"வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன் , எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள் மெய் மறந்தேன்..✨
இப்படியே 10 வருடங்கள் சென்றிருக்க.,"மா , ஜஸ்ட் வந்துட்டு போ மா ! பிளீஸ் . " என கெஞ்சி கொண்டிருந்தான் அக்னி .
" உன் அப்பா தன உனக்கு கம்பனி , பெஸ்ட் பிரண்ட்ன்னு சொன்ன , அவனையே கூட்டிகிட்டு போ ! நான் எல்லாம் இனிமே உன் ஸ்கூல் மீட்டிங்க்கு வர மாட்டேன் !" என்றாள் சனா.
காக்கி உடையின் பட்டன் மாட்டிக்கொண்டே வந்த தேவ் அவளிடம் வந்து மீதி பட்டன்களுக்கு நின்றுகொள்ள , அதை போட்டு விட்டவள் அவன் பேச்சை கவனிக்க.,
அதற்குள் தேவ் ," டேய் இவ வரலனா என்ன நான் வரேன் மீட்டிங்க்கு , போ போ ஓடு " என .,
போட்டு முடித்தவள் அவன் தலையில் கொட்டி விட்டு சென்றாள்.
அன்று மாலை அக்னியின் ஸ்கூலுக்கு சென்று காரை தேவ் நிறுத்த , அங்குள்ள நிறைய பெண்கள் இவனை பார்த்து தங்களுக்குள் எதோ பேசி கொள்ள
கண்ணாடியை பார்த்த தேவ் " ச்ச ! அவ்ளோ அழகா இருக்கோம் போல " என்ன தனக்கு தானே சொல்லி கொண்டு உள்ளே சென்றான்.
அப்பாவை தூரத்தில் இருந்தே பார்த்து விட்ட அக்னி அவனிடம் வந்து " ஏன் பா பார்மல் டிரஸ்ல வந்து இருக்கலாம்ல ? " என,
" டேய் ஒரு சீன்னா இருக்குமேன்னு இத போட்டுட்டு வந்தா , நீ வேணாம் ன்னு சொல்ற ?!" சரி வா என செல்ல.,
அங்கு ஒரு பெரிய ஹால் போல் உள்ள இடத்தில் எல்லா வகுப்பு ஆசிரியர்களும் இருந்தார்கள். , உள்ளே சென்ற தேவ் சிறு குழந்தைகளின் ஆசிரியர்களை சைட் அடிக்க , எரிச்சல் ஆன அக்னி " அப்பா நீ எவ்ளோ பெரிய போஸ்ட்ல இருக்குற ஏன் பா இப்டி எல்லாம் பண்ணுற , பிளீஸ் டாடி ஸ்டாப் !" என்றான்.
" டேய் என்ன போஸ்ட் , பேஸ்ட்ன்னு , சைட் அடிக்க என்ன தகுதி வேணும் , போடா "! என்றவன் கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு ஸ்டைல்லாக நிற்க , உண்மையிலேயே அவனுக்கு இந்த வயதில் பிள்ளைகள் இருப்பார்கள் என யாராவது சொன்னால் நம்ப முடியாதது போல் தான் அவன் இருந்தான். அவனுக்கு 30 வயது தான் என சொன்னால் எல்லாரும் நம்பும்படி.
ESTÁS LEYENDO
என் நெஞ்சின் தீயே..!
Romance" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!