தன் எதிரே நிற்கும் இரண்டு அயோக்கியன்களை பார்க்கும் போது பயம் மனதை உறையவைத்தாலும் வெளியே தைரியமாகவே தன்னை காட்டிக்கொண்டாள்.
" ஸோ உங்க இரண்டு பேருக்கும் வாங்கியது போதாது இல்லையா? என்ன தைரியத்தில் என்னை பின்தொடர்ந்து வந்திருக்கீங்க? எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா உங்க இரண்டுபேரையும் தான் முதலில் தூங்குவாங்க என்று தெரியாத முட்டாளா இருந்துகிட்டு என்னத்தை கழற்ற போறீங்க?
அவன் கொலைகாரனாகிவிட கூடாது என்று நான் நினைச்சதால்தான் நீங்க இரண்டு பேரும் இன்னும் உயிரோடு இருக்கீங்க. நானே இல்லன்னு ஆயிடுச்சின்னா அப்புறம் உங்க நிலைமையை யோசிச்சி பாருங்க. "என்றாள் ஆஷ்னா.
" என்ன பயம் காட்டுறியா? அதையெல்லாம் நாங்க பார்த்துப்போம். இப்போ ஆன் ரெகார்ட் படி நாங்க இரண்டு பேரும் வெளிநாட்டில் இருக்கிறோம். உன்னை தடையமே இல்லாமல் நாசம் பண்ணிட்டு போயிட்டே இருப்போம் "என்றான் ராஜேஷ்.
" அவட்ட என்னடா விளக்கம் கொடுத்துக்கிட்டு. இழுத்துட்டு வா " என்றான் அபினேஷ் ரொம்ப அவசரமாக.
" அவட்ட விளக்கம் கொடுக்கவிரும்பலன்னா
என்னிடம் விளக்கம் கொடுக்கிறியா? " என்று ஒரு குரல் கேட்டது. மூவரின் பார்வையும் அங்கே திரும்பியது.அங்கே ஒரு இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார். அவரை இந்த இடத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு பின்னால் அந்த ஊர் மக்கள், இவளுடன் வந்திருந்த டாக்டர்ஸ் எல்லோரும் ஓடி வந்தார்கள்.
இருவரின் முகத்திலும் கலவரம் வந்தது. பயத்தில் ஆஷ்னாவை பிடித்து முன்னே நிறுத்திக்கொண்டு தன்னிடம் இருந்த டாக்டர்ஸ் ஆப்ரேஷனுக்கு பயன்படுத்தும் கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைத்தான் அபினேஷ்.
" யாராச்சும் கிட்ட வந்திங்க இவளை அறுத்து போட்டுடுவேன் " என்றான் அவன்.
" டேய் என்ன பண்ணுற? அவளை விட்டுடு. நம்ம லைஃப்பே போயிடும் " என்றான் ராஜேஷ்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.