9 . சஹா..❤️

369 28 23
                                    

அந்த இரவு நேரத்தில் தனக்கு இத்தனை மெசேஜ் அனுப்புவது  யார் என யோசித்து கொண்டே போனை எடுத்தவன் அதில் இருக்கும் பெயரை பார்த்தவுடன் தான்.. " அயியோ இவள எப்டி மறந்தேன்.." என தலையில் அடித்து கொண்டான்..

அதை திறக்கவே அவனுக்கு பயமாய் இருக்க.. அதை படிக்க படிக்க எதோ செய்ய கூடாத விஷயத்தை செய்தது போல் சுவற்றில் தன் தலையை இடித்து கொண்டு " உனக்கு லவ் அவசியமா அவசியமா !?" என தன்னையே கேட்டுக் கொண்டிருந்தான்..

இப்போ எப்டி சமாதானம் பண்ணுவேன் இவள !? " பேசாம நாளைக்கு நேர்ல போய் கால்ல விழலாம் " என நினைத்து கொண்டவன் .. சரி அவ நம்மல ஒன்னும் சொல்ல மாட்டா என தனக்கே கூறிக்கொண்டு உறங்க சென்றான் !!

அடுத்த நாள் அவளை பார்த்து காலில் விழாத குறையாக கெஞ்சி சமாதான படுத்தியவன் அவளை பார்த்துக்கொண்டே " நேத்து கெஞ்சி சோகமா பேசுனா இன்னிக்கு நம்மல கெஞ்ச வைக்கிராளே.." கொஞ்சம் உஷாரா இரு டா தேவ் என நினைத்து அவன் தோளில் அவனே தட்டி கொள்ள.,

டேய் பைத்தியம் என்ன தனியா எதோ பண்ற.. என கேட்டவளிடம் " ஒன்னும் இல்ல " என இளித்து வைத்தான்..!

சிறிது நாட்களுக்கு பிறகு.,

தேவ்!! ஒரு வழியா ரிசல்ட் வந்துருச்சு.. ஆனா நான் ஒரு ஆறு மாசம் வெயிட் பண்ணலாம் அப்டின்னு நினைக்கிறேன் ! நீ என்ன சொல்ற ??

ஏண்டி ? ஆறு மாசம் வீட்டுல இருந்து என்ன பண்ண போற ?

ஜே. இ. இ. கட் ஆஃப் எனக்கு பத்தல..அதான்!! எனக்கு கர்நாடகா போய் படிக்கணும்னு ஆசை !

எதே ! கர்நாடகா வா ? என்ன புதுசு புதுசா சொல்ற.. என்ன நெனச்சுகிட்டு இருக்க நீ !! நம்ம ஊருல இல்லாத காலேஜ் ஆஹ ?

நான் பண்ண போற கோர்ஸ் அங்க தான் நல்லா இருக்கும்..! இன்னும் ஏழு மாசம் ஆவும் நான் போகுறதுக்கு.. வொர்ரி பண்ணாத..!

எதோ பண்ணு ! நான் சொன்னா கேக்கவா போகுற ஹ்ம்ம் !!

தேவ் சென்னை செல்ல விரும்பி அது முடியாமல் போக அங்கே ஐடி சேர்ந்து படித்து கொண்டிருந்தான்..அவளும் இன்ஸ்டிட்யூட் சேர்ந்து இருந்தாள்..!

என் நெஞ்சின் தீயே..! Where stories live. Discover now