" உண்மையாகவா தம்பி " என்று கொஞ்சம் இறங்கிவந்தார் பவானியின் தந்தை.
நண்பனின் தியாகத்தை பார்த்த சூர்யா அவனை பூரிப்புடன் பார்க்க
" த்தூ, மூஞ்சை மாற்று. " என்றான் ஆதீஸ்வரன்.
" எனக்காக, என் காதலுக்காக நீ என்னவெல்லாம் செய்கிறாய் !!! என் மேல் உனக்கு என்ன பாசம் " என்று கட்டிப்பிடித்த சூர்யாவை தள்ளியவன்
" நீ எனக்கு பார்த்த வேலைக்கு உனக்காக இதெல்லாம் செய்வேன்னா?? என் மொசக்குட்டி ரொம்ப கேட்டான்னுதான் இதை செய்யுறேன். சும்மா இவளை கூட்டிட்டு ஊரை சுற்றிவருவதை நிறுத்திவிட்டு படிச்சு வேலையை வாங்குவதை பாரு. இல்ல உன் மாமனார் உன்னை துணை மாப்பிளையாக்கிவிடுவார்" என்றான் ஆதீஸ்வரன்.
பெரியவர்களால் பேசி முடிக்கப்பட்டு சூர்யா, பவானியின் திருமணம் முடிவானது. அவனுக்கு வேலை கிடைத்த பிறகு திருமணம் என்று பேசி முடித்தார்கள்.
அவர்களின் நிச்சயத்திற்கு வந்திருந்த ஆஷ்னாவை முதல் முதலில் புடவையில் பார்த்தான் ஆதீஸ்வரன். அவளை பார்த்த அவனுக்குள் எந்த கெமிக்கல் ரியாக்சனும் நடக்கவில்லை. மாறாக பிஞ்சு கைகால்களை கொண்ட பச்சிளம் குழந்தையாக கையில் ஏந்திய தன் குழந்தை வளர்ந்து பெரியவளாகி சேலை கட்டிக்கொண்டு நிற்கும் போது ஒரு தாயுக்கு அடிமனதிலிருந்து ஒரு பூரிப்பும், அந்த சந்தோசமான தருணத்திலும் கண்ணை கரித்துக்கொண்டு எட்டிப்பார்க்கும் கண்ணீரும்தான் அவர்களின் ரியாக்சன்.
அதைப்போலத்தான் இவனுக்கும் இருந்தது. முட்டிவரை ஸ்கர்ட்டை போட்டுகொண்டு, இரண்டு காதையும் உரசிக்கொண்டு தொங்கிய இரட்டைஜடை பெண் கண் முன்னே வந்து போனாள்.
அவள் அருகில் வந்தவன்
" என் மொசக்குட்டி பெரிய பொண்ணா வளர்ந்துட்டு " என்று அவளுக்கு திஷ்டி கழித்தான். அவள் அவனை வியப்பாக பார்த்தாள். பிறகு கேட்டாள்" புடவையில் நான் அழகா இருக்கேன்னா?" என்று.
" என் செல்ல குட்டி எப்பவுமே அழகுதான். இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க" என்றான் அவன்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.