எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் இவர்கள் அங்கே போய் நிற்க, வாசலில் இருந்த செக்யூரிட்டி அவர்களை உள்ளே அனுப்ப மறுத்தான்.
"நாங்க ஆஷ்னாவுடைய அப்பா, அம்மா " என்று தனுஷ்கோடி அழுத்தி சொல்ல, சற்று தயங்கிய செக்யூரிட்டி
" யாரு வந்தாலும் பர்மிஷன் கேட்காமல் உள்ளே விடக்கூடாது என்று முதலாளி சொல்லியிருக்காங்க " என்றான் அவன்.
" இன்னைக்கு உனக்கு நேரம் சரியில்லை போல " என்றார் ராஜேஸ்வரி.
ஆனால் அவர்களை உள்ளே விடாமல் போனில் அனுமதி பெற்றுக் கொண்டே உள்ளே விட்டான் செக்யூரிட்டி.சூர்யாவுடன் சேர்ந்து நான்கு பேரும் உள்ளே சென்றனர் அவர்களை பார்த்த ராஜேஷ்
"நீங்கள் இரண்டு பேர் வந்ததாக மட்டும்தானே செக்குரிட்டி சொன்னான்" என்றான். அப்போது அவன் கண்ணில் இருந்தது என்ன என்ற ஆராய்ச்சியில் ஆதிஸ்வரன் இருந்தான். ஏனென்றால் அவன் கண்ணில் எதையோ மறைக்கும் பாவம் இருந்தது.
" ஒன்றும் இல்லை மாப்பிள்ளை இவர்கள் ஆஷ்னாவிடம் ஏதோ பேச வேண்டும் என்று கூறினார்கள். நாங்களும் அவளை பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டதால் பார்த்து விட்டு போகலாம் என்று வந்தோம் " என்றார் தனுஷ்கோடி
" யார் வீட்டுக்கும் செல்லும்முன் அவர்களிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்புவது மேனஸ் மட்டுமல்ல, நாம் பார்க்க விரும்பும் நபர் வீட்டில் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் தான் " என்றான் ராஜேஷ் சற்று சூடாக.
அவன் தங்களை மேனர்ஸ் இல்லாதவர்கள் என்று குறிப்பிடுகிறான் என்று இவர்களுக்கு தெரிந்தாலும் தனுஷ்கோடி அதை பொருட்படுத்தாமல் பதில் கூறினார்.
" இன்று சன்டே என்பதால் நீங்கள் இருவரும் வீட்டில் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில்தான் மாப்பிள்ளை கிளம்பி வந்தோம் " என்றார்.
" நீங்கள் இவ்வளவு தூரம் வந்தது வீணாக சென்று விட்டதே என்று தான் அப்படி கூறினேன் " என்றான் ராஜேஷ்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.