அத்தியாயம் 30

3.1K 201 32
                                    

யோசனையுடனே மனைவியை மார்பில் போட்டுகொண்டு அமர்ந்திருந்தான் ஆதீஸ்வரன்.   சற்று நேரத்தில் அவள் தூங்கிவிட்டாள்.   தூங்கியவளின் நெற்றியில் முத்தமிட்டு படுக்கையில் படுக்கவைத்துவிட்டு தானும் படுத்துகொண்டான்.

காலையில் எழுந்து ஆஷ்னா பார்க்கும் போது அவன் அங்கு இல்லை.  அவர்கள் வீட்டுக்கு பின்னே இருந்த சின்ன தோட்டத்தில் இருந்தான்.  அவனும் அவன் அம்மாவும் சேர்ந்து உருவாக்கிய தோட்டம்.  காய்கறி, கீரை, சின்ன சின்ன மூலிகை செடி என்று அடக்கமான தோட்டம்.  முருங்கை, தென்னை,  என்று ஒன்று இரண்டு தேவையான மரங்களும் இருந்தன.

" ஆதி " என்று வந்தவள் கீழே மண்டியிட்டு ஒரு செடிக்கு பாத்தி பிடித்து விட்டுக்கொண்டிருந்தவனின் கழுத்தை பின்னோடி வந்து கோர்த்துகொண்டு அவன் தோளில் முகத்தை வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

" எந்திச்சிட்டியா தூங்குமூச்சி?  என்னமா தூங்குற?  முன்பெல்லாம் 4மணிக்கெல்லாம் எழுந்து பேயோடு பேயாக சுத்துவியே!!! இப்போ என்ன இந்த தூக்கம் தூங்குற? " என்றான்.

" ஆமா நாலுமணிக்கே எழுந்து படிச்சு அப்படியே இரண்டா கிழிச்சிட்டேன்." என்றாள் அவள்.  நிமிர்ந்து அவளை பார்த்தவன் கண்ணில் கண்டிப்பு இருந்தது.

" காலையில் எழும்பனும் என்றால் நேரா சொல்லேன்.  அதுக்கு ஏன் முழிக்கிற?  போ,  நான் அன்டியிடம் போகிறேன் " என்று கிளம்பிவிட்டாள் அவள்.  அவள் கழுத்தை கட்டி தொங்குவது எல்லாம் புதுசு இல்லை.  அதனால் அவனும் அதை பெரிதாக நினைக்கவில்லை.

" ஐய்யோ நீ ஏன்மா இங்கே வந்த? சமைக்கிற வேலையை நானே பார்த்துப்பேன்.  நீ போய் குளிச்சிட்டு வாம்மா" என்றார் மங்கா.

" இல்ல,  இல்ல.   நான் குளிச்சிட்டு இப்போ வந்திடுவேன்.  அப்புறம்தான் சமைக்கணும். " என்று ஓடிபோனாள் அவள்.

" எதுக்கு ஓடுறா? " என்று கேட்டுக்கொண்டே வந்தான் ஆதீஸ்வரன்.

" சமைக்க போறாளாம் " என்றார் மங்கா.

" அப்போ அம்மா நான் கிளம்புறேன்.  உனக்கு எதுவும் ஆகலேன்னா சாயந்திரம் பார்க்கலாம் " என்றான் ஆதீஸ்வரன்.

காதலின் மாயவொளி Where stories live. Discover now