"எங்கேடி போய்ட்டு வர? உனக்கு நான் சொல்வது காதில் ஏறவே ஏறாது அப்படித்தானே? ஸ்டேட்டஸ் தெரிந்து பழகணும். எப்போ பாரு அந்த குப்பத்துகாரனை ஸ்கூட்டில ஏத்திக்கிட்டு ஊரை சுற்றி வருகிறாயே. நாளைக்கும் இதுவே உனக்கு பிரச்சனையாக போகிறது பார்." என்றார் ஆஷ்னாவின் தாயார் ராஜராஜேஸ்வரி.
" அம்மா அவன் என் பிரெண்ட். அவனை பற்றி அப்படியெல்லாம் பேசாதீங்க. " என்றாள் இவள் பதிலுக்கு.
" இதோ பார் அவன் உன் அப்பா உனக்கு வைத்திருக்கும் ஒரு பாடிகார்ட் அவ்வளவுதான். வெளிப்படையாக அப்படி சொல்லாமல் டீசண்டா நீ வெளியே பிரெண்ட் என்று சொல்லிக்க. ஆனா அவன் யார்? அவன் தராததம் என்ன? அவன் தகுதி என்ன? எல்லாம் தெரிந்து பழகு. நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது அதன் புத்தியை காட்டதான் செய்யும். அதுபோலத்தான் அந்த பையனும். வாசலோடு நிறுத்திக்க. ஓவரா அவனுடன் பழகின அப்புறம் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது." என்று கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டார் அவர்.
ஆஷ்னாவுக்கு கோபம் தலைக்கேறியது. ஆனாலும் அதை யாரிடமும் காட்டமுடியாமல் தன் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள். ராஜேஸ்வரி குணத்தில் மோசம் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த பணம், ஸ்டேட்டஸ் என்று வந்தால் கொஞ்சம் மோசமாக நடந்துகொள்வார். அதுவும் வீட்டிற்குள் மட்டும்தான். மகளுக்கும், கணவருக்கும் மட்டுமே தன்னுடைய ஒரிஜினல் முகத்தை காட்டுவார். வார்த்தைக்கு வார்த்தை குப்பம் குப்பம் என்று ஆதீஸ்வரனை பேசுபவர், அவனை நேரில் கண்டால் பழம் நழுவி பாலில் விழுவது போல பேசுவார்.
வெளிப்படையாக இருக்கும் மனிதர்களிடம் எதையும் பேசலாம். இப்படி ஆளுக்கு தகுந்தாற்போல பேசும் சந்தர்ப்பவாதிகளிடம் என்னத்தை பேசுவது? அவனால் ஏதாவது வேலையாகணும் என்றால் மட்டும் அவன் குப்பம் என்பது அவருக்கு மறந்துபோகும். ஆனால் தாயார் கத்திகொண்டே இருக்கவேண்டியதுதான். இவள் கோபத்தோடு தன் அறைக்கு செல்வாள். குளித்துவிட்டு புக்கை தூக்கிவைத்துக்கொண்டு படிக்க தொடங்கிவிடுவாள். அவளுக்கு அப்படி ஒரு வியாதி. கோபம் வந்தால் அதிகமாக வெறிகொண்டு படிப்பாள். சிலநேரம் அதிலும் கோபம் குறையாவிட்டால் தாயாரை பற்றி தந்தையிடம் புகார் கொடுப்பாள்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.