாழ்க்கையில அப்படி இல்லங்க,எல்லாம் எல்லாமே கிடைச்சிது எனக்கு,என்னோட பிரியாவையும் சேர்த்துதாங்க,யாருடா அது பிரியா அதானே நினைக்கிறிங்க,பிரியாவை தேவதைன்னு சிம்பிளா சொல்ல முடியாது,கொஞ்சம் மாத்தி தர்ம தேவதைன்னு சொல்லலாம்,..நான் பிரியாவை முதன்முதல்ல ஒரு அனாதை ஆசிரமத்துல பார்த்தேன்,எனக்கு என்ன அங்க வேலை அப்டினு நீங்க நினைக்கலாம்,அன்றைக்கு மே 1.என் தல பிறந்தநாள் அன்றைக்கு மட்டுமாவது என்னால முடிஞ்ச சின்ன உதவி செய்ய ஆசிரமம் போனேன்,ப்ப்ப்பா என்ன பொண்ணுங்க அவ,இந்த காலத்துலயும் ஒரு அன்னை தெரசாவானு ஒரு நிமிஷம் என்னை அப்படியே உறைய வச்சிட்டா,நான் எப்பவும் தல பிறந்தநாள் அப்ப மட்டும் ரொம்ப பக்தியா இருப்பாங்க,அதே நாள்ல பிரியாவை பார்த்தது எனக்குதான் அந்த பொண்ணு அப்டினு கன்பார்ம் பண்ணிக்க சொல்லுச்சு என் மனசு,உடனே என் ப்ரண்ட் கூப்ட்டதும் நான் அங்கிருந்து போயிட்டேன்,சத்தியமா பிரியாவை விட்டு போக மனசே இல்லாமதாங்க போனேன்...
அடுத்தநாளே பிரியாட்ட பேசனும் அப்டினு ஆசிரமம் முன்னாடி போய் நின்னேன்,ஆனால் பிரியா வரவே இல்லை,ஒரு நாள் முழுவதும் அங்கேயே நின்னுட்டு இருந்தேன்,நைட் 9 மணி ஆனது,உடனே ஆசிரமம் உள்ளே போய்ட்டு பிரியாவை பத்தி விசாரிச்சேன்,நான் ஒரு வயசுப் பையன் அப்டின்றதாலே டீடியல்ஸ் எதுவும் சொல்லல...
ஒரு வாரம் கடந்துப்போச்சு பிரியாவோட நினைப்பிலேயே,அந்த ஒரு வாரம் முழுவதும் நான் என் பைக்ல போகாத லேடீஸ் காலேஜ் வாசலே இல்ல,ஆனா பிரியாவை மட்டும் பார்க்கவே இல்ல...
எல்லாம் முடிஞ்சுப் போச்சா இனி பிரியாவை பார்க்கவே முடியாதான்னு நினைச்சிட்டே சோகத்தைப் போக்க,காதல்மன்னன் படத்துக்கு போனேன்,படத்துல சிலோத்துமா கூட என் பிரியாவை போல தெரிஞ்சாங்க,எங்க பார்த்தாலும் பிரியாவோட முகம் மட்டும்தான் தெரிது,கண்ணை மூடினாலும் கண்ணை திறந்தாலும் பிரியா பிரியா பிரியா மட்டும்தா...,

YOU ARE READING
கனவே கலையாதே
Romanceகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...