Untitled Part 10

2.2K 181 22
                                    

இந்த மூன்று வருடத்தில் ஆஷ்னாவின் ஒதுக்கம் எதிர்காலத்தில் அவனுக்கு வர போகும் கஷ்டத்தைபடம்பிடித்து காட்டியது. 

ஒதுக்கமென்றால் அவள் ஒரேடியாக ஒன்றும் ஒதுங்கிபோய்விடவில்லை. இவனுக்கென்று பைக்கை எடுத்துக்கொடுத்து பாதி ஒதுங்கினாள். அடிக்கடி எங்காவது நண்பர்களுடன் போவது அவர்களது வழக்கம். அதையும் படிப்பை காரணம் காட்டி தவிர்த்தாள். போனில் மட்டும் பேசுவாள். அவள் எங்கேயாவது தனியாக போகிறாள், ஒரு துணை வேண்டுமென்று அவளுடைய அப்பா விரும்பினால் இவனுக்கு தகவல் கொடுப்பார் அவ்வளவுதான்.மற்றபடி பழைய நாட்களில் இருந்தது போல எதுவுமே இல்லை. 

'அந்த சின்ன பெண்ணுக்கு இருக்கும் அடக்கம் ஒடுக்கம் கூட உனக்கு இல்லையே !!!' என்று இவன் புத்தி இவனை பார்த்து கேள்விகேட்கும் அளவிற்கு இவன் மனம் அவளை தேடும். ஓய்வே இல்லாமல் செய்த வேலையோ , உடல் களைத்து போகும் அளவுக்கு விளையாண்ட விளையாட்டோ, அவன் ஆபிஸில் வேலைசெய்யும் மற்ற பெண்களின் பழக்கமோ இவனை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

இந்த பிரச்சனைக்கு முடிவு என்ன என்று இவன் யோசித்து ஆஷ்னாவை பற்றி நினைக்காமல் இருக்க ஒரு வழியை கண்டுபிடித்தான்.

அவள் இடத்தில் வேறு ஒரு பெண்ணை நிரப்ப முயன்றான். நட்பாகத்தான், ஆனால் அதுகூட முடியாமல் போனது. எந்த பெண்களிடமும் அவளிடம் கிடைத்த நிம்மதி, சந்தோசம், உரிமை கிடைக்காமல் போனது அவனுக்கு. நட்புக்கே இந்த கெதியென்றால் காதலியை அவன் எங்கே போய் தேடுவான்!!!!

அவன் ஆபீஸில் வேலைசெய்யும் யோஷித்தா என்ற பெண் இவனிடம் கொஞ்சம் நெருங்கி பழகினாள். திடீரெண்டு ஒருநாள் காதல் என்று ஒரு சாக்லேட்டை கொண்டு நீட்டினாள். இவனுக்குள் ஏக குழப்பம் , அந்த பெண்ணுக்கு தன்னுடைய மறுப்பை எப்படி புரியவைப்பது என்று. ஏனென்றால் இவனுக்கே தெரியவில்லை அவளை ஏன் மறுக்க தோன்றுகிறது என்று.

இவனை போல படித்த பெண், அழகிலும், குணத்திலும் எந்த குறையும் சொல்ல முடியாது. முக்கியமாக பொருளாதார ரீதியில் இருவருமே சமமாக இருந்தார்கள். எல்லாம் ஓகே பட் எனக்கு இவள் வேண்டாம் என்று அவன் மனது கூறியது. அவன் நாகரீகமாக மறுத்துவிட்டான் எதையும் யோசிக்காமல்.

காதலின் மாயவொளி Where stories live. Discover now