அத்தியாயம் 6

2.2K 163 17
                                    

அவளின் அந்த கேள்வியில் ஆதிஸ்வரன் அதிர்ச்சியோ, பதட்டமோ, கோபமோ கொள்ளவில்லை. மாறாக மிகவும் பொறுமையுடன் பதில் கூறினான். ஏனென்றால் அவள் இதைத்தான் தீர்வாக யோசிப்பாள் என்று அவனுக்கு தெரியும்.

" நீ அவ்வளவு முட்டாளாக இருக்கமாட்டாய் என்று நான் நம்புகிறேன் ஆஷு. அப்படி நீ யோசித்தால் உன் நண்பனை நீ இப்போதே முழுதாக மறந்துவிட வேண்டிய அவசியம் ஏற்படும் உனக்கு. பிறந்த ஊர், சொந்தம் என்று எந்த ஒட்டுதலும் எனக்கு இங்கே இல்லை. அம்மாவை கையில் பிடிப்பேன், போயிட்டே இருப்பேன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவன் நான் இல்லை. என்னை அந்த நிலைக்கு நீ தள்ள மாட்டாய் என்று நினைக்கிறேன். " என்றான் அவன்.

அவனின் ஷனா ஆஷு ஆனதை கவனித்தவள் " இல்லை அப்படி எதுவும் செய்துவிடாதே. என்னை பற்றி உனக்கு தெரியுமில்லையா? நான் பிரச்சனைக்கு தீர்வு தேடினேன் அவ்வளவுதான். உன் மேல் எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்லை. ஜஸ்ட் கேட்டேன் ஆதி " என்றாள் அந்த ஆதியில் அழுத்தம் கொடுத்து.

அவன் பதில் சொல்லாமல் போக
" ஆதி என் மேல் கோபமாக இருக்கியா? என்னிடம் பழையமாதிரி பழகுவல்ல? " என்று கேட்டாள் கண்ணில் கலக்கத்துடன். அவளை அப்படி பார்த்தவன்

" ப்ளீஸ் ஆஷு நார்மலுக்கு வாயேன். உன் முகத்தில் இந்த தவிப்பு, உன் கண்ணின் இந்த கலக்கம் இதெல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லை. என் மொசக்குட்டி எப்போதும் சுறுசுறுப்பாக, ஜாலியாக, கவலையே இல்லாமல் படபடவென்று பேசிக்கிட்டு சந்தோசமா இருக்கணும். நீ என்னை திட்டும் பொழுது எனக்கு சந்தோசமா இருக்கும். ஏன் தெரியுமா? அந்த கோபத்தில் நீ சந்தோசமா இருப்ப. நீ சிரிச்சிகிட்டே இருக்கணும். உன் சிரிப்பை அழிக்க எதற்கும் சக்தி இல்லை " என்றான் அவன் அவளால் கையை பிடித்து லேசாக அழுத்தியபடி.

அவனுக்கு தெரிந்திருக்கவில்லை அவளின் இந்த சிரிப்பு அவளை விட்டு ஓடிப்போக போவதும், அவள் கண்ணும், மனதும் ரத்தக்கண்ணீர் வடிக்கப்போவதும். தெரிந்திருந்தால் ஒருவேளை அவளின் இந்த ஐடியாவை இவன் ஏற்றிருப்பான்.

காதலின் மாயவொளி Where stories live. Discover now