அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்.., எங்கோ தெரிவது போல் மறைவது காதல்..💔
வீட்டில் சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்தவன் , சனாவிடம் வீடு பார்த்துட்டியா..? என கேட்க,
அவளோ " சாரி தேவஜித் , கண்டிப்பா நீ வர மாட்டன்னு நினைச்சுட்டு இருந்தேன்.,ஒரு 2 பேர்ட்ட சொன்னேன் எதுக்கும் இருக்கட்டும்ன்னு., அவுங்களுக்கு ஃபோன் பண்றேன் , ஓகே சொன்னாங்க ன்னா போய் பாரு.? என்ன சொல்ற ?
உன் தப்பு பார்க்காம இருந்தது ! சோ நீயும் வந்து வீடு தேடி குடு ஒழுங்கா.! என்றவன் எனக்கு இப்போதைக்கு குளிக்கணும் எங்க போகட்டும் ? என்றான்.
தன் ரூமிற்கு எதிர்த்த ரூமை காட்டியவள், தன் போனை எடுத்து கொண்டு நகர்ந்தாள்..
குளித்து விட்டு வெளியில் வந்தவன் , அங்கு டேபிள் மீது இருந்த காஃபி ஐ எடுத்து ஒரு சிப் செய்து விட்டு ,
ஹே சனா , சமைப்பியா ?" காஃபி இஸ் டூ குட் ரா " என கூறிவிட்டு டிவியை ஆன் செய்தான்.
அவனுக்கு எதிர்த்த சோஃபாவில் அமர்ந்தவள் , சிரித்துவிட்டு டிவியை பார்க்க..
கூட யாரும் ஸ்டே பண்ணலயா சஹானா ? " என்க.,
அது.. ஒரு பொண்ணு இருந்தா லாஸ்ட் வீக் அவ காலி பண்ணிட்டா.
என்ன ரீசன் ?
நான் தான் காலேஜ் போவேன்.,அவ ஒர்கிங் , ரெண்டு மாசம் முன்னாடி வரைக்கும் இங்க பக்கத்துல ஒர்க் பண்ணா , அப்பறம் மெயின் பிராஞ்ச் போஸ்டிங் வந்துருச்சு.,அப்புறமும் நான் தனியா இருப்பேன்னு இங்க ஒரு மாசம் இருந்தா.. பட் ஷீ சஃபர்ஸ் அ லாட் ! செலவு அதிகமா ஆகுது அவ டிரான்ஸ்போர்ட் க்கு சோ , .
அப்போ நான் சொன்னா கோச்சிக்க மாட்டேனா சொல்றேன் ஒன்னு என அவன் இழுக்க.,
பெரிசா என்ன சொல்லிடுவ இங்க ஸ்டே பண்றேன்னு சொல்லுவ ? அதானே ? என அவள் புருவத்தை உயர்த்த.,
ஆப் கோர்ஸ் எஸ் ! எதுக்கு அலையணும்., ?
" இட் மே ஹவ் சம் பிராக்டிகல் பிராப்ளம் தேவ் ! "
என்ன பிராப்ளம் ?
வீட்ல சொன்னா என்ன பண்ணுவாங்க ன்னு உனக்கு தெரியும். அது இல்லாம என் அம்மா என்கிட்ட இப்போ வரை பேசல , அப்பாக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது , இன்னும் ஒன்னு எனக்கே எப்டி இருக்கும்ன்னு தெரில.,
வீட்ல பெர்மிஷன் வாங்கணும் னா நான் கேக்குறேன் , உங்க டாடிக்கு ஃபோன் பண்ணி என்கிட்ட குடு., என அவன் அசால்ட் ஆக கூற.,
அவனை கூர்மையாக பார்த்தவள் , உள்குத்து இருக்கா எதுவும் !? என கேட்க ,
சத்தியமா இல்ல , நம்பிக்கை இல்லனா எனக்கு ஒரு ஃபைவ் டேஸ் டைம் குடு நான் வீடு தேடுற வரை இங்க இருக்க ! என்றான்.
இல்லை என்பது போல் தலையை ஆட்டியவள் எதையோ யோசிக்க , அவள் முன்னையே அமர்ந்து அவள் தந்தையிடம் பேசி சில திட்டுகளை வாங்கி , எதோ சொல்லி சமாளித்து போனை வைத்தான்.
எப்பா ! கொடுமை., தாங்க்ஸ் சனா ஃபார் தி பிளேஸ் ! என கூறிவிட்டு தன் ரூமிற்கு செல்ல ,
இங்க என்ன நடந்துச்சு இப்போ என்பது போல் அமர்ந்து இருந்தவள் , இவன் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு சொன்னேன் , இப்போ அவன் இங்க இருக்கேன்னு சொன்ன உடனே ஈன்னு பல்ல இளிச்சிக்கிட்டு இருக்கேன் , அவன் கூட எப்டி இருக்க முடியும் என்னால என பலவாறு யோசித்து கொண்டிருந்தாள் நம் மாது ..❤️
Votes and comments pannunga adutha update one two days la potuduren ! Please support makkaley ! ❤️
YOU ARE READING
என் நெஞ்சின் தீயே..!
Romance" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!