அத்தியாயம் 4

2.3K 174 22
                                    

தன்னுடன் காலேஜில் படிக்கும் பெயர்தெரியாத பெண்களுக்காக ஜெயில் வரை சென்றுவந்தவன் அவளுடைய மொசக்குட்டிக்காக எதுவரை செல்வான் !!!!!

அவனுடைய அம்மா மங்கை அடிக்கடி சொல்லுவார் " ஆஷ்னா புள்ள தேவதை " என்று. தேவதைகளால் மட்டுமே செய்ய முடியும் இந்த மாதிரி அற்புதத்தை. கடவுள் செய்வாரோ இல்லையோ தெரியாது. ஆனால் கதைகளில் வரும் தேவதைகள் எல்லாம் வாழ்க்கையில் மிகவும் பின்தங்கி இருப்பவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும்.

தகப்பன் இல்லாமல் வளர்ந்த ஒத்த புள்ளையை படிக்கவைக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவரை வாட்டியது. எந்த தாயுக்குத்தான் பிடிக்கும்? தன் பதினெட்டு வயது பிள்ளை கசங்கிய சட்டையுடன், செங்களையும், மண்ணையும் சுமந்து கொண்டு சிமிண்ட்டில் குளித்து வருவதை.

"வேண்டாம் ஐயா " என்று தடுத்தபோதும்

" அம்மா நான் என்ன குழந்தையா? நீதான் குழந்தை. என்னை வளக்க நீ என்னா கஷ்டப்பட்ட. நான் வளந்துட்டேன். இனி பாரு நாம எப்படி இருப்போம் என்று " என்றான் ஆதீஸ்வரன்.

மகனின் மனவளச்சியும், பொறுப்பும் அவரை சந்தோஷமடைய செய்தாலும்
" கூலி வேலைக்கு போகண்டா ஐயா. படிச்சு பெரிய உத்தியோகத்து போ" என்றார் மங்கா.

" நம்மளை மாதிரி ஏழைக்கு எல்லாம் அதெல்லாம் கிடைக்காதும்மா. ஏதாவது தேவதை வந்து அள்ளி தந்தா உண்டு " என்றான் அவன் சிரித்துக்கொண்டு. அந்த சிரிப்பின் பின்னே வேதனை மறைந்திருந்தது.

ஆனால் அவன் சொன்னது போல தேவதை வந்தும் விட்டாள். அவளுடைய அப்பா படிக்க ஏற்பாடு செய்தார். அவள் தன் பங்கிற்கு எவ்வளவோ செய்தாள் அவளின் வயதுக்கு மீறி.

' ஆதி.. ஆதி எனக்கு அந்த ஹெல்ப் பண்ணு, இதை வாங்கிட்டு வா, இதை எழுதி கொடு, இதை வரைந்து கொடு ' என்று எதையாவது ஏவிக்கொண்டே இருப்பாள்.

" ஷாப்பிங் போகலாம் வா " என்று தாயுடன் போகும் போது அழைத்துப்போவாள்.

" அம்மா எனக்கு அரை டஜன் ட்ரெஸ் வேண்டும். ஆதிக்கு ஷர்ட், பாண்ட் சேர்த்து ஒரு டஜன் செட் மட்டும் வேண்டும் " என்பாள்.

காதலின் மாயவொளி Where stories live. Discover now