தியாகு கண் திறந்து பார்த்தான்,அவன் முன்னே அவனைப் பாரத்து கதறி அழுதவாறு அவனது தாய்,அவனைச் சுற்றி அவனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவன் உயிர் பிழைப்பானா இல்லையா என ஏங்கிக் கொண்டிருக்கும் நிலை மருத்துவமனை முழுவதும்,,,,,,
இரண்டு நாட்களுக்கு முன்......
தியாகு கல்லூரி மாணவன்,எப்பவுமே ஜாலியா இருக்கிற ஒரு கேரக்டர் தியாகு,அவனோட விருப்பத்தை எப்பவும் மறுக்காத அவனோட பெற்றோர்கள்,அவனை சுத்தி எப்பவுமே இருக்க அவனோட ப்ரெண்ட்ஸ்னு தியாகு வாழ்க்கை அழகா போய்ட்டு இருந்துச்சு,ஒரு நாள் எப்பவும் போல காலேஜ்க்கு அவனோட நெருங்கிய நண்பன் டேவிட் கூட பைக்ல போய்ட்டு இருந்தான்,ட்ராபிக் வந்துச்சு,அந்த ட்ராபிக் அவனோட வாழ்க்கையையே திருப்பி போட்டுடும்னு அவன் அப்ப நினைக்கல,டேவிட் வாட்டர்கேன் வாங்கி வரண்ணு சொல்லிட்டு இறங்கிப்போனான்,ட்ராபிக் க்ளியர் ஆச்சு,டேவிட்க்காக ஓரமா வண்டிய நிறுத்தினான் தியாகு,ஹெல்ப் ஹெல்ப் என்று ஆம்னி வண்டியில் ஒரு பெண் கத்திக்கொண்டே செல்வதை இருவரும் கேட்டனர்,தியாகு டேவிட்ட காலேஜ் போலாம் மச்சி டைம் ஆயிடுச்சி என்றான்,டேவிட் சரி மச்சி நான் பைக் ஓட்றேன் நீ உட்காரு என சொல்லிவிட்டு ,பைக்கை ஆம்னி வண்டி சென்ற வழியில் ஓட்டினான் டேவிட்,தியாகு மச்சி நமக்கு இது தேவையில்லாத வேலை வா காலேஜ் போலாம் ,என கத்தினான்,எதுடா தேவையில்லாத வேலை உன் வீட்ல இருக்க பெண்கள் மட்டும்தான் பெண்களா இவங்களா பெண்கள் இல்லையா என கோபப்பட்டான் டேவிட்,ஆம்னி சுற்றிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பாதையில் சென்று கொண்டிருந்தது,பின்தொடர்ந்தே சென்றான், இரவு ஆனது,ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவில் யாரும் இல்லாத ஒரு குகைக்குள் சென்று ஆம்னி நின்றது,ஆம்னியில் இருந்து நான்கு பேர் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு இறங்கிச் சென்றனர்,அவர்களுக்கு தெரியாமல் அவர்களை பின் தொடர்ந்தனர் தியாகு மற்றும் டேவிட், உள்ளே கடத்திச்சென்ற பெண்ணின் முகத்தைக் கண்டனர்,அந்த பெண் எனக்கு தெரிந்த காவல் அதிகாரியின் பெண் என டேவிட் தியாகுவிடம் கூறினான்,தியாகுவும் ஆமா மச்சி எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்று கூறினான்,இப்ப என்னடா பண்றது எதுக்குடா இவளை தூக்கினானுங்க என்று தியாகு டேவிட்டிடம் கேட்டான்,அந்தக் கூட்டத்தின் தலைவன் வெளியே வந்தான்,நீங்கள் வந்ததை யாரும் பார்க்கலையே என்று அவன் கூட்டாளிகளிடம் கேட்க, இல்லை என்று கூறினர்,இவளைக் கடத்த நமக்கு உதவிய இவள் காதலனனின் நண்பனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்துவிடுங்கள் என்று ஆணையிட்டான்,இவளை வைத்து இவள் தந்தையின் நிம்மதியை சீர்குலைக்க வேண்டும்,என்னை சிறையில் இவளது தந்தை அடித்த ஒவ்வொரு அடிக்கும் ,இவளை சித்திரவதை செய்து இவளுடைய தந்தைக்கு அதனை தெரிவியுங்கள் என்றான் தலைவன் ,டேவிட் தியாகுவிடம் இப்போது புரியுதா மச்சி ,இவளை இப்படியே விட்டுட்டு போ சொல்றியா என்று கத்தினான்,இவளை எப்படியாவது காப்பாத்தனும் மச்சி அந்த போலிஸ் ரொம்ப நல்லவன் மச்சி,நேர்மையான போலீஸ் எல்லாரையும் இவனுங்க இப்படி அடக்கிட்டா ,நாடு நாசமா போய்டும்டா என்று கத்தினான் டேவிட்,அனைவரும் உறங்கினர்,டேவிட் மற்றும் தியாகு இருவரும் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியே