24 . சஹா..❤️

283 15 4
                                    

அந்த  நிமிடம் தான் வாழ்வதே அர்த்தமற்றது போல் உணர்ந்தான் அவன். டாக்டர் பின்னே சென்றவன் , " டாக்டர் பிளீஸ் , வேற எதுவும் பண்ண முடியாதா ?  எனக்கு அவ வேணும்  கண்டிப்பா !." என கெஞ்சியவனை பாவமாக பார்த்தாலும் குரலை கடினமாக்கி " நீங்க அமெரிக்காவே கூட்டிட்டு போனாலும் இந்த ட்ரீட்மென்ட் தான் குடுப்பாங்க , சோ பிளீஸ் கன்ட்ரோல் யுவெர்செல்ஃப் " என்றுவிட்டு அவர் செல்ல , அப்படியே அமார்ந்தவன் அவளிடம் திரும்பி வராமல் இருந்து இருக்கலாம் என நினைக்காமல் இல்லை , கண்களை மூடி அமர்ந்தவனுக்கு இன்று காலை கூட அகில் என கொஞ்சியவளின் குரல் கேட்க தான் இருந்த இடம் கருதி வீட்டிற்கு வந்தவன் அவள் ஃபோட்டோவை கையில் எடுத்து பார்த்து கொண்டே இருந்தான் , அவன் கண்ணீர் சொட்டு சொட்டாய் அவள் புகைப்படத்தில் விழ , அது அவளுக்கு புரிந்திருக்கும் போல் , மூன்று மணி நேரம் கழித்து தெரிய வேண்டிய முன்னேற்றம் , ஒரு மணி நேரத்தில் அவளிடம் தெரிந்து விட , அவளை சோதித்த மருத்துவர் , அதிர்ந்து தான் போனார் . அவனை தேடி வந்தவர் அவனை காணாமல் நர்ஸ்ஸிடம் அவனை பற்றி விசாரிக்க  சொல்லிவிட்டு சென்றார்.

இந்த கொலை முயற்சி தனக்கு என தெரிந்தவனுக்கு , அது யார் என்றா தெரியாமல் போகும் , வண்டியை எடுத்தவன் ஒரு பாழ் அடைந்த குடோன் முன்பு நிறுத்தி விட்டு உள்ளே செல்ல அங்கு இருவர் சீட்டு ஆடி கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் சென்றவன் அப்படியே நிற்க அதில் ஒருவன் " போலீஸ் டா , நம்ம தான் ஒண்ணுமே பண்ணல ஆனா ஏன் நம்மல தேடி வந்தாரு சாரு " என இன்னொருவனிடம் கூற பொறுமை இல்லாமல் அவர்கள் இருவரையும் இழுத்து வந்து ஸ்டேஷனில் விட்டவன் " ஒழுங்கு மரியாதையா யாருன்னு ஒத்துக்கோ உனக்கு நல்லது என ஒருவனிடம் கூற "

" எங்கள பிடிக்க தெரிஞ்ச உனக்கு யாரு சொல்லியிருப்பான்னு கூடவா தெரியாது , போய் நீயே பிடிச்சு கூட்டி வா சார் "

அவன் வெகு நாட்கள் தேடி அலைந்த அந்த டிரக் கேஸ்ஸில் அவனுக்கு கிடைத்த ஒரே க்ளூ  சனாவுக்கு இவ்வளவு பெரிய ஆபத்தை தந்திருக்க , இன்றோடு அதை முடிக்க நினைத்தவன் ஒரு கம்பனி நோக்கி தன் வண்டியை செலுத்தினான்.

என் நெஞ்சின் தீயே..! Where stories live. Discover now