" நேற்று கிரவுண்டில் ஒருத்தனுடன் அடிபிடி போட்டு காட்டான் மாதிரி நடந்துக்கிட்டவன் இவன்தான் என்று யாரும் அடித்து சத்தியம் செய்தாலும் ஒரு பய நம்பமாட்டான். " என்றாள் ஆஷ்னா ஆதீஸ்வரன் நேர்த்தியான உடையுடன் மைக் முன்னே நின்றுகொண்டு பேசும் வீடியோவை பார்த்து.
" இவன் கடவுள் பாதி, மிருகம் பாதி சேர்த்து செய்த கலவை. ஆஷு அதை விடு. என் விசயத்திற்கு வா. இந்த பவானி பிடியே கொடுக்க மாட்டேங்குறா. இருக்கு ஆனா இல்ல என்ற ரீதியில் இருக்கா. அவளை கரெக்ட் பண்ண ஏதாச்சும் ஐடியா கொடேன்" என்றான் சூர்யா.
" சும்மா கதை விடாதே சூரி. நீங்க இரண்டு பேரும் பார்க்கில் பேசிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேனே " என்றாள் ஆஷ்னா.
" அதைத்தான் நானும் சொல்கிறேன். பேசுறா, பழகுறா ஆனா லவ்வுன்னு சொன்னா மட்டும் உம்முன்னு பத்து நாள் பேசமாட்டேங்கிறா " என்றான் சூர்யா வருத்தத்துடன்.
" பத்து நாள் கழித்து பேசுறாதானே. அப்படின்னா ரிசல்ட் பாசிட்டிவ்தானே டியூப்லைட்டே. நீ எப்பவும் ஆதியுடன் சுற்றிக்கொண்டிருக்கிறாயே அதான் பயப்படுவாளா இருக்கும். ம்.. உனக்காவது பேச ஒருத்தி இருக்கிறாள். ஆனால் என்னை நினைத்துப்பாரு. ஒருத்தனாவது என்னை திரும்பி பார்க்கட்டுமே. வர வர என் மேலே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. பார்க்க காட்டேரி மாதிரி அடுத்தவங்க கண்ணுக்கு தெரியுறேனோ என்று. அப்படியொன்றும் இல்லையே" என்று கார் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து சிரித்தாள் ஆஷ்னா.
" இதுக்கும் அவன்தானே காரணம். இவனிடம் போய் பிரெண்ட்ஷிப் வைத்துக்கொண்டோமே நம்மை அறுந்த செருப்பால் அடிக்கணும். " என்றான் சூர்யா.
அப்போது சற்று தொலைவில் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு வந்துகொண்டிருந்தான் ஆதீஸ்வரன்.
" வாரே வா. ஆஷு நம்முடைய கதறல் கடவுள் காதில் விழுந்துவிட்டது போல. நேற்றுதான் பயலுக்கு அட்வைஸ் செய்தேன். பய அதை கப்புன்னு பிடிச்சிக்கிட்டானே. இவனுக்கெல்லாம் டக்குன்னு லவ் செட்டாகிவிட்டதே. எனக்கு மட்டும் ஏன் இப்படி? சரி இவனுக்கு ரூட் க்ளியர் என்றால் அடுத்து நமக்குத்தான். ஆஷு உனக்கு பிடித்த பணக்கார டாக்டர், பிசினெஸ்மேன் யாராச்சும் இருந்தா பாரு. உனக்கும் ரூட் க்ளியர் ஆகிவிடும் " என்றான் சூர்யா சந்தோசத்துடன்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.