இரண்டு நாள் கிழிந்த பிறகு அவள் கையில், முகத்தில் இருந்த தழும்பு காணாமல் போயிருந்தது.
" ஆஷு " என்று அழைத்துக்கொண்டே அவள் அறைக்குள் நுழைந்தவன் பின்னே ஒரு பெண் நின்றிருந்தாள். அவளுக்கு அந்த பெண்ணை தெரியும். பார்லருக்கு ஐப்ரோ செய்ய போகும் போது அங்கே பார்த்திருக்கிறாள்.
"ஆதி இவங்க "என்று இழுத்தாள்.
" களையிழந்து போயிருக்கிற முன் முகத்திற்கு கொஞ்சம் டச்சப் கொடுக்க வந்திருக்காங்க " என்றான்.
"ஆனா நான் எப்போதும் ஐப்ரோ தவிர வேறு எதுவும் செய்யமாட்டேன்"என்றாள்.
" பரவாயில்லை இப்போ செய்துக்கோ" என்றவன் சோபாவில் போய் அமர்ந்தான். வந்த பெண் அவள் வேலையை தொடர முன்னே போல இல்லையென்றாலும் கிட்டத்தட்ட பழையபடி ஆனாள். அந்த பெண் கிளம்பிவிட
"ஆஷு கிளம்பு ஹாஸ்பிடல் போகலாம்" என்றான்.
"எனக்கு எங்கேயும் போக விருப்பமில்லை."என்றாள்.
"விருப்பமில்லையா? இல்லை பயமா இருக்கா? "என்று கேட்டான்.
"பயமாதான் இருக்கு ஆதி. அவன் ஒரு சைக்கோ. வெளியே வைத்து அவன் குணத்தை காட்டினால் என்னால் தாங்கிக்க முடியாது. "என்றாள்.
" நான் இருக்கும் போது அப்படியொன்றும் நடக்காது. டிவோஸ் கிடைக்கும் வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது. அப்புறம் அவன் தொந்திரவே உனக்கு வராது. கிளம்பு பார்த்துக்கலாம். நீ இப்படியே இருந்தா குற்றவுணர்விலே எனக்கு ஏதாச்சும் ஆகிவிடும். உனக்கு பிடிச்சதை செய். எங்கேயாவது கேம்ப்க்கு போகணுமென்றால் போ. எங்கேயுமே போக பிடிக்கவில்லையென்றால் குப்பத்து ஜனங்களுக்கு இலவசமாக மருத்துவம் பாரு.
நீ டாக்டர். நான் சொல்வது கேட்குதா? நீ டாக்டர். இன்னைக்கு ஏழை மக்களுக்கு கிடைக்காத லிஸ்டில் இருப்பது மருத்துவமும்தான். அதை அவர்களுக்கு கொடுக்க உனக்கு படிப்பு, பணம், வசதி, மனசு அத்தனையும் இருக்கு. ஏதாச்சும் செய். அதைவிட்டுவிட்டு அந்த வீணா போனவனை பற்றி, அவன் பேசியதை பற்றி நினைச்சிகிட்டே இருக்காதே.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.