நெயிர்ச்சியின் முழுவல் நீ .....
I believe I can see the future'Cause I repeat the same routine
I think I used to have a purpose
But then again, that might have been a dream
I think I used to have a voice
Now I never make a sound
I just do what I've been told
I really don't want them to come around..
oh no......
Every day is exactly the same..
Every day is exactly the same..
There is no love here and there is no pain..
Every day is exactly the same...
I can feel their eyes are watching..
In case I lose myself again...
Sometimes I think I'm happy here(Sometimes)
Sometimes,
yet I still pretend...
I can't remember how this got startedOh, but I can tell you exactly how it will end
Every day is exactly the same..
Every day is exactly the same...
There is no love here and there is no pain..
Every day is exactly the same...மேலே வரும் ஆங்கில பாடல் அந்த அறையை நிறப்பிக்கொண்டு இருந்தது...... மணி காலை 9 ஆகி இருக்க ... ஆனால் காலை என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் அந்த அறை இருட்டாக இருந்தது...
பொருட்கள் அங்கேயும் இங்கேயும் சிதறி கிடக்க... மது பாட்டில்கள் 4 -5 கட்டிலுக்கு அருகில் கிடந்தது... அந்த அறை முழுதும் சிகரெட் துண்டுகள்.... யார் அந்த அறையில் நுழைந்தாலும் அறையில் வரும் வாடை தாங்காமல் வாந்தி எடுத்து விடுவார்கள்...
ஆனால் எந்த வித அசோவ்கிரியமும் இல்லாமல் அங்கே நிம்மதியாக ஒரு மனிதன் உறங்கிக்கொண்டு இருந்தான்...
தவறு தவறு நிம்மதியை துளைத்ததால் தான் மதுவை நாடி இருப்பானோ??
அவன் மனதில் என்ன இருக்கிறதோ?? நமக்கு அவன் தான் கூற வேண்டும்..அங்கே படுத்து இருக்கும் ஆன் மகனை பார்த்தால் குடித்து உடம்பை கெடுத்து கொள்பவன் போல் இல்லை... ஆறடிக்கும் குறையாமல் இருந்தான்... உயரத்திற்கு தகுந்தாற் போல் உடல் வாகு.. தீவிரமாக உடற்பயிற்சி செய்வானோ?? உடம்பு முறுக்கேறி கிடந்தது.. ஆள் ஆளுக்கு கஷ்டப்பட்டு உருவாக்கி கொள்ளும் சிக்ஸ் பேக்ஸ் அவன் உடம்பில் அச்சில் வார்த்தார் போல் அமைந்து இருந்தது.. கையை தலைக்கு கொடுத்து படுத்து இருப்பதால் அவன் கையின் தசை பிடிப்புகள் சொல்லாமல் சொன்னது அவன் வலிமையை... சற்றே மேலே போனால் முகம் முக்கால் வாசிக்கு தாடியை வளர்த்தி வைத்து இருந்தான்... முகத்தில் பிடிவாதம் தாண்டவம் ஆடியது...