தீனா வீட்டுக்கும் நாட்டுக்கும் எந்த வகையிலும் இதுவரை உதவாத ஒருத்தன்,ஆனால் பசங்க கூட சேர்ந்து சுத்துறது,பொறுக்கித்தனம் பண்றது ,காலேஜ்க்கு போற வர பொண்ணுங்கள கலாய்க்கிறது,போலீஸ் ஸ்டேஷன மாமா வீடு போல நினைச்சி,அடிக்கடி போய்ட்டு வரதுனு இவனோட வாழ்க்கை ஆள் இல்லாத ப்ளே க்ரௌண்ட் மாதிரி,இவன கேட்க யாரும் இல்லாம தாருமாறா சுத்திட்டு திரிஞ்சான்,ஏன் இவ இப்படி ஆனான்னுலா யோசிக்காதிங்க,இவனோட பெற்றோர் ரொம்ப அன்பானவங்க,ஒரே பையன்றதால கொஞ்சம் ஓவரா அன்பு வச்சிட்டாங்க,அதனால இப்படி திரிறான் தீனா,இவனோட வாழ்க்கை இப்படியே இருக்காது ,
கண்டிப்பா மாறும் அந்த சூழ்நிலை எப்படி உருவாகிறது என்பதே இந்தக் கதை....எப்பவும் போல தீனா காலைல அம்மா கைல பெட் காபி குடிச்சிட்டு,அவனோட ப்ரெண்ட்ஸ பார்க்க குட்டிச்சுவருக்கு போயிட்டான் ,வீட்டுக்கு பக்கத்துலயே ஸ்கூல் இருக்கிறதால இல்லாத குட்டிச் சுவர இவனுங்களா உருவாக்கி,ஸ்கூல்க்கு போற வர பொண்ணுங்கள கலாய்ப்பானுங்க,ஒரு கேங்ல நாலு தருதல இருந்தா கண்டிப்பா ஒரு தங்கமானவன் இருப்பான்,தீனாவோடவும் ஒருத்தன் இருந்தான் தயாளன்,ரொம்ப நல்லவன்,ஆனா தீனாவோட வாழ்க்கையில பெரிய பிரச்சனையா வரப்போறவனே தயாதான்,தயா எப்பவும் குட்டிச்சுவருக்கு வர மாட்டான்,பெண்களை மதிக்க தெரிந்தவன் அதனால தீனாவும் அவனோட ப்ரெண்ட்ஸ்லா பெண்களை கலாய்க்றத தப்புனு சொல்லுவான் தயா...
எப்பவும் போல அன்றைக்கு காலைல ஒரு பொண்ண தீனாவோட நண்பன் கலாய்ச்சிட்டான்,அந்த பொண்ணு அவளோட தம்பிய ஸ்கூல்ல விட போயிருந்தா,அதனால அவன் கலாய்ச்சத பெரிசா எடுத்துக்காம,அவளோட தம்பிய க்ளேஸ்ல விட்டுட்டு வெளியே வந்தா,வெளிய வந்த பொண்ண திரும்ப தீனாவோட ப்ரெண்ட் கலாய்ச்சான்,அந்த பையன் பக்கத்துல போனா அந்த பொண்ணு,உங்கள்க்குலா யாரு ஸ்பான்சர் பண்றதுனு கேட்டா அந்த பையன்ட்ட,அவன் தீனாவை கை காட்டினான்,உடனே அவள் அவளோட செருப்ப கழட்டி தீனாவை செவில்லயே அடிச்சா,தீனா அப்படியே உறைஞ்சு போய் நின்னுட்டான்,அந்த இடமே ஒரு நிமிஷம் அமைதியா ஆயிடுச்சு,தீனா அப்பா எதிர்பாராத விதமா அங்க வர,ஒரு பொண்ணு தன்னோட பையன செருப்பால அடிக்கிறத பார்த்து அப்படியே நெஞ்சுல கை வச்சிட்டு விழுறாரு,தீனாவை அடிச்சிட்டு இனி எவனையாவது இங்க பார்த்தேன் டெய்லி பிய்யும் செருப்பு அப்படினு சொல்லிட்டு போனா,வெட்கமே இல்லாம தீனாவும் அவ பின்னாடியே போனான், தயா தீனாவோட அப்பாவ ஹாஸ்பிட்டல்ல சேரத்தான்,அந்த பொண்ணு மகளிர் காவல் நிலையத்திற்கு உள்ளே போனா,அவள் யார்னு தீனா பக்கத்துல விசாரிக்க,அந்த பொண்ணு புதுசா வந்துற்க எஸ்.