2 வாரங்களுக்கு பிறகு.,
நாளைக்கு டூட்டி ஜாயின் பண்ணனுமா தேவ் ? என காலண்டர் ஐ பார்த்துக்கொண்டே கேட்டாள் சனா
ஆமா மா ! என தன் அறையில் இருந்தே கத்தினான் ,
தன் அறையில் தான் மிக மிக கடினப் பட்டு , இழக்க கூடாத அனைத்தையும் இழந்து , எத்தனையோ துன்பங்களை பார்த்து வாங்கிய அந்த காக்கி உடையை ஆசை ஆசையாக அயர்ன் செய்து கொண்டு இருந்தவனை வந்து பார்த்தவள் , அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்த்து அவனை தூரத்தில் இருந்து ரசித்து விட்டு பக்கத்தில் செல்ல , அந்த உடையை பார்த்தவளுக்கு மகிழ்ச்சியும் வருத்தமும் சேர்ந்து வந்தது..சத்தம் போடாமல் வெளியில் வந்தவள் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
அவள் வந்ததை உணர்ந்தவன் , அவளை காணாமல் ஹாலில் பார்க்க அங்கும் இல்லாமல் போக , திரும்பி தன் அறைக்கு சென்றுவிட்டான்..
தன் அறையில் அமர்ந்தவள் , அந்த வேலைக்காக தன என்ன வேண்டாம்ன்னு சொன்னான் , பின்ன நான் ஏன் அவன பார்த்தா இப்போவும் சந்தோஷ பட்டு பழைய மாதிரி அவன சுத்தி சுத்தி வரென் ? என யோசிக்க தேவை இல்லாத ஞாபகங்கள் அவளை வாட்ட , கலங்கிய கண்களை துடைத்து கொண்டு படுத்துவிட்டாள் .அவனிடம் அன்பாக மட்டுமே இருந்து விட்டவளுக்கு கோவத்தை காட்ட மனம் வரவில்லை ., ஒரு முடிவை எடுத்தவள் அப்படியே உறங்கி விட ரெண்டு மணி நேரம் கழித்து அவள் அறைக்கு வந்த தேவ் அவள் அருகில் சென்று உறங்கி கொண்டு இருந்தவளை எழுப்பினான்.
எழுந்தவள் , சாரி ! தூங்கிட்டேன் . இரு எதாச்சும் செய்யலாம் என வெளியில் வர அவன் செய்து வைத்திருந்த தோசையை பார்த்து , உனக்கா ? எனக்கா ? என கேட்டாள்.
" நான் சாப்பிட்டேன் ! தட்ஸ் ஃபார் யூ ! " என கூறிவிட்டு அமர்ந்து கொண்டான். சாப்பிட்டு முடித்தவள் , எழுந்து அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு அவனிடம் வந்து " தாங்க்ஸ் " என்றுவிட்டு செல்ல , அவளை பார்த்தவன் , நீ இத்தன நாள் செஞ்சியே நான் டெய்லி நன்றி சொல்லிகிட்டு இருக்கேனா ? என ,
அவள் முகத்தில் என்ன உணர்ச்சி காட்டினாள் என அவனால் உணர முடியவில்லை.
அடுத்த நாள் அவனுக்கு சமைத்தவள் , அதை எடுத்து வைத்து கொண்டிருக்க , தன் அறையில் இருந்து வந்தவன் " குட் மார்னிங் டா " என , அவனை பார்த்தவள் , பார்க்கவே கூடாது என நினைத்தும் பார்த்து கொண்டிருந்தாள் . அவள் கண்களுக்கு அவ்வளவு அம்சமாக தெரிந்தான் அவன் . அந்த போலீஸ் உடை அவனை வேறொரு பரிணாமத்தில் காட்டியது .
அப்படியே அனைத்தையும் வைத்துவிட்டு அவனை நோக்கி வந்தவள் , மிக சிறிய இடைவெளி இருவருக்கும் இருக்கும் போது சட்டென விலகி சென்று விட , அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன் , சாப்பிட சென்றுவிட்டான்.
அவனுக்கு எதிரில் சென்று காலை சாப்பாட்டை வைத்தவள் , மதியத்துக்கு உரியதை டேபிள் மீது வைத்துவிட்டு ," சாப்பாடு " என கூறிவிட்டு தன் கல்லூரி பையை எடுத்துக்கொண்டு நகர , " என்னைய பார்த்தா உனக்கு எதுவும் சொல்லனும்னு தோணலையா ? " என்றான்.
ஓஹ் ! சாரி ! ஆல் தி பெஸ்ட் " என கூறிவிட்டு நகர , அவன் அவளை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு " எனக்கு எதுக்கு சாப்பாடு செஞ்ச மதியம் நான் வெளிய பார்த்துக்கலாம்ன்னு இருந்தேன் " என கூற ,
" நான் உன்கிட்ட வீட்டு வாடகை 4000 தான் சொன்னேன் ஆனா நீ எதுக்கு 5500 குடுக்குற ? அப்போ சமையலுக்கு தானே இருக்க முடியும் ? சோ , நான் குடுத்த காசுக்கு தான் வேலை செஞ்சிருக்கென் " என்றுவிட்டு தன் அறைக்கு சென்று விட , அவன் நொந்து போனான் எனதான் கூறவேண்டும்.
ச்ச ! ஃபர்ஸ்ட் நாள் வேலைக்கு ஆசையா போறான் ! அவனை போய் இப்படி டார்ச்சர் பண்றோமே என நினைத்தவள் , தன் அறையில் இருந்து எட்டி பார்க்க அவன் வாசலை நோக்கி சென்று கொண்டு இருந்தான்.,
அவனை வேகமாய் அழைத்தவள் , அங்கு இருந்த ஒரே சிவனை வேண்டிக்கொண்டு அவனையும் செய்ய சொல்ல , அவனும் சந்தோஷமாய் செய்துவிட்டு திரும்ப கையில் கொஞ்சம் திருநீர் வைத்திருந்தவள் "எடுத்து வெச்சுக்க " என கூறினாள் , அவளை வருத்தமாய் பார்த்தவன் " பிளீஸ் " என்க கொஞ்சமாய் எடுத்து அவனுக்கு வைத்துவிட , தாங்க்ஸ் அ லாட் " என கூறிவிட்டு அவன் செல்ல , போனவனுக்கு திருஷ்டி எடுத்தவள் , இப்பிடி இருக்கானே " என கூறிவிட்டு இரண்டு கைகளை வைத்து பறக்கும் முத்தம் ஒன்றை வைத்தாள் அவளின் அவனிற்கு..❤️
Ellam konjam vote pannunga , comment pannunga , ideas irundha sollunga , adhey maadhri korai irundhalum sollunga , naan konjam enthusiastic ah eludha help pannungalen !? Please . 💗
YOU ARE READING
என் நெஞ்சின் தீயே..!
Romance" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!