அத்தியாயம் 16

2.3K 190 37
                                    

" ஆஷு உனக்கென்ன பைத்தியமா? என்ன காரியம் செய்யுற. அவர் உனக்கு தாலிகட்டிய புருஷன். கோபத்தில் இந்தமாதிரி ஏதாவது அவர் செய்திருந்தால் நீ அதை எங்களிடம் சொல்லியிருக்கலாம். அப்பப்போ போன் செய்யத்தானே செய்த? எதுவுமே சொல்லாமல் இப்போ புருஷனை கொல்ல இவனிடம் தீப்பெட்டியை கொண்டு நீட்டுற? " என்றார் ராஜேஸ்வரி கோபத்துடன்.

தாயை ஒரு பார்வை பார்த்த ஆஷ்னா
" நான் ஆதியிடமும் எதுவுமே சொல்லவில்லை. ஆனா அவன் எனக்கு என்ன பிரச்சனை என்று புரிஞ்சிகிட்டான். ஆனா உங்களுக்கு அது ஏன் புரியல? அப்புறம் என்ன சொன்னிங்க தாலி கட்டிய கணவன் என்றா? இவன் முதலில் மனுஷனா? " என்றாள் ஆஷ்னா.

"எதுவாக இருந்தாலும் இது உன் வீட்டு விஷயம். இதிலே எதுக்கு இவன் தலையிடனும்? " என்றார் ராஜேஸ்வரி.

அப்போது வாயில் இருந்த துணியை எடுத்து போட்ட ராஜேஷ்
" நான் அடிச்சேன் அடிச்சேன்னு மட்டும் சொல்றிங்களே? எதுக்காக அடிச்சேன்னு யாராச்சும் கேட்டிங்களா? " என்றான்.

" ச்சீ, பெண்ணை கை நீட்டி அடிப்பதே பாவம், இதுல உன்னிடம் காரணம் வேற கேட்கணுமா? " என்று ஆதீஸ்வரன் மீண்டும் அவனை நெருங்க சூர்யா பிடித்து நிறுத்தினான்.

" பிரச்சனை என்று வந்தா இரண்டு பக்கமும் உள்ள நியாயத்தை கேட்கணும். உங்க பெண்ணின் யோக்கியதையை பார்த்துக்கொண்டுதானே இருக்கீங்க. புருஷனை ஒருத்தன் அடிக்கிறான், அதை பார்த்துக்கொண்டு இன்னொருவனை பிடித்துக்கொண்டு நிற்கிறாள் ச்சீ. கல்யாணத்திற்கு முன் இவனுங்களோடு கெட்டு சீரழிந்து போனவளை என் தலையில் கட்டியது நீங்க. சரி நம்ம விதி என்று நான் அதையும் மன்னிச்சு, இனியாவது ஒழுங்கா இருப்பாள் என்று பார்த்தால் என்ன தைரியம் இருந்தால் இவனுங்க பழசை தொடர அவளை தேடிட்டு இங்கேயே வருவானுங்க?" என்றான் அவன்.

" ஏய் " என்று ஆதீஸ்வரன் மீண்டும் அவனை அடிக்க முயல அவனை பிடித்து நிறுத்தினாள் ஆஷ்னா.

" ஏண்டா உனக்கு தாயுக்கும், தாரத்திற்கும் வித்தியாசம் தெரியுமா இல்லையா? எல்லோரையும் உன்னை போல நினைக்கிறாயே அதான் கேட்கிறேன் " என்றான் சூர்யா கோபத்துடன்.

காதலின் மாயவொளி Where stories live. Discover now