அத்தியாயம் 23

2.4K 187 28
                                    

ஒருமணி நேரம் கழித்து கையில் உணவு பொட்டலத்துடன் வந்தான் அவன்.   கதவை திறந்தவன் கடுப்பாகி போனான்.

" என்ன செய்து வைத்திருக்க பிசாசே.   இனி இதையெல்லாம் அடுக்க எவ்வளவு நேரமாகும்.? " என்றான் கசக்கி எறியப்பட்டிருந்த துணிகளை பார்த்துக்கொண்டு.

" அப்படித்தான் செய்வேன் "என்றாள் அவள் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு. 

"செய் செய்.  போட்டவ என் துணியை மட்டும் போடவேண்டியதுதானே,  எதுக்கு உன்னுடையதையும் போட்ட? " என்று கேட்டுக்கொண்டே பார்சலை டேபிளில் வைத்துவிட்டு அவற்றை ஒதுக்கினான்.

"என்னிடம் பேசாதே "என்றாள் முகத்தை திருப்பிக்கொண்டு.

"இப்போ என்ன நடந்துவிட்டது என்று கொதிக்கிற?  சைக்காலஜி படிக்காமலையா டாக்டர் ஆன.   ஒன்றை செய்ய கூடாது என்று சொன்னால்தான் மனுஷனுக்கு செய்யணும் என்ற வெறி வரும் " என்றான் அவன்.

"வெறி வந்தா சுவற்றில் போய் முட்டு.   எருமை மாடே,  இன்னொரு முறை இப்படி செய்து பாரு வாயை உடைச்சி விடுகிறேன் "என்றாள்.

"அது உன் கையில்தான் இருக்கு. "என்றவன் சாப்பாட்டை எடுத்துவைக்க தட்டை கழுவிக்கொண்டு வந்தான்.   மலையேறி அமர்ந்திருந்தவளை கெஞ்சி சாப்பிட வைத்தான்.   பயண களைப்பு என்று அவள் கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட இவன் சைட்டுக்கு சென்றுவிட்டான்.

"ஹலோ சார்,  எப்போ வந்திங்க?  உங்க டாக்டர் பிரெண்ட் வந்தாச்சா? " என்று வந்தார்கள் இரண்டு பெண்கள்.

"ஹாய் வந்து கொஞ்சம் நேரமாகிவிட்டது.  அவ டயர்ட்டா இருக்குன்னு தூங்கிட்டா "என்றான் இவன்.

நல விசாரிப்புக்கு பின் வேலையை தொடங்கினார்கள்.   மாலை வேலையெல்லாம் முடிந்து அனைவரும் தங்கள் இருப்பிடத்திற்கு வந்தார்கள்.   வரும் வழியிலேயே ஆஷ்னாவுக்கு தங்கும் இடத்தை பற்றி பேசிக்கொண்டே வந்தான் ஆதீஸ்வரன். 

பெண்கள் இவளை பார்ப்பதற்காக இவன் அறைக்கு வந்தார்கள்.  ஆறு  பேர்.   கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவர்கள் கண்ணில் முதலில் பட்டது கலைந்து கலந்து கிடந்த இருவரின் உடைகளும்தான்.   போகும் போது கீழே கிடந்த உடைகளை ஒதுக்கியவன் வந்து மடித்துக்கொள்ளலாம் என்று அப்படியே அதை அள்ளி ஒரு சேரில் வைத்துவிட்டு போனான்.   அவனே வந்து மடிக்கட்டும் என்று அவள் நன்றாக தூக்கி போனாள்.   அது அப்படியே இருந்தது.

காதலின் மாயவொளி Donde viven las historias. Descúbrelo ahora