" திடீரெண்டு உனக்கு என்ன பக்தி பாய்ந்து வந்துவிட்டது? " என்று காரை கோயிலுக்கு அருகில் பார்க் செய்தவன் அவளுடன் இறங்கி கோயிலுக்குள் சென்றான். அங்கே சூர்யா கண்ணில் பட
" இங்கே என்ன நடக்கு? இந்த தடிப்பய இங்கே என்ன செய்கிறான்? நீங்க இரண்டுபேரும் சேர்ந்தாலே உருப்படாதே. என்ன செய்து வச்சிருக்கீங்க? " என்று கோபத்தோடு அவளிடம் கடித்தான்.
" கோயில நின்னுட்டு நல்ல வார்த்தை பேச மாட்டியா? பேசாமல் வாயை மூடிட்டு பின்னாடி வரணும். " என்று முன்னே நடந்தாள். அங்கே தன் தாயாரை காணவும் அவனுக்கு எல்லாம் புரிந்துபோனது. எத்தனை முறை இந்த மாதிரி பொறியில் சிக்காமல் தப்பியிருக்கிறான், பிறகு புரிவதற்கு என்ன?.
எட்டி நடந்தவன்
" ஷனு நின்னுடி " என்றான். அவன் அழைத்தவிதத்தை அவன் கவனியாமல் இல்லை. ஆனால் நில்லாமல் சூர்யா அருகில் சென்றுவிட்டாள். மங்காவும் அங்கே வர இவன் சுதந்திரமாக அவளை முறைத்து பார்க்க கூட முடியாமல் போனது." அன்டி நான் சாமி கும்பிட்டுட்டு வரேன். " என்று கிளம்பிவிட்டாள் அவள்.
" அப்படியே போயிடு பிசாசே "என்றான் இவன்.
" டேய் புள்ளைய என்ன வார்த்தை சொல்லுற? வாயை உடைச்சிடுவேன் " என்றார் மங்கா.
" அம்மா ஏமாத்தி கூட்டிட்டு வந்துட்டு அவளுக்கு சப்போர்ட் வேற? இப்போ நான் யாரை பார்க்கணும்? சீக்கிரம் காட்டு. பார்த்துட்டு போகட்டும் " என்றான் ஆதீஸ்வரன் கோபத்தில்.
" டேய் முகத்தை கோபமா வச்சுக்காதே, அந்த பொண்ணு உன்னை பிடிக்கலன்னு சொல்லிட போறா. உன் அம்மா ரோதனையை இதுக்கு மேல என்னால தாங்க முடியாது. சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிட்டு செட்டில் ஆகு. இல்லன்னா இந்த அம்மா என் பொழப்பை நாறடிச்சிடும் " என்றான் சூர்யா.
" நீயெல்லாம் ஒரு பிரெண்டா? எனக்குன்னு வாச்சதெல்லாம் இப்படித்தான் இருக்குது. " என்றவன் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு நின்றான்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.