அடித்துக்கொண்டு போன ராட்சஷ அலையில் படாத பாடு பட்டு இப்போதுதான் கரை சேர்ந்தோம் என்று ஆஷ்னா இருக்க, ஆதி உன் மேல் எனக்கு காதல் என்று கிளம்பியிருக்கிறான். ஆனால் அதை சொல்லும் தைரியம் இல்லாமல் திக்கி திணறி சொல்லியும்விட்டான். ஆனால் அவள் என்ன சொல்லுவாளோ, இதை எப்படி எடுத்துக்கொள்ளுவாளோ என்ற பயம் அவன் கண்ணில் இருந்தது.
ஏனென்றால் ஏற்கனவே அவளை பெண் கேட்க சென்ற அன்று அவள் எச்சரித்திருந்தாள். லவ் சவ்வுன்னு ஏதாச்சும் சொன்ன நான் உன்னிடம் பேசவே மாட்டேன் என்று. அதனால் தான் அன்று வாயை மூடிக்கொண்டான். இல்லையென்றால் அன்றே சொல்லியிருப்பான். ஆஷ்னாவின் எதிர்காலம், சூர்யாவின் திருமணம், அம்மாவின் ஆசை என்று ஆயிரம் காரணம் சொன்னாலும் அவள் மேல் இருந்த காதல்தான் அவனை அவ்வளவு தைரியமாக பேச வைத்தது. ஆனால் இன்று பயம்....
அவனின் முகம் பார்த்து தன்னை கொஞ்சம் அடக்கிகொண்டவள் மெதுவாக திரும்பி
" ஏன்டா இப்படி கெட்டவார்த்தை பேசுற ?" என்றாள்.
" ஷனு " என்றான் அவன் வருத்தத்துடன்.
" பின்ன என்னடா ? உனக்குத்தான் லவ் என்றாலே பிடிக்காதே. நீ பேசவேண்டிய வசனம் எல்லாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நன்றிவிசுவாசம் தானே. திடிரெண்டு இப்படி லவ்வுன்னு கிளம்பி வந்தா நான் என்ன செய்யட்டும்? " என்றாள் அவள் கிண்டலாக. ஆனால் அதையும் மீறி அவள் கண்ணில் வலி தெரிந்தது.
"ஷனு ரொம்ப ஓட்டாதேடா. ப்ளீஸ் நான் சொல்லவரதை புரிஞ்சிக்க. நான் போக்க காட்டாறு போல ஓடிட்டே இருந்தேன். அப்பா இல்ல, அம்மா பட்ட கஷ்டத்தை பார்த்து பார்த்து வளர்ந்தேன். வறுமை என்பதை ஒரே வார்த்தையில் சொல்லிட்டாலும் அதற்குள் நிறைய விஷயம் இருக்கு . ரொம்ப ஓப்பனா சொல்ல முடியாது . ஔவையார் கூட சொல்லியிருப்பாரே !!! கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது என்று. அதை இன்ஞ் இன்சா அனுபவிச்சவன் நான். எனக்கெல்லாம் கனவில் கூட என் கஷ்டம் தான் வரும். அப்புறம் உன்னை பார்த்தேன். மேஜிக் மாதிரி எல்லாவற்றையும் மாற்றி அமைச்ச. நீ என் கண்ணுக்கு தேவதையாகத்தான் தெரிஞ்ச.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.