வாழ்க்கை என்பது ஒரு முள் படுக்கை. அதில் இருக்கும் துன்பத்திற்கு அளவே இருப்பதில்லை. வலியும், துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை. இது மனிதர்களுக்கு பொதுவாக சொல்லப்படும் வாக்கியம். மனிதர்கள் என்று சொல்லப்படுவது ஆணும் பெண்ணும்தான். ஆனால் யதார்த்தம் அப்படியா இருக்கிறது.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு அளவு இருக்கிறதா இன்று நமது சமுதாயத்தில். மாட்டை அடிக்கக்கூடாது என்று சொல்லும் சட்டம் கட்டிய மனைவியை அடிக்க கூடாது என்று சொல்லவில்லையே. பாதிக்கப்பட்ட பெண் கேஸ் கொடுத்தால் அது விவாதிக்கப்படும். ஆனால் தன் வீட்டு பிரச்சனை படித்தாண்டி போவதை அநேக பெண்கள் விரும்புவதில்லை.
பிறப்பில் இருந்து ஆரம்பிக்கும் பிரச்சனையை, உலகத்திலிருந்து மறையும் வரை தொடர்கிறது. சாய்ந்து அழ ஒரு தோள் இல்லாமல் தடம்புரண்டு போகும் பெண்கள் ஏராளம். எவனையோ நம்பி ஏமாந்து போனாள் என்று எளிதாக கூறப்படும் செய்திக்கு பின்னால் இருப்பது என்ன? அன்பிற்கான தேடல். ஏமாற்றபடுகிறோம் என்று தெரிந்தும் சிரித்துக்கொண்டே, மானம் ஈனம் பாராமல் வாழும் பெண்களுக்கு பின்னால் இருப்பது அன்பிற்கான தேடல்.
ஏட்டில் எழுதமுடியாத அளவுக்கு கொட்டிக்கிடக்கிறது பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள். ஒரு ஆண் தன்னுடைய முதல் அஸ்திரமாக நினைப்பது அந்த வார்த்தைகளைத்தான்.
என்றுமே காதல் பாடலுகளுக்கும், காதல் புத்தகங்களுக்கும் வரவேற்பு அதிகம்தான். காரணம் காதல் இல்லை, அன்பிற்கான தேடல். வாழ்க்கையில் இல்லாத காதலை ஏட்டிலாவது அனுபவித்துவிட மாட்டோமா என்று தவிக்கும் பெண்கள் பெருகிக்கொண்டே போவது அழிவிற்கான அறிகுறி.
இதோ இந்த ராஜேஷ்ஷை போல கோடிக்கணக்கான ராஜேஷ் இருக்கிறார்கள் நம்மை சுற்றி. அவர்கள் பேசுவதற்கு முன் தன் தாயையும் சகோதரிகளையும் நினைத்து பார்ப்பதே இல்லை.
என் தேவதை என்று ஆதீஸ்வரன் மனதிற்குள் வைத்திருந்த பெண்ணை ஒரு வெறிநாய் வாரத்தையாலையே கடித்து குதறிகொண்டிருந்ததை பார்த்தவன் யாரும் செய்ய துணியாத காரியத்தை செய்தான்.
YOU ARE READING
காதலின் மாயவொளி
Romanceஇரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.