இன்றைய காலகட்டத்தில் காதலை வெளிப்படுத்தும் விதம் அநாகரிகமாக உள்ளது, காதல் புனிதமான ரசிக்கத்தக்க ஒன்று,ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் மட்டுமே காதலின் அர்த்தம் புரியாதவர்களாய் ,தவறு செய்து கொண்டு வாழ்கின்றனர்,காதல் அது வாழ்க்கையின் மறு பக்கம் முழுவதும் இன்பம் நிறைந்து வாழ கடவுள் மனிதர்க்கு கொடுத்த மிக பெரிய வரம்,அந்த வரத்தினை அனைவராலும் பெற்றுவிட முடியாது,அந்த வரம் பெற்ற செழியன் என்ற இளைஞனின் காதல் பற்றி காண்போம்,செழியன் படிக்க எழுத தெரிந்த அளவுக்கு கல்வி கற்றவன்,பூங்குழலி கல்லூரி படிப்பவள்,இவர்கள் இருவரும் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும்போது,செழியனுக்கு பூங்குழலி மீது அன்பு வளர்ந்தது,அதனை பள்ளி வகுப்பு நேரத்தின் போது பூங்குழலியிடம் கடிதத்தில் ,எனக்கு உன் மீது அன்பு உள்ளது ,உனக்கும் என் மீது அன்பு வரும், என்று நம்பிக்கையோடு எழுதியிருந்தான்,அதனைப் படித்த பூங்குழலி எதுவும் புரியாதவளாய்,வந்தால் சொல்கிறேன் என்றாள்,சிரித்துக் கொண்டே இருந்தான் செழியன் பூங்குழலியைப் பார்க்கும் போதெல்லாம்,பத்தாம் வகுப்பின் இறுதி தேர்வு, அனைவரும் தேர்வு எழுதிக்கொண்டு இருந்தனர்,பூங்குழலி நுழைவுச்சீட்டை தொலைத்துவிட்டதாக ஆசிரியரிடம் கூறி அழுது கொண்டு இருப்பதை செழியன் கவனித்தான்,தந்திரம் செய்வதாக எண்ணி முட்டாள் தனமாக,நான்தான் அவளது நுழைவுச்சீட்டினை கிழித்தேன்,அவளை தேர்வு எழுத அனுமதியுங்கள்,என்று அழுதான்,அவன் பொய் சொல்கிறான் என்பதை பூங்குழலி நன்கு அறிவாள்,அவளது பெற்றோர் அவள் படித்தாள் திருமணம் செய்து கொள்ள ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று அவளது நுழைவுச்சீட்டினை எரித்துவிட்டனர்,,,,பூங்குழலி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டாள்,செழியன் கூறிய பொய் அவனது வாழ்க்கையில் கல்வியை அழிந்துவிட்டது,தேர்வு முடிந்த பின்பு செழியனின் காலில் விழுந்து மன்னிப்புடன் நன்றி கூறி அழுதாள்,அவளது பெற்றோர் அவளை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவதாக கூறினாள்,நான் படிக்க வேண்டும் என்று கதறி அழுதாள்,செழியன் அவளது கண்ணீரை துடைத்து நான் படிக்க வைக்கிறேன் அழுகாதே பூங்குழலி என்றான்,யாரும் இல்லாத செழியன் ,பூங்குழலியை உலகம் என்று எண்ணினான்,அவனது அன்பு வளர்ந்தது, பூங்குழலி பெற்றோரை பற்றி காவல்துறைக்கு செழியன் கூறினான்,அவர்கள் கைது செய்யப்பட்டனர்,பூங்குழலியை செழியன் உணவகத்தில் பணியாற்றி படிக்க வைத்து கொண்டுள்ளான்,தற்போது வக்கீல் படிப்பின் இறுதி ஆண்டு படிப்பை படித்து வருகிறாள்,செழியனின் பள்ளியில் ஆரம்பித்த அன்பிற்கான பெயரை,20 வயது கடந்தவுடன் அது காதல் என்பதை உணர்ந்தான்,கூறினால் அவளது படிப்பு கெட்டுவிடும் என்று அவனுள்ளேயே அவளை ரசித்தவனாய் உள்ளான்...
வருடம் சென்றது பூங்குழலி படிப்பின் முடித்து வக்கீல் ஆக வாதாடும் முதல் வழக்கு,அதனை கண்டு ரசிக்க செழியனும் சென்றான்,அவளது முதல் வழக்கு அவளது பெற்றோர் மீதான குழந்தை திருமணம் வழக்கு,திறம்பட வாதாடி இனி எங்கும் இந்நிலை ஏற்பட கூடாது இவர்களுக்கு கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் பாடமாக அமையட்டும் என்று அவளது வாதத்தினை முடித்தாள்,முதல் வழக்கின் வெற்றியைப் பற்றி கேட்ட பத்திரிக்கை முன்பு,இவை அனைத்திற்கும் காரணம் என் தாய் தந்தையுமாய் என்னைப் படிக்க வைத்து என் கனவை நினைவாக்கிய என் வருங்கால கணவன் செழியன்தான் காரணம் என்று பெருமையாக சொன்னாள்,செழியன் இன்பஅதிர்ச்சியில் மூழ்கினான்,,வீட்டிற்கு சென்ற பின் பூங்குழலி செழியனிடம் கடிதம் ஒன்றை கொடுத்தாள்,அதில் எனக்கு உன் மீது அன்பு உள்ளது,உனக்கு உள்ளதா என்று எழுதி இருந்தாள்,அதைப் படித்த பின் அன்பு காதலாக மாறி இரண்டு வருடங்கள் சென்று விட்டது,திருமணம் செய்து கொள்ளலாமா என பதில் அனுப்பினான் ,அதைப் படித்து அவன் மீது சாய்ந்தவளாய் சரி என்று பதில் அனுப்பினாள் பூங்குழலி...இவர்களது பணியும் ,காதல் கடிதமும் தொடரும்..
அன்புடன்,
டேவிட்
BẠN ĐANG ĐỌC
கனவே கலையாதே
Lãng mạnகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...