போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வந்தவுடன் குழப்பத்தில் போனை காதுக்கு கொடுத்தவர் கேட்ட செய்தியில் அதிர்ந்து நின்றார் தனுஷ்கோடி.
" வரேன் " என்றார் அவர் தேய்ந்த குரலில்.
" என்னப்பா? " என்று கேட்டாள் ஆஷ்னா சந்தேகத்துடன்.
" ஆதி.... ஆதி ஜெயிலில் இருக்கிறான் " என்றார் தனுஷ்கோடி.
" போச்சு " என்ற ஆஷ்னா தாயை சந்தேகத்துடன் பார்த்தாள்.
" நான் இங்கேதானே இருக்கேன் " என்றார் அவர்.
" வாங்கப்பா " என்றாள் அவள்.
" இல்லம்மா, நீ வரவேண்டாம்." என்று அவள் பிடிவாதமாக நின்ற போதும் அவளை விட்டுவிட்டு போனார் அவர்.
ஆனால் அவனை அவரால் வெளியே கொண்டுவரமுடியவில்லை. கொலை முயற்சி என்று கேஸ் பதிவாகியிருந்தது. அடிபட்டவன் ஹாஸ்பிடலில் இருக்கிறான். அவனுடைய அப்பா பணத்தை கொடுத்து இவன் இனி வெளியவே வரக்கூடாது என்று கேஸ் கொடுத்திருந்தார்.
பொய் கேஸ் என்று நிரூபிக்க முடியாதபடிக்கு ஆதியும் வாயை திறக்கவே மறுத்தான். சின்ன தகராறில் அடித்தேன் என்றுதான் திரும்ப திரும்ப கூறினான்.
அன்று இரவு அவன் லாக்கப்பில்தான் இருந்தாகவேண்டிய கட்டாயம் வந்தது. மறுநாள் காலையில் ஆஷ்னாவின் பெற்றோர்கள் அவளை தடுத்தும் நில்லாமல் நேராக கிளம்பி ஹாஸ்பிடல் சென்றாள்.
வஞ்சனையில்லாமல் அடித்து கொளுத்தியிருந்தான் ஆதீஸ்வரன். கட்டிலில் கட்டுடன் கிடந்த அபினேஷ்ஷை பார்த்து அவள் உதட்டோரத்தில் லேசான சிரிப்பு எட்டிப்பார்த்தது. அந்த சிரிப்பு "சொன்னேன் கேட்டாயா " என்பது போல இருந்தது.
அடுத்து அபினேஷின் தந்தையிடம் போனவள்
" இன்னும் அரைமணிநேரத்தில் ஆதீஸ்வரன் வெளியே வரவேண்டும். இல்லையென்றால் உங்கள் மகனை நான் உள்ளே தள்ளிவிடுவேன் " என்றாள்." ஏய் பொண்ணு என்ன பேசுற? " என்றாள் அருகில் இருந்த அபினேஷின் தாய்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.