சூர்யா பேசியதை கேட்ட ஆதீஸ்வரன் கோபத்தில் வெடித்தான்.
" ஷட் அப். முட்டாள் மாதிரி பேசாதே. ஒருவர் நமக்கு பிரெண்ட்னா எப்போதுமே பிரெண்ட்தான். அவங்க கஷ்டத்தில் இருந்தால் யாரு என்ன சொல்வாங்கன்னு நின்று வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறவன் மனுஷனே கிடையாது.அப்புறம் நான் சொன்னது ஒரு பிரண்ட்டுக்கு.
ஆஷு எனக்கு வெறும் பிரெண்ட் மட்டுமில்லை. " என்றான் ஆதீஸ்வரன்.சூர்யா ஆதீஸ்வரனுக்கு பிரெண்ட்தான் என்றாலும் அவனிடம் அவனுக்கு கொஞ்சம் பயம் உண்டு. ஆனால் இன்று அது அவனிடம் இல்லை.
" பிரெண்ட் மட்டுமில்லையென்றால் வேறு என்ன? சொல்லுடா வேறு என்ன? என்னன்னு சொல்லுவ அவ புருசனிடம் " என்று கத்தினான் அவன்.
" சொல்லுவேண்டா..... அவ புருசனிடம் என்ன? எவனிடமேன்றுவேண்டாலும் சொல்லுவேன் என் மொசக்குட்டி எனக்கு எல்லாத்தையும் விட பெருசுதான். அவளை எவனாவது கஷ்டப்படுத்தனும் என்று நினைச்சா கூட கொன்னு புதைச்சிடுவேன்" என்றான் ஆதீஸ்வரன் ஆத்திரம் பொங்க.
" ஆதி பி ப்ரக்டிகல். இப்போ அவ இன்னொருவனின் மனைவி. என் மொசக்குட்டின்னு சொல்வதை முதலில் நிறுத்து. அவளிடம் இவ்வளவு உரிமை எடுத்துக்க உனக்கு இனி ரைட்ஸ் கிடையாது. இருந்த ஒரே வாய்ப்பையும் அந்த ராஜேஸ்வரி பொம்பள வாய்க்கு பயந்து விட்டுட்ட. ஆஷுவை பத்திரமா, சந்தோசமா பார்த்துக்கணும் என்று நீ உண்மையிலேயே நினைச்சிருந்தா அவளை இன்னொருவன் கையில் இப்படி தூக்கி கொடுத்திருக்க மாட்ட." என்றான் சூர்யா.
" நான் யாருக்கும் பயந்து எதுவும் செய்யவில்லை. பணம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்குமென்று உனக்கு தெரியுமோ இல்லையோ ஆனா எனக்கு தெரியும். ஒருவேளை சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல் ஸ்கூலில் கிடைக்கும் சாப்பாட்டுக்காக என் அம்மா என்னை அங்கே சேர்த்துவிட்டாங்க. எத்தனையோ நாள் என் வயிற்றை நிரப்பிட்டு அவங்க பட்டினியா தூங்கியிருக்காங்க " என்றவன் கலங்கிய கண்ணுடன் வெளியே திரும்பிக்கொண்டான்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.