வீட்டுக்கு வந்து கதவை திறக்கும் வரை பொறுமைகாத்த இரண்டு மனமும் கதவை தாளிட்டு கொண்டு ஒருவரை ஒருவர் சூறாவளி வேகத்துடன் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொண்டார்கள். அதே வேகத்தில் மனைவியை தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்குள் சென்றான்.
நேரம்காலம் தெரியாமல் அவன் போன் ரிங்க் ஆனது. அதை கோபத்துடன் எடுத்து பார்த்தவன் கண்ணில் அனல் தெரிந்தது.
" என்னடா? " என்றான் கோபத்தில். சூர்யாதான் அழைத்தது.
" மச்சான் நான் உன்னை உடனே பார்த்துக்கணும். என்னையே திட்டிட்டாடா அவள். அவன் அப்பனை மாங்கா மண்டையன் என்று சொன்னது தப்பாம்" என்று புலம்பினான் சூர்யா.
" டேய் அப்படியே போய் ஹைவேல நில்லு. எந்த லாரியாவது உன்னை வாரிட்டு போகட்டும். நந்தி மாதிரி எப்போதும் குறுக்கால வந்த என் அம்மாவுக்கு போனை போட்டுடுவேன். எதுவுமே சொல்ல வேண்டாம், நீ இந்த நேரத்தில் என்னை கூப்பிட்ட என்று சொன்னாலே போதும். உன்னை கிழிச்சு நாறு நாறாய் தொங்கவிட்டிடும். நாறப்பயலே.. போனை வை. பொண்டாட்டி காலில் போய் விழு " என்று போனை வைத்துவிட்டு சிரித்துக்கொண்டிருக்கும் மனைவியின் சிரிப்பை முதலில் அணைத்து பிறகு அவளையும் அணைத்தான். அவர்களை பார்த்து காதலில் மாயவொளி நிலாவாக சிரித்துக்கொண்டிருந்து வானில்.
அவனின் எல்லைமீறிய தீண்டலில் எரிந்துகொண்டிருந்தாள் அவள். ஆதீஸ்வரனின் எல்லா குழப்பமும் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துகொண்டு அவளால் மட்டுமே தட்டி எழுப்ப முடிந்த உணர்வோடு அவளில் கலந்துகொண்டிருந்தான். அதன் பின் வந்த இரண்டு நாட்களும் அவனுக்கு உண்மையிலேயே மோட்சத்தை காட்டிக்கொண்டிருந்தாள் அவனின் டாக்டர் மனைவி. நேரம் காலம் இல்லாமல் அவளை நாடினான் அவன். எத்தனையோ வேலை இருந்தபோதும் அவன் தன்னை தேடிய போதெல்லாம் அவனுக்கு முன்னுறிமையளித்தாள் அவனின் ஆருயிர் காதலி.
அவனின் வாயோயாதா ஐ லவ்வில் கிறங்கி, அவன் கை செய்யும் ஜாலத்தில் மயங்கிபோனாள் பெண்ணவள்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.