அத்தியாயம் 3

2.3K 172 19
                                    

" தம்பி நீ எங்கேப்பா போற?  எங்கேன்னு சொல்லு நான் இறக்கிவிட்டுறேன் " என்றார் தனுஷ்கோடி.

அவன் எதிரே நின்றுகொண்டிருந்த அந்த விலையுயர்ந்த காரையும்  தன்னையும் தன் உடையையும் ஒரு முறை பார்த்தவன் சிரித்தான்.

" வாணாம் சார்.  அதோல்லாம் சரிப்பட்டு வராது.   காரு அழுக்கா போயிடும் " என்றான் ஆதீஸ்வரன்.

" அதெல்லாம் ஒன்றும் ஆகாது.   வண்டியில் ஏறு " என்றார் அவர்.

" இந்த காரு " என்றான் அவன்.

" ஓஓ மறந்துட்டேன்.   வேற ட்ரைவர் வந்துட்டு இருக்கான்.   கொஞ்சம் வெயிட் பண்ணலாம் " என்றவர் அவனிடம் பேச்சு கொடுத்தார்.   ஒரு மரத்தின் நிழலில் நின்றுயிருந்தனர்.   ஆஷ்னா அங்கேயிருந்த கற்களை பொறுக்கி கொண்டிருந்தாள்.

" ஐய்யே அதை கீழே போடு.   எத்தனை கசமாலம் என்னலாம் பண்ணிட்டு போச்சோ.   சாரு நீங்க காருக்குள்ளால போங்க உங்க பொண்ணை கூட்டிட்டு " என்றான் ஆதீஸ்வரன்.

அவனின் வயதில் அவன் யோசிக்கும் சின்ன சின்ன பொறுப்பான விஷயமும் அவரை கவர்ந்தது.

" நீ என்னப்பா பண்ணுற? " என்று கேட்டார்.

" நான் கையாளு வேலைக்கு போறேன் சார்." என்றான்.

" படிக்கல? " என்று கேட்டார்.

" முடிச்சிட்டேன் சார் " என்றான்.

" பார்த்தா உனக்கு ஒரு பதினேழு பதினெட்டு  வயசு போல தெரியுது.   அதற்குள் என்னத்தை படிச்சு முடிச்ச? " என்று கேட்டார் அவர்.

" பன்னெண்டு சார்.   காப்ரேசன் ஸ்கூல்ல படிச்சேன்.  மார்க்கும் குறைதான்.  இப்போ ஒரு இரண்டு மாசமா வேலைக்கு போயிட்டு இருக்கேன் " என்றான் அவன்.

" ஏன் மேலே படிக்கல? " என்று கேட்டார்.

"கவர்ன்மென்ட் அதுவரை படிச்சா போதுமுன்னு சொல்லிடிச்சே.   அதான் நானும் வேலைக்கு கிளம்பிட்டேன் " என்றான் அவன்.

" என்ன சொல்ற?  கவர்ன்மெண்ட் எப்போ அப்படி சொன்னது? " என்றார் அவர் புரியாமல்.

காதலின் மாயவொளி Where stories live. Discover now