சென்றனர்,அந்த பெண்ணின் கைகளில் கட்டி இருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு ,நாங்கள் உன்னை காப்பாற்ற வந்துள்ளோம் பயப்படாமல் வா என்று அவளை அழைத்துச் சென்றனர்,செல்லும் வழியில் பைக்கில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் பாதியிலேயே பைக்கை போட்டுவிட்டு மூவரும் ஓடினர்,பகல் ஆனது,மெயின் ரோட்டினை அடைந்த அவர்கள் ஒரு டீ கடையில் அமர்ந்து டீ குடித்தனர்,எப்படி நீ இவங்கள்ட்ட மாட்டின என்று டேவிட் கேட்டான்,அவளின் பெயரோடு ஆரம்பித்தாள்,ரம்யா நான் , நா தனியார் காலேஜ்ல படிக்கிறேன்,நானும் என் கூட படிக்கிற பையன் அரவிந்தும் இரண்டு வருஷமா லவ் பண்றோம்,நேற்று அரவிந்த் ப்ரெண்ட்க்கு பர்த்டே அதனால என்னையும் வர சொல்லியிருந்தான்,அங்க நானும் அரவிந்தும் மட்டும்தான் இருந்தோம்,திடீர்னு அரவிந்த் ப்ரெண்ட் கூட நாலு ரவுடிக வந்து அரவிந்தை என் கண் முன்னாடியே சாகடிச்சிட்டு என்னை கடத்திட்டாங்க,அப்றம்தான் நீங்க வந்திங்க என்று அழுது கொண்டே கூறினாள்,திடீரென அந்த ரவுடிகள் அங்கு வர ,மூவரும் ஓடினர்,வழியில் வந்த வண்டியில் தியாகுவையும் திவ்யாவையும் ஏற்றிவிட்டு டேவிட் ஏறும்போது ரவுடி வீசிய அறுவா அவனது காலை வெட்ட கீழே விழுந்தான்,போங்க போங்க ,மச்சான் பொண்ண பத்திரமா சேர்த்திடுடா என்று கத்திக் கொண்டே கீழே விழுந்தான் டேவிட்,ரவுடிகள் டேவிட்டை சரமாரியாக வெட்டினர் நண்பனின் சாவை கண்ணெதிரே கண்ட தியாகு அவனை தூக்க சென்றான் ரம்யா உன்னையும் கொன்னுடுவாங்க ப்ளீஸ் போகாதிங்க என்று கதறினாள்,உன்னாலதான்டி இது எல்லாம்,என் நண்பன் போயிட்டான் ஐயோ வேணாம் வேணாம் சொன்னேனே மச்சான் என்று கத்தி அழுதான் தியாகு,ரம்யா வீட்டிற்கு அழைத்துச் சென்றான் ,அங்கு அவளது உறவினர்கள் அனைவரும் சூழ்ந்திருக்க தியாகுதான் ரம்யாவின் காதலன் என்று தவறாக எண்ணி அவனை அனைவரும் சரமாரியாக அடித்தனர்,எங்க வீட்டு பொண்ண இழுத்துட்டு போனேல இப்போதே தாலிய கட்டுடா என்று சொல்லி அடித்தனர்,ரம்யா இல்லைப்பா நான் சொல்றத கேளுங்கப்பா என்றாள்,அனைவரின் முன்னும் நடந்ததை கூறினால் உன் குடும்பம் தற்கொலை செய்துக்கொள்ளும்,எதுவும் இப்ப சொல்லாத என்று ரம்யாவின் காதில் சொன்னான்,அவனை அடித்து ரம்யாவின் கழுத்தில் தாலி கட்ட வைத்தனர் உறவினர்கள்,அதன்பின் அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்,...ரம்யா அவளது தந்தையிடம் நடந்த அனைத்தையும் கூறி அழுதாள்,உடனே அந்த ரவுடிகள் இருந்த இடத்திற்கு காவல் படையோடு சென்று கைது செய்தனர்..டேவிட் சரமாரியாக வெட்டியநிலையில் இறந்து கிடந்தான், அவனுடைய பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு நன்றி கூறி அழுதனர் ரம்யாவும் அவளுடைய தந்தையும்,....
இன்று,
மருத்துவமனையில் தியாகு உயிர்பிழைத்தான்,அருகில் அவனுடைய கையை பிடித்தவளாய் தியாகு கட்டிய தாலியோடு ரம்யா அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்......
காதல்,இருவர் மனம் விரும்பி நடக்கும் ஒன்று ,ஆனால் திருமணம் ,இரண்டு குடும்பங்களின் மனம் விரும்பி நடக்கும் ஒன்று..,
தியாகு திருமணம் அவனுடைய நண்பனின் தியாகத்திற்காக நடந்த திருமணம்,இரு மனம் இணைந்து ஒன்றாக வாழ்வார்கள் என நம்புவோம்!!!
அன்புடன்,
டேவிட்
JE LEEST
கனவே கலையாதே
Romantiekகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...