" ஆஷு அவனை விடு அவன் போகட்டும், அவன் என்ன நாடுவிட்டு நாடா போறான். இந்தா இருக்கும் மும்பையில் இருக்கும் தீவுக்கு போறான். அதுக்கே ஏர்போர்ட்டில் வந்து இப்படி அவனை நகர விடாமல் பிடித்துவைத்தால் எப்படி? நேரமாகிவிட்டது" என்றான் சூர்யா.
" உனக்கென்ன நீ பேசமாட்டாய்? அங்கே போனா போன் கூட பண்ண முடியாதாம். உங்க எல்லோருக்கும் என்ன வந்து விடியுதோ? இவனை இங்கிருந்து அனுப்பிவைப்பதிலேயே குறியாக இருக்கிங்க. எனக்கு இவனை பார்க்காம கஷ்டமாக இருக்குமே !!!!" என்றாள் அவள் கவலையுடன்.
" அதான் ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் போது அதன் அருமை தெரியாது என்று சொல்லியிருக்காங்க. நாலு வருசமா ஓடி ஓடி ஒளிஞ்சல்ல ? " என்றான் சூர்யா.
"டேய் சும்மா இரு. நீ ஒழுங்கா படி. சீக்கிரம் வேலையை வாங்க பாரு. இவளை பத்திரமா பார்த்துக்க." என்று கூறிய ஆதி மிகவும் கஷ்டப்பட்டு தன் முழங்கையை இரண்டு கையாலையும் பிடித்திருந்த அவளின் கையை விலக்கி சூர்யாவிடம் கொடுத்துவிட்டு போனான். அவனுக்கு மனசே சரியில்லை. விட்டா அவ அழுத்திடுவா போல, அப்படியிருந்தது அவள் முகம்.
" சூரி ஏதாவது ஏமர்ஜென்சி என்றால் எப்படியாவது என்னை கான்டக்ட் பண்ணு. இவளை பார்த்துக்க " என்று மறுபடியும் சொல்லிவிட்டு திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு போனான் அவன்.
போனவன் அங்குள்ள அடிப்படை வேலைகள், அதற்கான பொருட்கள், வேலையாட்கள் என்று எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து, பிளான் போட்டு வேலையை தொடங்கிவைக்க இரண்டுமாதம் முழுதாக பிடித்தது. இரண்டு மாதம் கழித்து அவன் திரும்பிவரும் போது அவனது மொசக்குட்டி
திருமதி. ராஜேஷ்ஷாக இருந்தாள்.இதெல்லாம் அவனுக்கு தெரியாமல் திடீரெண்டு நடந்தது இல்லை. மாப்பிள்ளை பார்க்கிறாங்க, மாப்பிள்ளை வீட்டார் வந்தாங்க, புடிச்சிருக்கு சொன்னாங்க, டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க, என்கேஜ்மென்ட் நடந்திச்சு, முகூர்த்த புடவை இந்த கலர், லெஹெங்கா எடுத்தாச்சு, மெஹந்தி போட்டேன், போட்டோ எடுத்தாங்க என்று எல்லாமே அவனுக்கு அப்டேட் செய்யப்பட்டது. அவளும் செய்தாள், சூர்யாவும் செய்தான்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.