நண்பர்கள் இருவரும் பைக்கில் ஆஷ்னா வீட்டிற்கு வரும்போதுதான் இவ்வளவும் பேசிக்கொண்டு வந்தார்கள். அவள் வீட்டிற்கு வந்து இறங்கிய பிறகும் சூர்யாவின் முகம் உர் என்று இருந்தது.
" சிரியெண்டா " என்றவன் ஆஷ்னா வீட்டிற்குள் சென்றான் நண்பனுடன். தனுஷ்கோடி அவனை வரவேற்று காஃபி கொடுத்து உபசரித்தார். ராஜேஸ்வரி
' இவன் எதற்காக இங்கே வந்தான் ' என்ற தோரணையில் பார்த்துகொண்டிருந்தார்." சார் உங்களிடம் பேசலாம் என்று வந்தேன்" என்று தயங்கினான் ஆதீஸ்வரன்.
" என்ன ஆதி? எதுவும் முக்கியமான விஷயமா? வா ஆபிஸ் ரூமுக்கு போய் பேசலாம் " என்று எழ போனார் தனுஷ்கோடி.
" இல்லை இங்கே வச்சு பேசலாம். எல்லோருக்கும் தெரிய வேண்டிய விஷயம்தான் " என்று அங்கேயும் இங்கேயும் பார்த்தான். பிறகு தன்னை பேச தயார் செய்தவனாய்
" சார் நான் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று நினைக்கிறேன் " என்றான்.
" வாழ்த்துக்கள்" என்றார் தனுஷ்கோடி.
" தங்கியூ சார் " என்றான் அவன்.
" பொண்ணு யாருன்னு சொல்லு. பேசி முடிச்சிடலாம். உனக்கு கல்யாண பரிசா என்ன வேணுமுன்னு கேளு ஆதி" என்றார் தனுஷ்கோடி மகிழ்ச்சியாக.
" எனக்கு... எனக்கு" என்றவன் ஒரு முறை மாடியை நிமிர்ந்து பார்த்தான். பிறகு
" எனக்கு என் கல்யாண பரிசாக என் மொசக்குட்டி வேணும்." என்றான் நிமிர்வோடு.
" என்ன? " ராஜேஸ்வரி கொதித்து எழ, தனுஷ்கோடி மௌனமானார். சூர்யா
" மச்சான் " என்ற கூச்சலோடு ஆதீஸ்வரனை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டான்." அமைதியா இருடா. ராஜராஜேஸ்வரி இப்போ ஆட தொடங்கும் " என்று அவன் காதை கடித்தான் ஆதீஸ்வரன்.
" நீ அதை பற்றி கவலைப்படாதே. பெரிய ராஜேஸ்வரியை சமாளிப்பது என் பொறுப்பு, நீ சின்ன ராஜேஸ்வரியை சமாளி " என்றான் சூர்யா.
" எனக்கு தெரியும், நீ கடைசியில் இங்கே தான் வந்து நிற்பன்னு. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனுஷனை கடிக்க வந்திட்டியா? இவரிடம் எவ்வளவு சொன்னேன், அப்போல்லாம் ஆதி நல்லவன், நல்லவன் என்று குதிச்சாரு. இப்போ தெரியுதா இவன் வேஷம்? " என்று ராஜேஸ்வரி கத்த தொடங்க
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.