அத்தியாயம் 31

3.2K 188 42
                                    

தூங்குவதில் அவள் கும்பகர்ணி என்று அவனுக்கு தெரிந்ததால் அவள் தள்ளி போய் படுத்ததை அவன் பெரிதாக நினைக்கவில்லை.   அவள் தூங்கும் வரை காத்திருந்தவன் மெல்ல அவளை திரும்பி அப்பி கொண்டு படுத்துகொண்டான்.

காலையில் அலாரம் அடிக்க அதை நிறுத்த முயன்றவள் பாரத்தை உணர்ந்து,  கஷ்டப்பட்டு அலாரத்தை நிறுத்தினாள்.   பிறகு அவனுக்கு ஒன்று போட்டவள்
" நடிக்காதே பக்கி.   நானே அலாரம் அடித்த சத்தத்தில் எழுந்துவிட்டேன்,  நீ தூங்குறன்னு நம்பிடணுமா?  எழுந்திரு. " என்றாள் அவனை தள்ளிக்கொண்டு.

அசையாமல் படுத்திருந்தவன்
" தொந்திரவு செய்யாதே.  நைட்டெல்லாம் பேசி பேசியே என்னை டயர்ட்டா ஆகிட்ட.  எனக்கு தூங்கணும் போல இருக்கு.  பேசாம இரு. " என்றவன் அவளை இன்னும் நெருங்கி படுத்தான்.

அவள் அசையாமல் படுத்திருந்தாள்.  இவன் அப்பப்போ சின்ன சின்னதாய் அசைந்து கொண்டிருந்தான்.  வெளியே எதுவும் காட்டிக்கொள்ளாவிட்டாலும் ' இந்த திருமணம் எல்லாம் எதற்காக '?  என்று விரக்தியாக பேசிய அவள் மனதில் சின்ன சின்ன சந்தோச துளிர் விடத்தொடங்கியது.

அது இவன் தொடுகையால் அல்ல.  திருமணம் முடிந்த நாளில் இருந்து அவள் அதை உணர்ந்துகொண்டுதான் இருக்கிறாள்.  யாருக்காகவும்,  எதற்காகவும் யோசிக்காமல்,  பயப்படாமல் தங்கள் துணையோடு சேர்ந்திருக்க இந்த திருமணம் அவசியமானதுதான்.  என்னவன்,  என்னவள் என்ற எண்ணம்  உரிமை எல்லாம் இதனாலல்லவா கிடைக்கிறது.

அந்த மும்பையில் இவன் மார்பில் சில இரவுகளை கழித்திருக்கிறாள். ஆனாலும் மனதிற்குள் ஒரு முணுமுணுப்பு கேட்டுக்கொண்டே அல்லவா இருந்தது.  இன்று என்னை யாரு கேட்பார்கள்.? 

அவன் வீட்டில்,  அவன் மடி என்ற சிம்மாசனத்தில் நான் ராணி.  இது எனக்கான இடம்.  எனக்கான இடம் மட்டும்தான்.  வேறு யாருக்கும் இந்த உரிமையில்லை.  அவன் அன்பு,  அவன் காதல்,  அவன் தொடுகை இது எல்லாம் எனக்கு மட்டும்தான் என்ற எண்ணமே சிறகே இல்லாமல் வானத்தில் பறக்க வைக்கிறதே!!!!

காதலின் மாயவொளி Where stories live. Discover now