மாலை அவள் லேட்டாகத்தான் வந்தாள். ஆதீஸ்வரன் கிட்சனில் நிற்பதை பார்த்து உள்ளே சென்றவள்
" ஆதி நாளு இட்டலியை கடையில் வாங்கிக்கலாமே. எதுக்காக சமைச்சிட்டு இருக்க? களைப்பாதானே வந்திருப்ப? " என்று அவன் முதுகில் தலையை சாய்த்துக்கொண்டு நின்றாள்." உன் மாமியாருக்கு பதில் சொல்வது யாரு?" என்றவன் அவளை இழுத்து முன்னே கொண்டுவந்தான்.
" ஷனு போனில் முத்தம் கொடுக்குற, பைக்கில் போகும் போது முதுகில் முத்தம் கொடுக்குற, ஆனா நேரா ஒண்ணுமே தரமாட்டேங்கியே" என்றான் அவளின் கன்னத்தை மிருதுவாக தடவிக்கொண்டு.
" ஓஹோ ஐயாவுக்கு இப்படி ஒரு மனக்குறை இருக்குதா? ஆமாம் நீங்க எத்தனை முறை அப்படி விழுந்து விழுந்து முத்தம் கொடுத்திங்க? " என்றாள் அவனின் கையை விலக்கியபடி.
" நீ அப்படி வரியா? நீ பர்மிஷன் தரலையே எனக்கு " என்றவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டான். பதில் பேச நினைத்தாலும் முடியாமல் நின்றாள் அவள். அடுப்பை சிம்மில் வைத்தவன் அவளின் முகமெங்கும் முத்தத்தை பதித்தான். இவள் கண்ணை மூடி மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு நிற்க
" ஆதி " என்று கதவு சத்தம் கேட்டு கண்ணை திறந்தவள் அவனை தள்ளிவிட்டுக்கொண்டு ஓடினாள். பின்னாடியே வந்தவனை பார்த்த அந்த அம்மா
" ஆதி நம்ம மஞ்சுளாவுக்கு இது ஒன்பதாவது மாசம். வயிறு வலிக்குன்னு சத்தம் போடூறா. நான் ஆஷ்னா புள்ளைய கொஞ்சம் கூட்டிட்டு போறேன் " என்றாள்." ம் " என்றவன் மனைவியை பார்த்தான். அவள் இவன் பக்கம் கூட திரும்பாமல் அந்த பெண்ணுடன் சென்றுவிட்டாள்.
திரும்பி சீக்கிரமே வந்துவிட்டாள். பிரசவத்திற்கு இன்னும் 10நாள் ஆகும் என்று. இவளை விட வந்த அந்த பெண்மணி
" ஏன் ஆதி தம்மாத்துண்டு பையனெல்லாம் அப்பாவாக போகிறான். நீ எப்போ எங்களுக்கு நல்ல செய்தி சொல்ல போற? " என்றாள்." ஆங் இப்படி என் பொண்டாட்டியை கூட்டிட்டு கூட்டிட்டு போயிடுங்க. சீக்கிரமே நல்ல செய்தி சொல்லிடுவேன் " என்றான் இவன்.
KAMU SEDANG MEMBACA
காதலின் மாயவொளி
Romansaஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.