ஐ தீபானு தெரிஞ்சிக்கிறான்,உடனே தயா தீனாவுக்கு போன் பண்ண,தீனா ஹாஸ்பிட்டல் போய்ட்டு அவனோட அப்பாவ பார்க்கிறான்,அவனொட அப்பா,தீனாவுக்கு ஆறுதல் சொல்றது போல உனக்கு கல்யாணம் பண்ற வயசு வந்தாச்சு,உன்ன செருப்பால அடிச்சி அசிங்கப்படுத்துன பொண்ண காதலிச்சி கல்யாணம் பண்ற,இதுதான் இனி உன்னோட வேலை,நீ திரும்ப என்னை பார்க்கும் போது அந்த பொண்ணோட வந்து பாருன்னு ,தீனா அப்பா சொல்ல,அவளை காதலிக்க ஆரம்பிச்சு கனவுல ஒரு டூயட்டே பாடிட்டேன்ப்பா,உங்க ஆசைய நான் நிறைவேற்றுவேன்னு,போருக்கு போரது போல சத்தியம் பண்ணிட்டு போனான்,அன்று இரவே மகளிர் ஸ்டேஷன் முன்னாடி ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அவன் ப்ரெண்டஸ் கூட தங்கினான், அன்று இரவு முழுவதும் தீபா கையால அடி வாங்கினத நினைச்சி குடிச்சி புலம்பினான்,இவன் கூட சேர்ந்து இவனோட நண்பர்களும் ஜால்றா போட ஒரே கூத்து அங்க,தயா மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தான்,குடிச்சவன் எப்பவும் தெளிவா இருக்கவன்ட்டதா புலம்புவான்,தீனா தயா மடியில படுத்துக்கிட்டு அவ என்னோட அஞ்சல மச்சானு நைட் முழுக்க புலம்பிட்டே இருந்தான்,அந்த இரவு போனது,..
அதற்கு அப்புறம் தீபா விசாரணைக்கு எங்க போனாலும் அவ பின்னாடியே தீனா சென்றான்,தீனாவோட நோக்கத்தை தெரிந்தும் தீபா,அவனை திட்டாமல் அமைதியாக அவன் அவளை பின் தொடர்வதை எதுவும் கூறாமல் அனுமதித்தாள்,நாட்கள் சென்று கொண்டிருந்தது,தீபா தீனாவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்,அவனை மாற்ற எண்ணினாள்,அவள் விசாரணைக்கு செல்லும் அனைத்து இடங்களிலும் தீனா அவளருகிலேயே இருப்பதால்,கைதிக்கு கூறும் அறிவுரையை தீனாவிற்கு கேட்கும்படி அவனைப் பார்த்தே கூறுவாள்,அவள் பின்னே சுற்றிய ஒரு மாதத்தில் தீனா அவள் கூறியது போல் மாற ஆரம்பித்தான்,காவல்நிலையத்தின் உள்ளே போகும் போதும் வெளியே செல்லும் போதும் தீனாவை கண்டு புன்னகைத்தாள்,வாழ்க்கையை உணர ஆரம்பித்தான் தீனா,அன்று இரவு தீபா ஸ்டேஷனில் விசாரணையில் இருந்தாள், இரவு 2 மணி அதனால் தீனாவும் தயாவும் ஸ்டேஷன் முன்னே அவனது வீட்டின் வெளியே உட்கார்ந்து விட்டனர்,தீனா தயாவிடம் இப்போதா மச்சி வாழனும்னு ஆசையா இருக்கு,என் அஞ்சல இப்போலா என்னை பார்த்து சிரிக்கிறா மச்சி,என் அஞ்சலடா அவ என்று கூறினான்,செருப்பால அடி வாங்கினா லவ் வரும்னு உன்ன பார்த்துதா மச்சி தெரிஞ்சிக்கிட்டேனு,தயா தீனாவிடம் சிரித்துக்கொண்டே கூறினான்,திடீரென ஸ்டேஷனில் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டது,அதைக் கேட்டு பதறி தீனாவும் தயாவும் உள்ளே ஓடினர்,தீபா கையில் துப்பாக்கி இருந்தது,விசாரணைக் கைதி சுடப்பட்டிருந்தான்,என்ன ஆச்சுங்கன்னு தீனா கேட்க,தீபா ஓடிவந்து தீனாவை கட்டிப்பிடித்து அழுதாள்,விசாரணைக் கைதிய கொல்றது சட்டப்படி தப்பு,உங்க வேலையே போயிடும் என்று தயா தீபாவிடம் கூறினான்,தீபா தீனாவிடம்,இவன நான் விசாரிச்சிட்டு இருக்கும் போது என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான் அதனாலதான் என்ன பண்றதுன்னு தெரியாம சுட்டுட்டேன் தீனா என்று அழுதாள்,தீனா தீபாவிடம் ஏங்க அழுறீங்க அழாதீங்க என்று ஆறுதல் கூறினான்,தீனா தீபாவை அவளது வீட்டில் சென்று விட்டான்,இன்றைக்கு நீங்க ஸ்டேஷன்ல இல்ல அப்டினு சொல்லிடுங்க உங்களுக்கு பிரச்சனை இல்ல அழாதிங்க என்று தீனா தீபாவிடம் கூறினான்,மறுபடியும் ஸ்டேஷன் சென்று அங்கு அன்று ட்யூட்டியில் இருந்த அனைவரிடமும் இன்றைக்கு தீபா மேடம் ஸ்டேஷன் வரல்ல அப்டியே நீங்களும் சொல்லுங்க என்றான்,தயாவை தனியாக அழைத்து மச்சான் தீபாதான் கொலை பண்ணானு தெரிஞ்சா,ஏன் சுட்டிங்கன்னு கேள்வி வரும்,அதற்கு அப்றம் விசாரணைக்கு வந்த கைதிய சுட்டதுக்காக வேலை போய்டும்,அதனால நான்தான் சுட்டு கொன்னேன்னு சரணடைய போறேன் மச்சி, தீனா கூறியதை கேட்டு ஸ்டேஷனில் இருந்த அனைவரும் கண்கலங்கினர்,..
மறுநாள் தீபாவே தீனாவை கைது செய்தாள்...பத்து வருட சிறை தண்டனைக்குப் பின்,
தீனா மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தீபா குறித்து விசாரித்தான்,அவள் பல வருடங்களுக்கு முன்பே வேறொரு காவல்நிலையத்திற்கு மாறிவிட்டாள் என தெரிய வந்தது,அதன் பின்பு தீனா அவனது வீட்டிற்கு சென்றான்,அவனது நண்பர்கள் பெற்றோர் என அனைவரும் தீனாவைக் காண அங்கு இருந்தனர்,ஒருவனைத்தவிர அவன் தயா,..
தீனா தயாவைப் பற்றி விசாரித்தான்,அவனது நண்பர்கள் அவனைப் பற்றி கூற ஆரம்பித்தனர்,..நீ அஞ்சல அஞ்சலன்னு சொல்வியே அவளோட ப்ளேன்டா எல்லாம்,நீ தீபாவ பார்க்கிறதுக்கு முன்னாடியே தயாவும் தீபாவும் காதலிக்க ஆரம்பிச்சிற்காங்க,அவனுக்காகத்தான் அவ இந்த ஊருக்கே வந்துற்கா,இது தெரியாம நீ அவ மேல ஆசைப்பட,தயா எல்லாத்தையும் தீபாக்கிட்ட சொல்லிற்கான்,நீ இருக்கிற வரை தயாவை அவளோட சேர விடமாட்டேனு தயா அவகிட்ட சொல்லிற்கான்,இது எதுவும் தெரியாம நீ அவளை காதலிச்சிற்க,அவள் நல்லா ப்ளேன் பண்ணி உன்ன ஜெயில்க்கு அனுப்பிட்டா,நீ ஜெயில்க்கு போன இரண்டாவது நாளே தீபா தயாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா,இப்ப அவங்க லண்டன்ல இருக்காங்க மச்சி,எங்கள்க்கு தயாவே இதை எல்லாம் சொல்லி தீனான்ற முட்டாள்ட்ட இருக்காதிங்கடான்னு,சொன்னான் மச்சி என்று தீனாவிடம் அவனது நண்பர்கள் கூறி அழுதனர்,தீனா அப்படியே தடுமாறி கீழே விழுந்தான்,அவன் சொல்லியிருந்தா நானே ஒதுங்கிப் போய்ருப்பேன்டா,இப்படி நட்பையும் காதலையும் அசிங்கப் படுத்திட்டாங்களேடா என்று கூறி அழுதான் தீனா...
தீனா யார் யார பற்றியோ தெரிஞ்சிக்க நினைச்சவன் , அவன் கூட இருந்த நண்பனை பற்றியும் காதலி பற்றியும் தெரிஞ்சிக்கல,ஏன்னா நம்புனான்.
நம்பிக்கைதான் நல்லவர்களின் பலவீனம்!!
அன்புடன்,
டேவிட்
YOU ARE READING
கனவே கலையாதே
Romanceகாதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவ...