அத்தியாயம் 22

2.3K 201 33
                                    

அன்று முதல் ஆஷ்னா ஹாஸ்பிடல் போக தொடங்கினாள். முதல் நாள் சிறு சலசலப்பு கேட்கத்தான் செய்தது. ஆனால் அது உடனே மறைந்தும் போனது. ஹாஸ்பிடல் அவளுடையது என்கிற போது யார் என்ன பேசிவிடப்போகிறார்கள்??

ஆஷ்னா தனக்கு நடந்த பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கினாள். அது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவளை எளிதாக விடவும் யாரும் தயாராகவும் இல்லை.

காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பது போல் பெரிய தலைவலியாக இருந்தான் ராஜேஷ். மானம் மரியாதை என்று பெயருக்காவது இருந்திருந்தால் அவன் சும்மா இருந்திருப்பான். போதை ஏறிவிட்டால் தாய் யார் தாரம் யார் என்று தெரியாத தறுதலையாக இருந்தான் அவன்.

அறிந்தவர் தெரிந்தவர்கள் என்று எல்லோரிடமும் இவளை பற்றி தப்பும் தவறுதளுமாக பேசிகொண்டே இருந்தான். ஹாஸ்பிடல் வந்து கலாட்டா செய்தான். தனுஷ்கோடி போட்டிருந்த ஸ்பெஷல் செக்கியூரிட்டி அவன் அவளை நெருங்கவிடாமல் பார்த்துகொண்டார்கள். ஆனாலும் ஒருநாள் அவர்களையும் மீறி அவன் செய்த கலாட்டாவினால் போலிஸ்ஸை கூப்பிடும்படியாக ஆனாது. ஏற்கனவே ஆஷனா வீட்டிலிருந்து அவனை அன்று இழுத்து போன போலிஸ் என்பதால் அவனை ஒருநாள் காவலிலும் வைத்தார்கள். ஆனால் அவனுடைய அப்பா அவனை வெளியே கொண்டுவந்துவிட்டார்.

அவனை சமாளிக்க முடியாமல் பெற்றொர் தினற அதை பற்றி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள் ஆஷ்னா. ஆதிஷ்வரனும் அமைதியாக இருந்து நடப்பதை வேடிக்கைப்பார்த்துகொண்டிருந்தான்.

" என் வலது கை, வலது கால் என்பிர்களே, இவ்வளவு பிரச்சனை நடக்கிறது எதையுமே கண்டுக்காமல் அவளுக்கு வைத்த ட்ரைவர் மாதிரி கூப்பிட்ட வரான், விட்டுட்டு போறான். ஏற்கனவே அந்த குடிகாரன் ஊரில் மானத்தை வாங்குகிறான். இதில் இவள் வேற இவனுடன் ஊரை சுற்றி வருகிறாள்." என்றார் ராஜேஸ்வரி.

" நீ இன்னும் திருந்தவில்லை இல்லையா? உன்னுடைய மானம் அனைத்தையும்தான் நீ பார்த்த அழகு மாப்பிள்ளை வாங்கிவிட்டானே, இன்னும் போவதற்க்கு மிச்சம் மீதி எதாச்சும் இருக்கிறதா என்ன? ஆதியைப்பற்றி நீ என்றுதான் நல்லவிதமாக யோசித்திருக்கிறாய் இன்று யோசிப்பதற்க்கு? மாப்பிள்ளை பார்த்தது நீ, ஆனால் பிரச்சனை என்றால் மட்டும் அவன் வரவேண்டுமா? உன் மகளுக்கு ஹாஸ்பிடல் போகும் வழியில் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்றுதான் அவன் அவளுடன் போகிறான்.  

காதலின் மாயவொளி Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin