சனாவிற்கு ஜெய் வினையுடன் நேரம் அழகாய் செல்ல..ஒவ்வொரு நாளும் அவளை நினைத்தே நாட்களை ஓட்டினான் தேவ்..
அவள் எப்போது ஆன்லைன் வருவாள் என காத்திருக்க தொடங்கினான்..
இப்படியே நாட்களும் செல்ல சனாவும் ஊருக்கு வந்துவிட அவளை பார்த்தவுடன் ஓடி சென்று அவள் கையை பிடித்துக்கொண்டு நின்றான் தேவ் !!
ஆனால் அவளோ அவள் தந்தையை தேடினாள்..
டேய் லூசு ! அப்பா எங்கன்னு பார்த்தியா ?? நீ பாட்டுக்கு வந்து கைய புடிச்சிகிற..
அவுங்க வெளிய போய்ருகாங்க..இப்போ இங்க இல்ல ! அதான் உன்ன பார்த்த உடனே சந்தோஷம் தொத்திகிச்சி !
ஆன்! தொத்தும் ! போ போ ! டேய் இரு இந்த டெடி பொம்மை உனக்கு தான் ! வெச்சிக்கோ !
என்னடி எனக்கு எதுக்கு டெடி ? எப்டி வாங்குன ?
இல்ல அப்பா எதுக்கும் இருக்கட்டும் சொல்லி கொஞ்சம் பணம் குடுத்தாங்க..அதான் உனக்கு எதாச்சு வாங்கனும் தோணுச்சு.. வாங்கினேன் !
போடி பைத்தியம் ! உனக்கு வாங்க வேண்டியது தானே !
எனக்கு அத்தை மாமா வாங்கி தந்தாங்க ! விடு !
விடுமுறை முடிந்து அடுத்த வருடம் ஆரம்பிக்க..ஸ்கூல் செல்ல ஆரம்பித்தார்கள் இருவரும்..இப்படியே 11 ஆம் வகுப்பு சென்றுவிட .. 12 ஆம் வகுப்பு சென்றார்கள் !.
அன்று ஒரு மாலை சனா தேவ்விற்கு கால் செய்ய அதை துண்டித்தான் தேவ் ! இவள் திரும்பவும் அழைக்க திரும்பவும் துண்டித்தான் அவன்.. சோர்ந்தவள் வைத்துவிட்டு சென்றுவிட , இரவு 11 மணிக்கு அவள் கைபேசி அலற பதறி எடுத்தவள் என்னவென கேட்க..
இல்ல மா கூப்டியே ! இப்போ தான் ஃப்ரீ ஆனேன் !
போ தேவ் நான் பேச மாட்டேன் 2 மாசம் ஆச்சு தேவ் நம்ம ரெண்டு பேரும் பேசி ! உனக்கு என் தோணல என்கிட்ட பேசணும்னு..?!
நானா ஃபோன் செஞ்சாலும் எடுக்க மாட்டுற ?!இல்ல மா வேணும்ன்னு பண்ணல !
பிசி ஸ்கெடுள் எனக்கு ..
ஸ்கூல் முடிஞ்சு அப்பறம் டியூஷன் போகனும் ! வீட்டுக்கு வந்து பாட்டி கால் வலிக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகனும் ! தினம் இது பண்ணனும் அதான் பேசல ! சண்டேயும் டியூஷன் போகனும் அதான் டா! சாரி சாரி ஆயிரம் சாரி டா தங்கம் !!சரி போ மன்னித்தேன் பக்தா !
இவர்கள் பேச்சு நீண்டு கொண்டே செல்ல ..மனமில்லாமல் போனை அனைத்தார்கள் இருவரும்..
அடுத்த வாரம் ஒரு நாளில் சனா அவனை கூப்பிட .. எடுத்தவன்
என்னடா ?! என்ன விஷயம்.?
தேவ் ! நான் என்ஜினீயரிங் படிக்கட்டா ?
ஏண்டி நம்ம இந்தியாவுல 10 மில்லியன் பேர் எடுக்குற அதே படிப்பு ! என்னத்துக்கு உனக்கு இந்த ஆசை ?
இல்ல பயாலஜி ஃபீல்டு டா..
ஓஹ் பயோ என்ஜினீயரிங் ஆஹ் ?
ஆமா ! பின்னாடி சயன்டிஸ்ட் கூட ஆவலாம் !
எடு மா உன் இஷ்டம் !
சரி டா உனக்கு ஓகே வான்னு கேட்க தான் கூப்டன்! பை பை !
ஏண்டா அதுக்குள்ள வெச்சுட்டு போற பேசு கொஞ்ச நேரம் !
அப்டியா பேசலாம் சூப்பர் ! என கூறியவள் வளவளக்க தொடங்க..
அதை ரசிக்க ஆரம்பித்த தேவ்வுக்கு அன்று தெரியவில்லை இதே பேச்சை தாம் ஒரு நாள் வெறுத்து வேண்டாம் என கூற போகிறோம் என்று !! ..♥️
ESTÁS LEYENDO
என் நெஞ்சின் தீயே..!
Romance" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!