" என்னாச்சுக்கா? அண்ணன் பயப்படுமுன்னு வண்டியை உருட்டிட்டே போவ? இன்னைக்கு இப்படி சப்பி வச்சிருக்க? " என்றான் மெக்கானிக் பையன்.
ஆதீஸ்வரன் அவளை பார்க்க
" இதையெல்லாம் கண்டுக்க கூடாது. ஆனைக்கும் அடி சறுக்கும்." என்றாள் அவள்." வாயப்பாரு " என்று தனக்குள் முனங்கியவன் அவளை வண்டியை ஓட்ட அனுமதிக்காமல் தான் ஓட்டிக்கொண்டு போனான். நேராக சூர்யாவை தேடி சென்றவனின் கையை பற்றிக்கொண்டே போனாள் இவள்.
" ஏய் ஏய் ப்ளீஸ் வருண், அவனை எதுவும் செய்யாதே. அவனே கரைஞ்சு கரைஞ்சு இப்போதான் லவ்வை சொல்லியிருக்கான். ஹப்பி மூடில் ஏதாவது கிறுக்கு தனமாக யோசித்திருப்பான். விடுப்பா சொன்னா கேளு " என்று கெஞ்சிக்கொண்டே வந்தாள் ஆஷ்னா.
" ஆஷு வாயை மூடிட்டு வா. நீ சொல்ற எல்லாத்தையும் கேட்டுட்டு தலையை ஆட்டுற பூம்பூம் மாடுன்னு நினைச்சிட்டியா என்னை. இப்படித்தான் இருக்கணும் என்றால் அப்படித்தான் இருக்கணும். லூசு பய உன்னை கொல்ல பார்த்திருக்கிறான் !!!! அவனை சும்மா விட சொல்றியா? இன்னைக்கு நான் கொடுக்கும் கொடையில் இனிமே அவன் உனக்கு போன் பண்ண கூடாது. " என்றான் ஆதீஸ்வரன்.
" என்ன சொல்ற வருண்? நீ பூம்பூம் மாடு இல்லையா? உன் மொசக்குட்டி சொன்னா நீ கேட்க மாட்டியா? " என்றாள் அவள் அழுவது போல.
நடந்துகொண்டிருந்தவன் நின்றான்.
" என்ன? இப்போ எதுக்கு இந்த ஸீன்? " என்றான் அவன்." நீ மொசக்குட்டி சொன்னா கேட்க மாட்டல. போ நான் போறேன். உன்னிடம் சண்டை. ஸ்கூட்டியையாவது காரில் கொண்டுதான் விட்டேன். காரை கண்டைனருக்கு அடியில் விடுவேன் பார்." என்று அவள் கண்ணை கசக்க
" ஏதாவது நேமிசம் பண்ணிட்டு வந்தியா என்ன? இன்னைக்கு அடி வாங்கியே தீருவேனென்று. பல்லை கழற்றி கையில் கொடுத்துவிடுவேன். நீ ஒழுங்கா இருந்திருந்தால் அவன் ஏன் இந்த வேலையை பார்க்க போகிறான்? " என்றான் ஆதீஸ்வரன்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.