சிலருக்கு காதல் என்பது விளையாட்டா இருக்கும்,பலருக்கு காதல் வாழ்க்கையா இருக்கும், ஆனால் உண்மையிலேயே காதல் என்பது ஒரு வேதம் ,அந்த வேதத்தை புரிந்து தெரிந்து கொண்டவர்கள் மட்டுமே காதலை தனக்குள் வளர்த்துக் கொண்டு அந்த காதலை வாழ்க்கை முழுவதும் அவர்களோடு அழைத்துச் செல்கின்றனர்...அஜித் ,வாழ்க்கையில் பலரால் ஏமாற்றப்பட்டு இந்த சமூகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க துடிக்கும் ஒரு இளைஞன்,அவனுக்கென உறவினர்களோ நண்பர்களோ கிடையாது,அஜித் சமூக செயல்களில் ஈடுபடுவதால் ,அஜித்தின் குடும்பத்தினர் அவனது செயல்களில் ஈடுபடவில்லை,இருப்பினும் தன்னால் இந்த நாட்டிற்கு நல்லன செய்ய முடியும் என்று அவன் மேல் மட்டும் நம்பிக்கை கொண்டு செயல்பட்ட ஒரு இளைஞன்,..
அஜித்தின் சமூக சேவை அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுப்பது,இதனால் அவனைச் சுற்றி ஆயிரம் பிரச்சனைகள் எப்போதும் இருக்கும்,,
அஜித்திற்கு எவ்வாறு சமூக நலன்கள் ஒரு கண்ணோ அதுபோல அஜித்தின் காதல் மற்றொரு கண்,ஷாலினி ,தேவதையின் உருவம்தான் ஷாலினி,தேவதையை பற்றி வர்ணிக்க வார்த்தை தேவையில்லை,...அஜித் கல்லூரியில் படிக்கும் போது,ஷாலினி அஜித்தின் ஜீனியர்,அஜித்தின் கல்லூரியின் கடைசி நாளன்று ,ஜீனியர் சீனியரை சிறப்பிக்கும் பொருட்டு பேர்வெல் நடந்தது,அன்று ஷாலினி சீனியர்க்காக ஒரு கவிதை ஏற்பாடு செய்து அனைவரின் முன்னும் படித்தாள்,கல்லூரியிலும் சமூக வேலைகளில் அஜித் ஈடுபட்டதால் அன்றுதான் அஜித் ஷாலினியை முதல்முறையாக கண்டான்,பார்த்த அந்த நொடியிலே அஜித் அவனது மனதை அழகின் ஓவியம் நிறைந்த ஷாலினியிடம் பறிகொடுத்தான்,உன்னைப் பார்த்த பின்பு நான்,நானாக இல்லையே என்று அஜித் அவனை மறந்து ஷாலினியைக் கண்டு பாட ஆரம்பித்தான்,அனைவரும் ஆச்சர்யத்தில் அஜித் ஷாலினியை பார்க்க,நினைவிற்கு வந்தான் அஜித்,அதன்பின் பேர்வெல் முடிந்ததும் அஜித் ஷாலினியிடம் பேச சென்றான்,பெண்கள் பார்த்தவுடன் காதல் கொள்ளும்படி உள்ள அஜித்தைக் கண்டு பயந்து மறைந்தாள் ஷாலினி,ஷாலினியை வெளியே அழைத்து,ஷாலினியின் கண்ணைப் பார்த்து அஜித்,இந்தக் கண்களை நான் என் வாழ்க்கை முழுவதும் பார்க்க வேண்டும்,என அஜித் அவனுடைய காதலை தெரிவித்தான்,ஆனால் ஷாலினி,எனக்கும் உன்னை பிடிக்கும் ஆனால் நீ சமூக தொண்டு செய்வது எனக்கு பிடிக்கவில்லை ,அது உன் உயிருக்கு ஆபத்தாக முடியும் அதை விட்டுவிடு என கூறினாள் ஷாலினி,கோபத்தோடு அங்கு இருந்து சென்றான் அஜித்,.
YOU ARE READING
கனவே கலையாதே
Romanceகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...