தன்னுடைய அந்தரங்கம் வெளிப்பட்டுவிட்ட அதிர்ச்சியிலும், அடிபட்ட வலியிலும் ராஜேஷ் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்க, முழுவதுமாக இல்லாமல் கொஞ்ச தன் கோலத்தை மாற்றிக்கொண்டு வந்தாள் ஆஷ்னா.
ஆதீஸ்வரன் கையிலிருந்த பேப்பரை பார்த்தவள்
" கையெழுத்து போட்டானா? " என்று கேட்டாள்." போட்டுட்டான். " என்றான் ஆதீஸ்வரன்.
" எப்படி போட்டான் சைக்கோ? அவ்வளவு சீக்கிரத்தில் போட்டிருக்க மாட்டானே. அவனுக்கு நான் ஒரு ஷீல்ட் மாதிரி. அவன் செய்யும் அத்தனை தப்பையும் மறைக்க தேவைப்படும் ஆயுதம் நான். பொறுக்கிக்கு தினமும் புதுசு புதுசா தேவைப்படும். பணம் இருந்தா எதையும் செய்யலாம் என்ற திமிர்." என்றாள் அருவருப்புடன்.
அவளுக்கு இதெல்லாம் தெரியவேண்டாமென்று நினைத்தான் ஆதி. ஆனால் அவளுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
" எல்லாம் தெரிந்திருந்தும் எதற்காக அமைதியாக இருந்தாய்? " என்று கேட்டான் ஆதி.
"என் அம்மாவின் பணத்தாசைக்காக " என்றாள் அவள்.
அடிபட்டது போல நிமிர்ந்தார் ராஜேஸ்வரி.
ஆனால் அதைப்பற்றியெல்லாம் அங்கே யாரும் கவலைப்படவில்லை.ராஜேஷ்ஷின் பெற்றோரும், சகோதரனும் அங்கு வந்து சேர்ந்தார்கள். காயத்தோடு இருந்த மகனை பார்த்தவுடன் அவனின் அப்பா காச்மூச் என்று கத்த தொடங்கினார். அவரை ராஜேஷின் தாயார் அடக்கினார்.
" இவனுக்கு கல்யாணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் என்று நான் எத்தனை முறை சொன்னேன், கேட்டிங்களா? எல்லாம் சரியாகத்தான் நடந்திருக்குகிறது. ஆனால் கொஞ்சம் லேட்டாக நடந்துவிட்டது. நல்லவேளை இந்த பெண் சாவதற்குள் வந்து காப்பாத்திட்டாங்க. வீட்டையே ஜெயிலாக அல்லவா மாற்றி வைத்திருந்தான்.
நான் செய்த பாவத்திற்கு இவன் எனக்கு பிள்ளையாக பிறந்து தொலைத்திருக்கிறான். நான் எங்கே கல்யாணத்தை நிறுத்திவிடுவேனோ என்று என்னை என்ன பாடு படுத்தினீங்க !!!! அதில் கொஞ்சமாவது இவன் அனுபவிக்கட்டுமே.
أنت تقرأ
காதலின் மாயவொளி
عاطفيةஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.